மதுபான கொள்கை முறைகேடு: டெல்லி சிபிஐ முன் ஆஜரான கெஜ்ரிவால்

0
133
#image_title

மதுபான கொள்கை முறைகேடு: டெல்லி சிபிஐ முன் ஆஜரான கெஜ்ரிவால்

மதுபான கொள்கை முறைகேடு வழக்கின் விசாரணைக்காக டெல்லி சென்றார். புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் உள்ள சி.பி.ஐ, அலுவலகத்தில் இன்று காலை ஆஜராகியுள்ளார்.

புது டெல்லியில் நடைமுறை படுத்தப்பட்ட மதுபானக் கொள்கையில். பின் விலக்கி பலக்கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இந்த புகார் குறித்து, டெல்லியின் துணை கவர்னர் வினய் குமார் சக்சேனா அவரின், பரிந்துரைப்படி சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ அதிகாரிகள் டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கின் விசாரணை குறித்து, சி.பி.ஐ அதிகாரிகள். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று காலை 11:00 மணிக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் சமுகவலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். “ என்னை கைது செய்ய வேண்டுமென பாஜக கூறியிருந்தால்” அதனை சி.பி.ஐ அதிகாரிகள் கட்டாயம் செய்வார்கள்.

சி.பி.ஐ அதிகாரிகள் ஒருவரை சிறைக்கு அனுப்ப வேண்டும். என்று நினைத்துவிட்டால், கட்டாயம் அதை செய்துவிடுவார்கள். என அந்த வீடியோ பதிவில் பேசியுள்ளார்.