கடைகளுக்கு பெயர் பலகை வைப்பதில் பல கட்டுப்பாடுகள் இருப்பதாகவும் அவற்றில் முக்கியமான கட்டுப்பாடு தமிழில் பெயர் பலகை இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் பிறமொழி பெயர்கள் சிறிய எழுத்துக்களால் இடம்பெறலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை மீறக்கூடிய கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, சென்னை மட்டுமல்லாது மதுரை திருச்சி மற்றும் சேலம் போன்ற மாவட்டங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தந்த மாநகராட்சி தெரிவித்திருக்கிறது. தமிழக அரசு மற்றும் மாநகராட்சி தரப்பில் பதிவு பெற்று லைசன்ஸ் மூலமாக கடைகளை நடத்தக்கூடியவர்கள் தங்களுடைய கடைகளின் பெயர் பலகைகளை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் அச்சிட்டு வைத்திருப்பதாகவும் அதற்கு கீழ் தமிழ் எழுத்துக்கள் சிறிய அளவில் பொறிக்கப்பட்ட இருப்பதாகவும் குற்றங்கள் எழுந்திருக்கின்றன.
மேலும், சில கடைகளில் பெயர் பலகைகள் தமிழில் இடம்பெறவே இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் தமிழில் பெயர் பலகை பொரிக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் இருக்கும் பொழுது அவற்றை மீறக்கூடிய கடைகளின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தற்பொழுது சென்னை மாநகராட்சியில் மட்டும் 70 ஆயிரம் கடைகள் லைசன்ஸ் பெற்று நடத்தப்பட்டு வருவதாகவும் இவற்றில் இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் அல்லது பெயர்பலகைகள் சரிவர அமைக்கப்படவில்லை என்றாலும் அந்த கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.