இன்று இங்கெல்லாம் பவர் கட்!

0
206

தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட இருக்கின்ற ஒரு செய்தி குறிப்பில் தமிழ்நாட்டில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்வாரிய பராமரிப்பு பணியின் காரணமாக, கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்ற பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும் என்று தெரிவித்திருக்கிறது. மாலை 5 மணிக்குள் இந்த பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த உடன் மின் வினியோகம் கொடுக்கப்படும் என்றும் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

அதன்படி கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இருக்கின்ற சீனிவாசநகர், அழகம்மாள் நகர், கிருஷ்ணா நகர், கனகசபை காலனி, பெருமாள் கோவில் தெரு மற்றும் அதனை சுற்றி இருக்கின்ற பகுதிகள் மற்றும் கிண்டி, வில்லிவாக்கம், அடையாறு, பெரும்பாக்கம், கேகே நகர், உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

திருச்சி மாவட்டம் கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், மார்வாடி வயிறு, செட்டிபாளையம், பி. மேட்டூர், s.n. புதூர், புதூர் சோபனபுரம், சொக்கநாதபுரம், பச்சைமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தாபுரம், மருவத்தூர், செல்லிபாளையம், செங்காட்டுப்பட்டி, பெருமாள் பாளையம், T.முருங்கப்பட்டி, T. மங்கப்பட்டி T. பாதர் பேட்டை உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடைபடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Previous articleஅடுத்த இரண்டு தினங்களில் கன மழை பெய்ய இருக்கும் முக்கிய மாவட்டங்கள்!
Next articleபங்குச் சந்தை விடுமுறை!! பிஎஸ்இ, என்எஸ்இ இன்று மூடப்பட உள்ளன!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here