மாதுளம் பழத்தை சாப்பிட்டு தோளை தூக்கி வீசிவிடுவீர்களா.. அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான் !!

0
74

மாதுளம் பழத்தை சாப்பிட்டு தோளை தூக்கி வீசிவிடுவீர்களா… அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்…

மாதுளம் பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் உள்ளே உள்ள தோலை நாம் தூக்கி வீசி விடுகிறோம். அவ்வாறு தூக்கி வீசப்படும் தோலில் நிறைய சத்துக்கள், நிறைய நன்மைகள் உள்ளது. இந்த மாதுளம் பழத் தோலில் என்ன சத்துக்கள் உள்ளது என்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நாம் எல்லாரும் மாதுளம் பழத்தை பிரித்து அதில் உள்ள சிறிய சிவப்பு வண்ண பழங்களை சாப்பிடுகிறோம். அதன் நடுவே உள்ள வெள்ளை நிறத் தோலை தூக்கி வீசி விடுகிறோம். இந்த தோலை நாம் பயன்படுத்தும் பொழுது நமது உடலுக்கு தேவையான பல சத்துக்கள் இந்த மாதுளம் பழத் தோலில் இருக்கின்றது.

மாதுளம் பழத் தோலில் வைட்டமின் சி, வைட்டமின் கே, இரும்புச்சத்து, புரதச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளது. மேலும் மாதுளம் பழத் தோலில் அதிகளவு ஆன்டி ஆகிசிடன்ட் சத்துக்களும் ஊட்டச்சத்துக்களும் உள்ளது. இந்த மாதுளம் பழத் தோலை நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது என்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

மாதுளம் பழத் தோல் மூலம் கிடைக்கும் நன்மைகள்…

* மாதுளம் பாழத் தோலை சர்க்கரை.நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து விடுகின்றது.

* உடலை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் மாதுளம் பழத் தோலை சாப்பிட வேண்டும். மாதுளம் பழத் தோலை சாப்பிடும் பொழுது நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறைக்கப்படுகின்றது. இதனால் உடல் எடை குறைகின்றது.

* ரத்த அழுத்தம் உள்ள நபர்கள் அனைவரும் மாதுளம் பழத் தோலை சாப்பிட வேண்டும். இதனால் உயர் ரத்த அழுத்தம் குறைக்கப்படுகின்றது. மேலும் இரத்த அழுத்தம் சீராக்கப்படுகின்றது.

* மாதுளம் பழத் தோலை எடுத்து வெயிலில் காயவைத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை பயன்படுத்தி தேநீர் தயாரித்து குடிக்கலாம். அல்லது கஷாயம் செய்து குடிக்கலாம். அல்லது சூடான தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

* மாதுளம் பழத் தோலின் பொடியை நாம் சருமப் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தலாம். அதாவது மாதுளம் பழத் தோலின் பொடியில் சிறிதளவு தேன் சேர்த்து கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகம் பொலிவு பெறும்.

* இந்த மாதுளம் பழத் தோலை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது மறதி நோய் வராமல் இருக்கும்.