கீழாநெல்லியுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை ஓரிரு தினங்களில் குணமாகும்!!
உயிர்கொல்லி நோய்களில் ஒன்றான மஞ்சள் காமாலையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம்.
மஞ்சள் காமாலை அறிகுறிகள்:-
*வாந்தி
*வயிறு குமட்டல்
*பசியின்மை
*உடல் சோர்வு
*மூட்டு வலி
*காய்ச்சல்
*இரத்த கசிவு
மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் நாட்டு வைத்தியம்:-
தேவையான பொருட்கள்:-
1)கீழாநெல்லி
2)சீரகம்
செய்முறை:-
ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி மற்றும் ஒரு ஸ்பூன் சீரகத்தை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் அரைத்த கீழாநெல்லி விழுதை சேர்த்து மிதமான தீயில் நன்கு காய்ச்சிக் கொள்ளவும்.
இந்த நீரை ஆறவிட்டு காலை,மாலை என இருவேளை குடித்து வந்தால் மஞ்சள் காமால சில தினங்களில் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)கீழாநெல்லி
2)சுக்கு
3)மிளகு
4)சீரகம்
5)சோம்பு
6)மஞ்சள்
செய்முறை:-
ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி,ஒரு ஸ்பூன் சோம்பு,1/4 ஸ்பூன் மிளகு மற்றும் ஒரு ஸ்பூன் சீரகத்தை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் அரைத்த கீழாநெல்லி விழுதை சேர்த்து மிதமான தீயில் நன்கு காய்ச்சிக் கொள்ளவும்.பிறகு அதில் மஞ்சள் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
இந்த நீரை ஆறவிட்டு காலை,மாலை என இருவேளை குடித்து வந்தால் மஞ்சள் காமால சில தினங்களில் குணமாகும்.