வாழைப்பழம் சாப்பிட கூட நேரம் காலம் இருக்கு!! இதை எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது என்று தெரியுமா?

0
122
#image_title

வாழைப்பழம் சாப்பிட கூட நேரம் காலம் இருக்கு!! இதை எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது என்று தெரியுமா?

வாழைப்பழம் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழ வகை ஆகும்.இதில் தேன் வாழை,மலை வாழை,பச்சை வாழை,ரஸ்தாலி,பூவன்,செவ்வாழை என்று பல வகைகள் இருக்கிறது.பூஜை பழங்களில் முக்கிய இடத்தை வகிப்பது இந்த வாழைப்பழம் தான்.

வாழைப்பழத்தில் பொட்டாசியம்,தாதுக்கள்,நார்ச்சத்துக்கள்,மெக்னீசியம்,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.வாழைப்பழம் செரிமான பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.மலிவு விலை பழமான வாழையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண்,அல்சர்,மலச்சிக்கல் உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.

தினமும் ஒரு வாழை பழம் சாப்பிடுவதை வழக்கமாக்கி கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.அதிலும் செவ்வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.பைல்ஸ் பிரச்சனை இருப்பவர்கள் வாழைப்பழத்தை சூடனான பாலில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

இவ்வாறு வாழைப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு பல வித நன்மைகள் கிடைக்கும்.ஆனால் இதை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.

வாழைப்பழத்தை காலை நேரத்தில் சாப்பிட்டால் வயிற்றில் தேங்கிய மலம் உடனடியாக வந்துவிடும் என்று நினைத்து காலையில் அதிகம் வாழைப்பழம் சாப்பிடுகிறார்கள்.ஆனால் காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் அல்சர்,குடல் புண் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

இரவு நேரம் தான் வாழைப்பழம் சாப்பிட உகந்த நேரம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.இரவில் ஒரு கிளாஸ் பால் குடித்து வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது மருத்துவர்கள் கருத்து.இனி இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.