முலாம்பழ விதையை இப்படி பயன்படுத்தினால் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இங்கு இடம் இருக்காது!!
கோடை காலத்தில் அதிகளவு உற்பத்தியாகும் பழங்களில் ஒன்று முலாம் பழம்.இதன் சதை பற்றை அரைத்து குடித்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.சதை பற்றை மட்டும் பயன்படுத்தும் நாம் அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுகிறோம்.
முலாம் பழத்தை விட அதன் விதைகளில் தான் அதிகளவு சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.வைட்டமின் ஏ,சி,இரும்பு சத்து,மெக்னீசியம்,பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் அடங்கி இருக்கிறது.இந்த விதை இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
அதுமட்டும் இன்றி செரிமானக் கோளாறு,நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஆகியவற்றை சரி செய்கிறது.முலாம் பழ விதையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)முலாம் பழ விதை
2)பால்
3)பனங்கற்கண்டு
செய்முறை:-
ஒரு கப் முலாம்பழ விதையை ஒரு வாணலியில் போட்டு சிறிது நெய் சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும்.இந்த பொடியை ஒரு பாட்டிலில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சில நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
இந்த பாலை ஒரு கிளாஸிற்கு ஊற்றி அரைத்த முலாம் பழ விதை பொடி ஒரு ஸ்பூன் அளவு போட்டு பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க வேண்டும்.