இந்த பொடியை பாலில் கலந்து குடித்தால் இரத்த சோகை நீங்கும் இரத்தம் ஊரும்!!

Photo of author

By Divya

இந்த பொடியை பாலில் கலந்து குடித்தால் இரத்த சோகை நீங்கும் இரத்தம் ஊரும்!!

இன்று இரத்த சோகையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது.இரத்த சோகை ஏற்பட்டால் கை, கால் வீங்கிவிடும்.உடல் சோர்வு,அடிக்கடி தூக்கம் வருதல் ஏற்படும்.

இந்த இரத்த சோகை பாதிப்பில் இருந்து முழுமையாக மீள இரத்த உற்பத்தியை அதிகரிக்க நெல்லிக்காய்,கீழா நெல்லி மற்றும் கரிசலாங்கண்ணியை பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)நெல்லிக்காய்
2)கீழா நெல்லி
3)கரிசலாங்கண்ணி

செய்முறை:-

ஒரு கப் பெரிய நெல்லிக்காய் எடுத்து விதை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.இதை வெயிலில் போட்டு நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

அதேபோல் ஒரு கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி இலை மற்றும் ஒரு கைப்பிடி அளவு கீழா நெல்லி செடியை வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

இந்த மூன்று பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும். இதை ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

ஒரு கிளாஸ் சூடான பாலில் அரைத்த பொடி ஒரு ஸ்பூன் போட்டு கலந்து குடிக்கவும்.இவை இரத்த சோகைக்கு தீர்வாக இருப்பதோடு உடலில் இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.