இதை செய்தால் அரை மணி நேரத்தில் சளி தொல்லை நீங்கி விடும்! பாட்டி சொன்ன அற்புத வைத்தியம்!

0
29
#image_title

இதை செய்தால் அரை மணி நேரத்தில் சளி தொல்லை நீங்கி விடும்! பாட்டி சொன்ன அற்புத வைத்தியம்!

மழைக்காலம் வந்து விட்டாலே சளி தொல்லையும் கூடவே வந்துவிடும்.இந்த பாதிப்பை சரி செய்ய மாத்திரைகளை பயன்படுத்துவதை விட சளியை விரட்டும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி பானம் தயார் செய்து பருகுங்கள்.நல்ல பலன் கிடைக்கும்.கீழே 2 செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.எது விருப்பமோ அதை பின்பற்றுங்கள்.சளி தொல்லை ஒரே நாளில் சரியாகி விடும்.

தேவையான பொருட்கள்:-

துளசி இலைகள் – 10

ஓமம் – 1 தேக்கரண்டி

மிளகு – 1 தேக்கரண்டி

செய்முறை:-

1.அடுப்பில் ஒரு டீ பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள்.

2.அதில் மருத்தவ குணங்கள் நிறைந்த துளசி 10 முதல் 15 சேர்த்து இலைகளை சேர்த்து கொதிக்க விடவும்.மிதமான தீயில் வைத்து கொதிக்க வைத்தால் மட்டுமே அதன் சத்துக்கள் தண்ணீரில் இறங்கும்.

3.அதன் பின் ஓமம் மற்றும் மிளகு இரண்டும் ஒவ்வொரு தேக்கரண்டி எடுத்து கொதிக்கும் துளசி தண்ணீரில் சேர்த்து கொள்ளவும்.

4.இரண்டு நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைத்து அவற்றை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும்.

மற்றொரு முறை:-

தேவையான பொருட்கள்:-

*மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

*மிளகு இடித்தது – 1 தேக்கரண்டி

*இஞ்சி (சிறு துண்டுகள்) – 5 முதல் 6

*துளசி இலை – 15

*பனங்கற்கண்டு – சிறிதளவு

செய்முறை:-

1.அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள்.

2.பிறகு மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து கலக்கி கொள்ளவும்.

3.அதோடு இடித்த மிளகு மற்றும் 6 இஞ்சி துண்டுகள் சேர்த்து கொதிக்க விடவும்.

4.பின்னர் மருத்துவ குணம் நிறைந்த மூலிகை இலையான துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.

5.இதனை ஒரு கிளாஸில் வடிகட்டி அதில் தேவைப்பட்டால் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கி பருகவும்.இப்படி செய்தால் உடலில் தேங்கி கிடந்த சளிகள் கரைந்து அவை மலம் வழியாக வெளியேறி விடும்.