#IPL2024 | சரவெடியாய் பஞ்சாப்! சமாளிக்குமா சிஎஸ்கே! அனல் பறக்கப்போகும் ஆட்டம்!

0
122
csk vs pbks
csk vs pbks

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்ள உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஆடிய 9 ஆட்டங்களில் 5 வெற்றி, தோல்வி என 10 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

அதிரடியாக ஆடி வெற்றிகளை குவித்து வந்த சன்ரைசஸ் ஹைதராபாத் அணியை, 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியை சென்னை அணி பதிவு செய்துள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணியை பொருத்தவரை 9 லீக் ஆட்டங்களில் 3 வெற்றி, 6 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.

தொடர்ச்சியாக நான்கு தோல்களை சந்தித்த பஞ்சாப் அணி கடைசி லீக்காட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயித்த 262 ரன்கள் இமாலய இலக்கை, 8 பந்துகள் மீதம் வைத்து சாதனை வெற்றியை பதிவு செய்தது.

பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ 48 பந்துகளில் 108 ரன்களை எடுத்து அசத்தியிருந்தார். இதேபோல் பஞ்சாப் அணி வீரர்கள் பிரப்சிம்ரன் 20 பந்துகளில் 54 ரன்களையும், ஷசாங்க் சிங் 28 பந்துகளில் 68 ரன்களையும் எடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

இப்படி இரு அணிகளும் அசாத்தியமான ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளதால், இன்று நடக்கவுள்ள ஆட்டம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் பரபரப்பாக நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொருத்தவரை இன்று நடக்கும் போட்டி மட்டுமல்லாமல், அடுத்து வரும் ஆட்டங்களிலும் வெற்றியை பதிவு செய்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பஞ்சாப் அணிக்கும் இதே ஒரு நிலை தான்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தை பொருத்தவரை பேட்டிங்க்கு அவ்வளவு சாதகமாக இருக்காது. எந்த அணி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துகிறதோ அந்த அணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளthu.

பஞ்சாப் அணியின் பந்துவீச்சு வலுவில்லாமல் இருப்பதால் சென்னை அணி தனது பந்துவீச்சின் மூலம் வெற்றியை பதிவு செய்ய அதிக வாய்ப்புள்ளதாகவே கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் சென்னை அணிக்கு ஹோம் டவுன் மேட்ச் என்பதால் உள்ளூர் ரசிகர்களின் பேராதரவு வெற்றிக்கு வலு சேர்க்கும்.