நோயின்றி ஆரோக்கியமாக வாழ இந்த 10 வழிகளை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்!

0
71
#image_title

நோயின்றி ஆரோக்கியமாக வாழ இந்த 10 வழிகளை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்!

இன்றைய நவீன உலகில் நம் முன்னோர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் அனைத்தும் காணமல் போய்விட்டது.பசிக்காக உண்ட நாம் தற்பொழுது ருசிக்காக உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் உணவுகளை உண்டு வருகிறோம்.இதனால் எளிதில் நோய் பாதிப்பிற்கு ஆளாகி விடுகிறோம்.வாழ்க்கை,உணவு முறை மாறினாலும் சில எளிய வழிகளை தொடர்ந்து கடைபிடித்து வந்தோம் என்றால் நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.

ஆரோக்கியமாக வாழ 10 வழிகள்:

1.தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்.இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு சரும,மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் நீங்குகிறது.

2.ஒரு வாரத்தில் குறைந்தது 150 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.அதனோடு வெறுங்காலில் புற்கள் மீது நடப்பதினால் மன அழுத்தம்,அழற்சி உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கும்.

3.தயிர்,முளைகட்டிய பயிறு,சாலட்,நட்ஸ் போன்ற ஆரோக்கியமான பொருட்களில் ஸ்னாக்ஸ் செய்து சாப்பிடலாம்.

4.உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை வலுவாக வைத்திருக்க குறைந்தது 8 மணி நேர தூக்கம் அவசியமான ஒன்று.

5.ஒரு நாளைக்கு உணவில் 1 ஸ்பூன் உப்பு மட்டும் தான் சேர்த்து கொள்ள வேண்டும்.சோடியம் அதிகம் உள்ள சோயா சாஸ்,உணவுகள் மற்றும் ஸ்னாக்ஸ் வகைகளை தவிர்ப்பதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தின் அபாயத்தையும் குறைக்க முடியும்.

6.நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ள பழங்களை அன்றாட உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் திடீரெனே உயரும் இன்சுலின் அளவை குறைத்து,நீண்ட நேரத்திற்கு உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும்.இதனால் உடலுக்கு தேவையற்ற கெடுதல் தர கூடிய பொருட்களை உண்ணாமல் இருக்க முடியும்.

7.நார்ச்சத்து,கால்சியம்,புரதம் நிறைந்த பச்சை காய்கறிகள்,பழரசம் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம்.இது இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

8.வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி,நாட்டு சர்க்கரை,வெல்லம்,பனங்கற்கண்டு போன்றவற்றை உணவில் பயன்படுத்தலாம்.இது நம் இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

9.நீங்கள் செய்யும் வேலைக்கு ஏற்ற கலோரி உடைய உணவுகளை உண்பது நல்லது.இதனால் உண்ணும் உணவு நீங்கள் செய்யும் வேலைக்கான ஆற்றலாக மாறும்.இதனால் உடலில் கொழுப்பு சேராமல் எடை அதிகரிப்பை தவிர்க்க முடியும்.

10.நாம் உண்ணும் உணவை ஸ்பூன் பயன்படுத்தி உண்பதை விட கைகளால் சாப்பிடும் போது நேர்மறையான எண்ணங்கள் அதிகளவில் உருவாகி நம் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும்.