தொண்டை கரகரப்பாக இருக்கின்றதா! ஆடாதோடை கசாயம் வச்சு குடிங்க!!
நம்மில் பலருக்கும் பொதுவாக ஏற்படும் தொண்டை கரகரப்பை குணப்படுத்த உதவும் ஆடாதோடை கசாயம் செய்ய என்னென்ன பொருட்கள் தேவை எவ்வாறு செய்வது என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
ஆடாதோடை இலை பொதுவாக மூலிகை பொருள் ஆகும். இந்த ஆடாதோடை இலை வந்து நம் உடலில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளை சரி செய்கின்றது. சளி இருமல் போன்ற தொற்று நோய்களை எளிதில் விரட்டி விடும். இந்த ஆடாதோடை இலையை பயன்படுத்தி கசாயம் வைத்துக் குடிக்கும் பொழுது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. தொண்டை கரகரப்புக்கு தேவையான ஆடாதோடை கசாயம் எவ்வாறு செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஆடாதோடை இலை கசாயம் செய்ய தேவையான பொருட்கள்…
* உலர்த்திய ஆடாதோடை இலைகள்
* அதிமதுரம்
* திப்பிலி
* மிளகு
ஆடாதோடை இலை கசாயம் செய்யும் முறை…
முதலில் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஒரு பாத்திரம் வைத்துக் கொண்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
தண்ணீர் சிறிதளவு குதித்த பின்னர் ஆடாதோடை இலைகள் மூன்று இதில் சேர்க்க வேண்டும். பின்னர் மிளகு 2, திப்பிலி 2, அதிமதுரம் ஒரு துண்டு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நன்கு குதிக்க விட வேண்டும். ஏனெனில் இதில் சேர்த்திருக்கும் பொருட்களின் சத்துக்கள் அனைத்தும் தண்ணீரில் இறங்கும். சிறிது நேரம் கழித்து இறக்கி வைக்கவும். இதோ ஆடாதோடை இலை கசாயம் தயார்.
இந்த காயத்தை வடிகட்டி இளஞ்சூடாக ஆற வைத்து குடிக்கலாம். இதை செய்யும் பொழுது சளி, இருமல் பிரச்சனை குணமடைகின்றது. மேலும் தொண்டை கரகரப்பு பிரச்சனை குணமாகின்றது.