உள்மூலம் வெளிமூலம் சில தினங்களில் குணமாக இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!
மூல நோய் 40 வயது கடந்தவர்களை தான் அதிகம் பாதிக்கும். ஆனால் இன்றைய மோசமான வாழ்க்கை முறையால் இளம் வயதினர் கூட இந்த பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர். மூல நோயில் உள்மூலம், வெளிமூலம் என்று இரு வகைகள் இருக்கின்றது.
இதில் உள்மூலம் மலக்குடலுக்குள் வரும் பாதிப்பாக உள்ளது. அதேபோல் வெளிமூலம் ஆசனவாய் பகுதியில் வரக் கூடியவையாக இருக்கின்றது. இந்த மூல நோய் பாதிப்பால் ஆசனவாய் பகுதியில் அதிகப்படியான வலி, அரிப்பு, எரிச்சல், மலம் வெளியேற்றும் போது வலி, மலத்துடன் இரத்தம் வெளியேறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
தீர்வு 01:
கற்றாழை மடலுக்குள் இருக்கும் ஜெல்லை எடுத்து தண்ணீர் போட்டு அலசி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த கற்றாழை சாறை ஆசனவாய் பகுதியில் தடவி வந்தால் மூலம் குணமாகும்.
தீர்வு 02:
ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இவ்வாறு செய்வதினால் பைல்ஸ் புண்கள் ஆறிவிடும்.
தீர்வு 03:
காலையில் எழுந்த உடன் ஒரு கிளாஸ் வெந்தயம் ஊறவைத்த நீரை குடித்து வரவும். இதனால் மலக்குடலில் ஏற்பட்டுள்ள மூலம் விரைவில் குணமாகும்.