இடுப்பிற்கு கீழ் முடியின் நீளம் இருக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்கள்!

0
114
#image_title

இடுப்பிற்கு கீழ் முடியின் நீளம் இருக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்கள்!

பெண்களை பொறுத்தவரை கூந்தல் கருமையாகவும், நீளமாகவும் இருக்க வேண்டும் என்று ஆசைக் கொள்வார்கள். ஆனால் இன்றைய உலகில் அவை நடப்பது அவ்வளவு எளிதல்ல. சுற்றுச்சூழல் மாசு, ஆரோக்கியமான தண்ணீர், உணவு, கெமிக்கல் ஷாம்பு போன்ற பல காரணங்களால் தலை முடி உதிர்வு அதிகளவு ஏற்படுகிறது.

முடி உதிர்வு பிரச்சனை நீங்கி ஆரோக்கியமான முறையில் முடி வளர கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை முயற்ச்சிக்கவும்.

1)வெற்றிலை
2)நெய்
3)ஹனி

உங்கள் தலைக்கு ஏற்றவாறு வெற்றிலையை எடுத்துக் கொள்ளவும். இந்த வெற்றிலையை தண்ணீர் கொண்டு ஆசை சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

வெற்றிலை சாற்றை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி வைத்துக் கொள்ளவும். பிறகு 3 அல்லது 4 தேக்கரண்டி சுத்தமான பசுநெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

அடுத்து 4 தேக்கரண்டி சுத்தமான தேன் சேர்த்து நன்கு கலக்கவும். இவ்வாறு செய்தால் ஒரு க்ரீம் பதத்திற்கு வரும்.

இதை தலை முடிகளின் வேர்காள் பகுதியில் தடவி அரை மணி நேரத்திற்கு ஊற விடவும். பிறகு ஷாம்பு பயன்படுத்தி தலை முடிகளை அலசிக் கொள்ளவும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை வெற்றிலை ஹேர் பேக் போட்டு தலைமுடிகளை வாஷ் செய்து வந்தால் கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்கும்.