தினமும் இந்த பாலை குடித்து வந்தால் உடல் எடை மளமளவென அதிகரிக்கும்!!

Photo of author

By Divya

தினமும் இந்த பாலை குடித்து வந்தால் உடல் எடை மளமளவென அதிகரிக்கும்!!

Divya

Updated on:

தினமும் இந்த பாலை குடித்து வந்தால் உடல் எடை மளமளவென அதிகரிக்கும்!!

வயதிற்கு தகுந்த உடல் எடை இல்லாதவர்கள் உடல் எடையை கூட்ட கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆரோக்கிய வழியை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)வேர்க்கடலை
2)முந்திரி பருப்பு
3)தேன்
4)பால்
5)பிஸ்தா பருப்பு
6)பேரிச்சம் பழம்
7)உலர் திராட்சை

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி வேர்க்கடலை,5 முந்திரி,5 உலர் திராட்சை,5 பிஸ்தா பருப்பு,3 பேரிச்சம் பழம் போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற வைக்கவும்.

மறுநாள் காலையில் ஊறவைத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது பால் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் அரைத்த பேஸ்டை சேர்த்து கொதிக்க விடவும்.

பின்னர் நறுக்கிய வாழைப்பழ துண்டுகளை போட்டு ஒரு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.இந்த பாலை ஒரு கிளாஸிற்கு ஊற்றி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து கலக்கி குடித்து வந்தால் உடல் எடை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கும்.