வளரும் குழந்தைகளுக்கு ஹெல்த் மிக்ஸ் பவுடர்!! இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது!!

0
125
#image_title

வளரும் குழந்தைகளுக்கு ஹெல்த் மிக்ஸ் பவுடர்!! இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது!!

இன்றைய உலகில் குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவது அதிகரித்த வண்ணம் உள்ளது.வளரும் குழந்தைகளின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க ஹெல்த் மிக்ஸ் பவுடர் வீட்டில் தயாரித்து கொடுப்பது நல்லது.

தேவையான பொருட்கள்:-

1)சிகப்பு அரிசி – 200 கிராம்
2)கம்பு – 150 கிராம்
3)வேர்க்கடலை – 200 கிராம்
4)பாதாம் – 150 கிராம்
5)பிஸ்தா – 150 கிராம்
6)கருப்பு உளுந்து – 150 கிராம்
7)கருப்பு கொண்டைக்கடலை – 100 கிராம்
8)மக்கா சோளம் – 150 கிராம்
9)கோதுமை – 50 கிராம்
10)கருப்பு எள் – 50 கிராம்

செய்முறை:-

முதலில் அடுப்பில் ஒரு வாணலி வைத்துக் கொள்ளவும்.அதில் பாதாம்,பிஸ்தா,வேர்க்கடலை ஆகியவற்றை முதலில் மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் கம்பு,கோதுமையை போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.

பின்னர் மக்கா சோளம்,கருப்பு கொண்டை கடலை,கருப்பு உளுந்து போட்டு வறுத்து ஏற்கனவே வறுத்த பொருட்களில் போட்டுக் கொள்ளவும்.

இறுதியாக சிகப்பு அரிசி மற்றும் கருப்பு எள் சேர்த்து வறுக்கவும்.வறுத்த அனைத்து பொருட்களையும் நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைஸாக அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

இந்த பொடியை ஒரு சல்லடையில் கொட்டி சளித்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு ஈரமில்லாத டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 1/2 டம்ளர் பால் ஊற்றி கொதிக்க விடவும்.பின்னர் அதில் அரைத்த பொடி 1 1/2 தேக்கரண்டி அளவு போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.

பால் + ஹெல்த் மிக்ஸ் பவுடர் நன்கு வெந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி குழந்தைகளுக்கு ஆறவிட்டு கொடுக்கவும்.