திருவோணம் பண்டிகை கேரளாவில் தொடக்கம்… வீடுகளில் அத்தப்பூ கோலம் போட்ட மக்கள்!!

0
121

 

திருவோணம் பண்டிகை கேரளாவில் தொடக்கம்… வீடுகளில் அத்தப்பூ கோலம் போட்ட மக்கள்…

 

கேரளம் மாநிலத்தில் ஓணம் பண்டிகை இன்று(ஆகஸ்ட்20) முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலம் போட்டு ஓணம் பண்டிகையை வரவேற்றுள்ளனர்.

 

கேரளம் மாநிலத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகையாக ஓணம் பண்டிகை உள்ளது. தமிழ் மாதம் ஆவணியில் திருவோணம் நட்சத்திரத்தின் நாளில் இந்த ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

 

உலகத்தில் பல பகுதிகளில் வசிக்கும் கேரள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்கு சொந்த மாநிலமான கேரளம் மாநிலத்திற்கு வந்து உறவினர்களுடன் ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகின்றது.

 

ஓணம் பண்டிகை ஆவணி மாதத்தில் அஸ்தம் என்ற நட்சத்திர நாளில் தொடங்கி சித்திரை, சுவாதி, விஷாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் என்று இறுதியாக திருவோணம் நட்சத்திரத்திரம் வரை என 10 நாட்கள் இந்த ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. அதாவது முதல் நட்சத்திரங்களுக்குறிய ஒன்பது நாட்கள் முழுவதும் கேரளம் மாநில மக்கள் அத்தப்பூ கோலம் போட்டு வழிபடுவார்.

 

இறுதி நாளான திருவோணம் நட்சத்திரத்துக்கு உறிய நாளில் அத்தப்பூ கோலம் இட்டு வீடு முழுவதும் தோரணம் கட்டி அப்பளம், வடை, நிறைய வகைகளில் பொறியல், நிறைய வகைகளில் பாயாசம் என்று விருந்து வைத்து புத்தாடை உடுத்தி மகாபலி ராஜாவை வரவேற்கும் விதமாக ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

 

அதன்படி வருகிற ஆகஸ்ட் 29ம் தேதி ஓணம் பண்டிகை விமர்சியாக கொண்டாடப்படவுள்ளது. ஒணம் பண்டிகை இன்று(ஆகஸ்ட்20) தொடங்கியுள்ளதால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. குமரி மாவட்டத்திலும் மக்கள் பலரும் ஓணம் பண்டிகையை சிறப்பாக வரவேற்றுள்ளனர். தேவாளை பூ மார்க்கெட்டில் ஒணம் பண்டிகை தொடக்கம் காரணமாக மக்கள் பூ வாங்க குவிந்தனர். இதனால் அங்கும் பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.