2026 ஆம் ஆண்டு தமிழக்தில் பாமக ஆட்சி நடக்கும் – அன்புமணி ராமதாஸ் உறுதி!!

0
134
#image_title

2026 ஆம் ஆண்டு தமிழக்தில் பாமக ஆட்சி நடக்கும் – அன்புமணி ராமதாஸ் உறுதி!!

வருகின்ற 2026 ஆம் ஆண்டில் பாமக ஆட்சி அமையும் என்றும்,பாமக ஆட்சிக்கு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் தொடர்ந்து பேசி வருகிறார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் களப் பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் பங்கேற்று அவர் மேடையில் பேசுகையில்,வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பாட்டாளி மக்கள் கட்சி இப்பொழுதே தயாரான நிலையில் இருக்கின்றது.நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் களப்பணியில் தீவிரமாக செயல்பட வேண்டும்.
பொதுமக்களை தொடர்ந்து சந்திப்பது,அவர்களின் குறைகளை கேட்டறிவது என்று அதற்கான முயற்சிகளில் இறங்கினால் தான் வாக்காளர்களின் ஆதரவை நாம் முழுமையாக பெற முடியும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் கடந்த மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் பாமக எதனால் வெற்றி வாய்ப்பை இழந்தது என்பதை தீர ஆராய்ந்து அதற்கேற்ப நம் பாமக கட்சி வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் மீண்டும் வெற்றி பெற வேண்டும்.

தமிழக மக்களின் நலனுக்காக மதுவுக்கு எதிரான தொடர் போராட்டத்தை நடத்தி மது இல்லா தமிழகம் என்ற நிலையை கொண்டு வருவோம்.நமது பாமக தொடர்ந்து மக்களை சந்தித்து வருவதால்
அவர்களின் மனங்களில் ஏற்பட்டு வரும் பெரிய மாற்றத்தை நம்மால் உணர முடிகிறது.இதன் மூலம் வருகின்ற 2026 சட்டப் பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தில் பாமக ஆட்சி நடக்கும் என்பது உறுதியாக தெரியவருகிறது.மக்கள் நமக்கு கொடுக்க போகின்ற வெற்றிக்கு செயலாற்ற நாம் அனைவரும் தயாராக வேண்டுமென்று கூறினார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த களப் பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்,இளைஞர் சங்க மாவட்ட செயலாளர், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Previous articleஅசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் திருமணம் முடிந்தது!! ரசிகர்கள் வாழ்த்து!!
Next articleபொங்கல் பண்டிகைக்கான இரயில் டிக்கெட் முன்பதிவு!!! இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று இரயில்வே அறிவிப்பு!!!