தொடர்ந்து உயரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

0
188

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றது. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் நடைமுறை இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களாக இருந்து வரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், போன்ற எண்ணெய் நிறுவனங்களால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. நோய்தொற்று தாக்கம் அதிகம் இருந்ததால் கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், ஜூன் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன எண்ணெய் நிறுவனங்கள்.

இந்த சூழ்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்திருக்கிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து 97 ரூபாய் 69 காசிற்கும் டீசல் ஒரு லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து 96 ரூபாய் 92 காசுக்கும் விற்பனை ஆகி வருகிறது.

Previous articleவெளியூரில் வாழ வந்த கள்ளக்காதல் ஜோடி! உயிரிழந்த பரிதாபம்!
Next articleசெல்பி மோகத்தால் உயிரிழந்த மருத்துவ மாணவி! பெற்றோருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here