உடல் உஷ்ணத்தை குறைப்பது எப்படி? எளிய தீர்வு இதோ!!

0
145
#image_title

உடல் உஷ்ணத்தை குறைப்பது எப்படி? எளிய தீர்வு இதோ!!

நம்மில் பெரும்பாலானோருக்கு உடல் உஷ்ணம் அதிகம் இருக்கும்.இதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து காய்ச்சல்,மஞ்சள் காமாலை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட தொடங்கும்.உடல் சூடு அதிகம் இருக்கும் நபர்களுக்கு பருக்கள்,சருமம் வறண்டு போதல் மற்றும் ஆண்களுக்கு விந்து குறைபாடு பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம்.

*உடல் சூடு குறைய வாரத்திற்கு ஒரு முறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது அவசியம்.

*வெப்பத்தை மிக எளிதாக உள்வாங்கும் அக்ரிலிக் மற்றும் நைலான் போன்ற துணிகளை உடுத்துவதை தவிர்க்க வேண்டும்.அதற்கு மாறாக பருத்தி மற்றும் கைத்தறி துணிகளை அணிய தொடங்குவது நல்லது.

* ஐஸ்கட்டி கொண்டு உடலின் முக்கியமான இடங்களான மணிக்கட்டு,கழுத்து,நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் ஒத்தி எடுக்க வேண்டும்.இவ்வாறு செய்வதால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

*உடல் சூடு இருப்பவர்கள் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.வெந்நீர் மற்றும் சூடான நீரில் குளிப்பதைத் தவிர்க்கும்போது வெளிப்புற உடல் சூடு அதிகமாகாமல் இருப்பதை தடுக்க முடியும்.

*தினமும் 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதினால் உடல் சூடு ஏற்படுவதை கட்டுப்படுத்த முடியும்.

*அதிக நீர்ச்சத்து உள்ள தர்பூசணி,வெள்ளரி,சிட்ரஸ் பழ வகைகள் போன்றவற்றை உண்ணலாம்.அதேபோல் சுரைக்காய்,கீரைகள்,பீர்க்கங்காய் உள்ளிட்டவற்றை எடுத்து வருவது மிகவும் நல்லது.

*உடல் சூடு இருக்கும் ஆண்,பெண் இருவரும் பித்தத்தை குறைக்க கை மற்றும் கால்களுக்கு அடிக்கடி மருதாணி வைப்பது நல்லது.

*முந்தின நாள் இரவு மீதமான சத்தத்திற்கு தண்ணீர் ஊற்றி வைத்து அடுத்த நாள் காலையில் உண்டு வருவது உடல் சூடு,வயிறு எரிச்சல் அல்சர் உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்யும்.

*வாரத்தில் ஒரு இரவு தலைக்கு விளக்கு எண்ணெய் வைத்துவிட்டு உறங்குவது மிகவும் நல்லது.

*பழச்சாறு செய்து பருகுவது,சியா விதைகளை ஊறவைத்த தண்ணீரை பருகுவது போன்றவற்றை செய்வது மிகவும் நல்லது.

Previous articleசெல்போனை பார்த்து, பார்த்து கண் கூசுதா? கவலை வேண்டாம்… கண்களை குளிர்ச்சியாக்க இதை படிங்க..
Next articleஎப்போதும் இளமையாக இருக்க வேண்டுமா? அப்போ இந்த 6 பழங்களை சாப்பிட்டாலே போதும்..