நுரையீரலை வலிமைப்படுத்த வேண்டுமா! அப்போது இந்த மூன்று ஆசனங்களை செய்யுங்க!!

0
32
#image_title

நுரையீரலை வலிமைப்படுத்த வேண்டுமா! அப்போது இந்த மூன்று ஆசனங்களை செய்யுங்க!!

நமது நுரையீரலை வலிமைப்படுத்த செய்ய வேண்டிய மூன்று ஆசனங்கள் என்னென்ன அதை எப்படி செய்வது அதனால் என்னென்ன பயன்கள் கிடைக்கின்றது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நாம் மூச்சு விடுவதற்கு தேவையான முக்கியமான உறுப்பாக நுரையீரல் உள்ளது. இந்த நுரையீரலை நாம் வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும். நுரையீரல் ஆரோக்கியமாக வைக்க மருந்து மாத்திரைகள்தான் எடுக்க வேண்டும் என்பது இல்லை. இந்த பதிவில் கூறப்பட்டுருக்கும் மூன்று ஆசனங்களை செய்தாலே நுரையீரல் வலிமை படுத்த முடியும்.

நுரையீரல் வலிமைபடுத்தக் கூடிய ஆசனங்கள்…

1. புஜங்காசனம்
2. உஷ்ட்ராசனம்
3. சக்கராசனம்

புஜங்காசனம் செய்யும் முறை…

தரைவிரிப்பில் குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் உள்ளங்கைகளை தரையில் ஊன்றி கொள்ள வேண்டும். பின்னர் மூச்சை இழுத்து மெதுவாக வெளியே விட்டபடி தலையை நிமிர செய்ய வேண்டும். வயிறு முதல் கால்கள் வரை தரையில் இருக்கும்படி வைக்க வேண்டும். சுவாசத்தை மெதுவாக இழுத்துக் கொண்டு மூச்சை மெதுவாக விட்டுக்கொண்டே கீழே இறங்க வேண்டும். இந்த நிலையில் 3 முதல் 6 விநாடிகள் இருந்துவிட்டு பழைய நிலைக்குத் திரும்பலாம்.

புஜங்காசனம் நன்மைகள்…

* புஜங்காசனம் செய்வதால் நுரையீரல் நுரையீரல் இயக்கத்தை மேம்படுத்தி சுவாசித்தல் சீராக்குகின்றது.

* புஜங்காசனம் செய்வதால் நுரையீரலில் உள்ள காற்று முடிச்சுகளில் அழுக்குகள் கிருமிகள் எதுவும் தங்காது.

* புஜங்காசனம் செய்யும்பொழுது தண்டுவடம் மற்றும் முதுகெலும்பு ஆகியவை வலிமை பெறுகின்றது.

* புஜங்காசனம் செய்வதால் உடல் சோர்வு நீங்குகின்றது.

* பெண்கள் புஜங்காசனம் செய்யும் பொழுது அவர்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனையை சரி செய்கின்றது.

* புஜங்காசனம் செய்வதால் சினைப்பைகளில் உள்ள கட்டிகள் கரைகின்றது.

உஷ்ட்ராசனம் செய்யும் முறை…

ஒரு தரை விரிப்பில் கால்களை நீட்டித்து நேராக உட்கார வேண்டும். பின்னர். உள்ளங்கைகளை இரண்டு தொடைகளுக்கும் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் இரண்டு கால்களின் முழங்கால்களை மடித்து பாதங்களை தடைக்கு கீழ் பகுதியில் இருக்குமாறு வஜ்ராசனத்தில் இருக்கும்படி உட்கார வேண்டும். அதன் பின்னர் முட்டி போடுவது போல உடலை நேராக வைத்து நிமிர வேண்டும். பின்னர் உடலை பின்புறமாக வளைத்து இரண்டு உள்ளங்கைகளையும் உள்ளங்கால்களின் மேல் ஊன்றிக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் 5 வினாடிகள் இருந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இந்த ஆசனத்தை 2 முதல் 4 வரை செய்ய வேண்டும்.

உஷ்ட்ராசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்…

* உஷ்ட்ராசனம் செய்யும் பொழுது நுரையீரல் இயக்கம் சீரடைகின்றது.

* உஷ்ட்ராசனம் செய்வதால் சுவாசக்கோளாறுகள் குணமடைகின்றது.

* மன அழுத்தத்தை குறைக்க வேண்டும் என்றால் உஷ்ட்ராசனம் செய்யலாம்.

* உஷ்ட்ராசனம் செய்யும் பொழுது மார்பு விரிவடைகின்றது.

* முதுகுவலி, இடுப்பு வாயுப் பிடிப்பு, இரைப்பைக் கோளாறுகள் ஆகியவை அனைத்தும் உஷ்ட்ராசனம் செய்யும் பொழுது குணமடைகின்றது.

* உஷ்ட்ராசனம் செய்வதால் முதுகுத் தண்டு வளையும் தன்மை பெறுகின்றது.

* உஷ்ட்ராசனம் செய்வதால் மூளைக்கு இரத்த ஓட்டம் சீராகின்றது

சக்கராசனம் செய்யும் முறை…

தரை விரிப்பில் மல்லாந்து நேராக படுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியை மெல்ல உயர்த்த வேண்டும். அவ்வாறு இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியை உயர்த்தும் பொழுது கைகளை பின்னோக்கி ஊன்றி உள்ளங்கை தரையில் படும்படி வைக்க வேண்டும். இந்த நிலையில் சுவாசம் சீராக இருக்க வேண்டும். மேலும் 5 வினாடிகள் இருந்துவிட்டு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். இந்த ஆசனத்தை 3 முதல் 5 வரை செய்யலாம்.

சக்கராசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்…

* சக்கராசனம் செய்வதால் உடலில் நுரையீரலில் திறனை அதிகரிக்க உதவி செய்கின்றது.

* சக்கராசனம் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவி செய்கின்றது.

* உடலின் ஆக்சிஜன் சுழற்சியை அதிகரிக்கச் செய்கின்றது.

* சக்கராசனம் தோள்பட்டை தடைகளையும் முதுகுப் பகுதியின் வலிமையையும் நெகிழ்வுத் தன்மையையும் அதிகரிக்கின்றது.