வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் இப்படி செய்து பருகினால் உடலில் நடக்கும் அதிசயம்!!

Photo of author

By Divya

வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் இப்படி செய்து பருகினால் உடலில் நடக்கும் அதிசயம்!!

கற்றாழை ஜூஸ் உடலிலுள்ள பல்வேறு நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது.தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் இந்த மருத்துவ குணம் கொண்ட கற்றாழை ஜூஸை குடித்து வந்தோம் எனறால் உடலில் இருக்கின்ற தேவையற்ற நச்சு கழிவுகள் மலம் வழியாக வெளியேறி உடல் வலுவாகும்.

மேலும் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையை எந்த ஒரு சிரமும் இல்லாமல் குறைக்க வைக்கும் இந்த பானம் பெண்களின் மாதவிடாய் கோளாறு,மலச்சிக்கல்,உடல் உஷ்ணம்,வயிற்று கோளாறு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை சரி செய்யும் தன்மை கொண்டது.

தேவையான பொருட்கள்:

கற்றாழை – 5 துண்டுகள்

இஞ்சி – சிறு துண்டு

எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்

செய்முறை:-

1.முதலில் கற்றாழையை தோல் நீக்கி அதில் உள்ள ஜெல்லை ஒரு பவுல் சேர்த்து கொள்ள வேண்டும்.பிறகு 3 முதல் 4 தடவை அவற்றை நன்கு அலசி எடுத்து கொள்ள வேண்டும்.

2. மிக்ஸி ஜாரில் கற்றாழை ஜெல்,சிறு துண்டு இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.

3.இவற்றை ஒரு டம்ளரில் வடிகட்டி தேவைப்பட்டால் தேன் சேர்த்து பருகலாம்.சர்க்கரை நோயாளிகள் தேனை தவிர்ப்பது நல்லது.