இதை செய்தால் ஒரே இரவில் வீட்டில் உள்ள மொத்த கரப்பான் பூச்சி குடும்பமே அழிந்து விடும்!!

0
40
#image_title

இதை செய்தால் ஒரே இரவில் வீட்டில் உள்ள மொத்த கரப்பான் பூச்சி குடும்பமே அழிந்து விடும்!!

நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் பல்லி,எலி தொல்லை அதிகளவில் இருக்கும்.அதேபோல் தான் கரப்பான் பூச்சி நடமாட்டமும் உள்ளது.பொதுவாக கரப்பான் பூச்சிகள் இரவு நேரங்களில் வீட்டு சமையலறை,கழிவறை உள்ளிட்ட இடங்களில் நடமாடத் தொடங்கும்.இந்த கரப்பான் பூச்சி பிரச்சனையை ஆரம்ப நிலையிலேயே சரி செய்வது முக்கியம்.

தேவையான பொருட்கள்:-

*ஷாம்பு பாக்கெட் – 1

*வினிகர் – 1 தேக்கரண்டி

*தண்ணீர் – 1/2 டம்ளர்

*ஸ்ப்ரே பாட்டில் – 1

செய்முறை:-

முதலில் ஒரு பவுல் எடுத்துக் கொள்ளவும்.அதில் நாம் தலைக்கு உபயோகிக்கும் ஷாம்பு ஒரு பாக்கட் அளவு ஊற்றி கொள்ளவும்.

பின்னர் வினிகர் 1 தேக்கரண்டி அளவு எடுத்து அதில் கலந்து விடவும்.அடுத்ததாக தண்ணீர் 1/2 டம்ளர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இதை ஒரு ஸ்பிரேயர் பாட்டிலில் ஊற்றி வீட்டில் கரப்பான் பூச்சிகள் பதுங்கி இருக்கும் இடங்களில் ஸ்ப்ரே செய்யவும்.இவ்வாறு செய்தோம் என்றால் கரப்பான் பூச்சி தொல்லை உடனடியாக நீங்கி விடும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*பூண்டு – 10 பற்கள்

*கருப்பு மிளகு – 10

*சின்ன வெங்காயம் – 8

செய்முறை:-

முதலில் 10 சின்ன வெங்காயத்தை எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும்.பின்னர் 10 பல் பூண்டு எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும்.

அடுத்து ஒரு உரலில் 10 கருப்பு மிளகு சேர்த்து இடித்துக் கொள்ளவும்.பின்னர் இதை ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும்.

பிறகு 10 பல் பூண்டை உரலில் போட்டு நன்கு இடித்துக் கொள்ளவும்.இதையும் இடித்து வைத்துள்ள மிளகுடன் சேர்க்கவும்.

அடுத்து தோல் நீக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை இதில் சேர்த்து நன்கு இடித்து கொண்டு இதையும் அதே பவுலில் சேர்த்துக் கொள்ளவும்.பிறகு அந்த பவுலில் 1/4 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும்.

இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் கரப்பான் பூச்சிகள் பதுங்கி இருக்கும் இடங்களில் ஸ்ப்ரே செய்யவும்.இவ்வாறு செய்தோம் என்றால் கரப்பான் பூச்சி தொல்லை உடனடியாக நீங்கி விடும்.