இதை மட்டும் தடவுங்க சுளுக்கு இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போகும்!!

0
91

இதை மட்டும் தடவுங்க சுளுக்கு இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போகும்!!

நாம் ஏதேனும் வேலைகளை செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று எதிர்பாராத விதமாக கை மற்றும் கால்களில் சுளுக்கு ஏற்பட்டு விடும். அதாவது சுளுக்கு என்பது நரம்புகள் உடைய தசை நாறுகள் பாதிக்கப்படுவது தான். அவ்வாறு ஏற்படும் சிறுகை நாம் எளிமையான முறையில் வீட்டிலிருந்து சரி செய்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

ஜாதிக்காய்

பால்

செய்முறை:

ஜாதிக்காய் கொட்டையை எடுத்து அதனுடன் சிறிதளவு பால் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அரைத்து எடுத்துக்கொண்ட ஜாதிக்காயை அடுப்பில் வைத்து நன்றாக சூடு செய்து கொள்ள வேண்டும்.

இதனை அடுத்து சூடு செய்த ஜாதிக்காய் ஆனது கை பொறுக்கும் அளவிற்கு வந்ததும் சிலுக்கு உள்ள இடத்தில் தடவ வேண்டும்.

ஒரு நாள் முழுவதும் இந்த ஜாதிக்காய் பேஸ்ட் ஆனது சுளுக்கு உள்ள இடத்தில் இருக்க வேண்டும்.

ஒரு நாள் கழித்து சுடு தண்ணீரில் அந்த இடத்தை கழுவ நல்ல மாற்றத்தை காண முடியும்.

இதுபோல விடாமல் மூன்று நாட்கள் தொடர்ந்து செய்து வர சுளுக்கு குணமாகும்.

2வது முறை:

நம் வீட்டில் இருக்கும் பூண்டை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதில் கல் உப்பு சேர்த்து நன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த இடித்த பூண்டை சுளுக்கு இருக்கும் இடத்தில் தடவ வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தாலும் சுளுக்கானது விரைவில் குணமாகும்.

3வது முறை:

தேவையான பொருட்கள்:

முருங்கை பட்டை

பெருங்காயம்

கடுகு

சுக்கு

செய்முறை:

தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இதனை அடுபில் வைத்து சூடு செய்ய வேண்டும்.

மேற்கொண்டு சுளுக்கு இருக்கும் இடம் தேவை வந்தால் நல்ல மாற்றத்தை காண முடியும்.

தற்பொழுது கூறியுள்ளவற்றில் எந்த குறிப்பை எடுத்துக்கொண்டு நாம் பின்பற்றினாலும் சுளுக்கானது விரைவில் குணமாகும்.