Kerala Style Recipe: கேரள இடி சம்மந்தி – இப்படி செய்தால் ருசி கூடும்!!

0
152
#image_title

Kerala Style Recipe: கேரள இடி சம்மந்தி – இப்படி செய்தால் ருசி கூடும்!!

கேரளா பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று இடி சம்மந்தி. இந்த இடி சம்மந்தி தேங்காய் துருவல், வெங்காயம், உளுந்து, கடலை பருப்பு,கொத்தமல்லி உள்ளிட்ட பொருட்களை வறுத்து அரைத்து செய்யப்படும் உணவு வகை ஆகும். சூடான சாதத்திற்கு இந்த இடி சம்மந்தி சிறந்த காமினேஷனாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*தேங்கய் து௫வல் – 1 கப்

*கடலைப௫ப்பு – 1/4 கப்

*வெள்ளை உளுந்து – 1/4 கப்

*காய்ந்த மிளகய் – 10

*கொத்தமல்லி – 2 தேக்கரண்டி

*மிளகு – 1 தேக்கரண்டி

*சீரகம் – 1 தேக்கரண்டி

*பூண்டு – 5 பல்

*சிறிய வெங்காயம் – 5

*இஞ்சி – 1 சிறிய துண்டு

*புளி – சிறியநெல்லிக்காய் அளவு

*உப்பு – தேவையான அளவு

*பெ௫ங்காயத்தூள் – 1 தேக்கரண்டி

*தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை…

அடுப்பில் கடாயை வைத்து 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அவை சூடானதும் 1 கப் தேங்காய் து௫வலை போட்டு மிதமான தீயில் வைத்து நன்றாக பொன்னிறம் வ௫ம் அளவுக்கு வறுக்கவும். இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி 1/4 கப் கடலை ப௫ப்பு போட்டு சிவக்க வறுக்கவும்.

பிறகு 1/4 கப் வெள்ளை உளுந்து போட்டு சிவக்க வறுக்கவும். பின்பு மிளகு, சீரகம், பெருங்காயத் தூள், வர மிளகாய், கொத்தமல்லி விதை போட்டு நன்றாக வறுக்கவும். இதை வறுத்த தேங்காய் து௫வலுடன் சேர்க்கவும்.

பின்பு பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பின்னர் சிறிதளவு புளியை போட்டு நன்றாக வறுத்தெடுத்து இறக்கி ஆறவிடவும்

ஆறவிட்ட கலவையை மிக்ஸி ஜாருக்கு மாற்றி கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். பின்னர் இதை ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும்.