ஐ.பி.எல். : கோப்பையை வெல்லப்போவது யார்? மும்பை அணியா? சென்னை அணியா? – பிரெட்லீ விளக்கம்

Photo of author

By Parthipan K

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரையும் தள்ளிவைக்கப்பட்டது. இருப்பினும் அவ்வபோது ஐ.பி.எல். தொடருக்கான தேதி மாற்றி மாற்றி ஒத்திவைக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வந்தது. ஒரு கட்டத்தில் ஐ.பி.எல். தொடர் நடக்குமா என்ற கேள்வியும் எழுந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிக்கப்பட்டது. இதற்காக வீரர்கள் இந்த மாதத்தில் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைந்திருக்கும் கிரிக்கெட் மைதானம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பொருத்தமானதாக இருக்கும்.  ஏனெனில் அந்த அணியில் நிறைய வீரர்கள் நீண்ட காலமாக தக்க வைக்கப்பட்டு வருகிறார்கள்.  ‘சென்னை சூப்பர் கிங்ஸ் சற்று வயது முதிர்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களை கொண்டு இருப்பது அந்த அணிக்குரிய பலமாகும்.
மேலும் அமீரகத்தில் வெயிலின் அளவு அதிகமாக இருக்கும் என்பதால் பந்து நன்கு சுழன்று திரும்பும். எனவே அங்குள்ள ஆடுகளங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உள்ளூரில் இருப்பதை விட அதிகமாக சிறப்பான உணர்வை கொடுப்பதாக இருக்கும். எனவே இந்த ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது’ என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடியவருமான பிரெட்லீ கூறியுள்ளார்.