Friday, September 20, 2024
Home Blog Page 4895

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடன் நடிகர் கமலஹாசன்! அரசியல் நிலவரம் குறித்து பேச்சு

0

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடன் நடிகர் கமலஹாசன்! அரசியல் நிலவரம் குறித்து பேச்சு

நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான திரு. கமல்ஹாசனின் 60 ஆண்டுகால கலைச்சேவையை பாராட்டி ஒடிசாவில் உள்ள செஞ்சுரியன் பல்கலைகழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது. இந்த பட்டத்தை பெறுவதற்காக நேற்று கமலஹாசன் ஒடிசா சென்றுள்ளார் அங்கு அம்மாநில முதலமைச்சர் திரு நவீன் பட்நாயக் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

ஒடிசா மாநிலம் ஆர்.சீதாபூரில் அமைந்துள்ள செஞ்சூரியன் பல்கலைக்கழகம், கமல்ஹாசனின் கலைச்சேவையைப் பாராட்டி கவுரவ டாக்டர் வழங்குவதாக அறிவித்திருந்தது. நாளை நடைபெறும் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவின்போது, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கமலுக்கு இந்த பட்டத்தை வழங்குகிறார்.

பரமக்குடியில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள மய்யம் திறன் மேம்பாட்டு மையத்திற்கு ‘கிராம் தரங்’ திட்டத்தின்கீழ் வழிகாட்டுதல் வழங்க செஞ்சூரியன் பல்கலைக்கழகம் விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்யுடன் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகவும் தெரிகிறது.

திருமாவளவனின் சந்தர்ப்பவாத அரசியல்: ராஜபக்சே மகன் நமல் அறிக்கை

0

திருமாவளவனின் சந்தர்ப்பவாத அரசியல்: ராஜபக்சே மகன் நமல் அறிக்கை

தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைக்க ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதுபோல் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர் என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ச மகன் நமல் ராஜபக்ச கூறியுள்ளார். மேலும் புதிய அதிபரை விமர்சனம் செய்வதை நிறுத்திவிட்டு நடைமுறை அரசியலில் இலங்கை தமிழ் மக்களை பற்றி சிந்திப்பதுதான் சிறந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ‘தமிழகத்தில்‌ தமது சுயநல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைப்பதற்காக எமது நாட்டில்‌ தமிழ்‌ மக்களைப்பற்றி அக்கறையுள்ளவர்களாகக்‌ காட்டி முதலைக்‌ கண்ணீர்‌வடிக்கும்‌ மதிமுக-வின்‌ பொதுச்‌ செயலாளர்‌ வைகோ, விடுதலை சிறுத்தைகள்‌ கட்சியின்‌ தலைவர்‌ தொல்‌ திருமாவளவன்‌, தமிழர்‌ தேசிய முன்னனி தலைவர்‌ பழ.நெடுமாறன்‌ ஆகியோரின்‌ அறிக்கைகளை கண்ணுற்றேன்‌. அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலைத்‌ தவிர அவற்றில்‌ வேறேதும்‌ இல்லை. எமது மக்களை பகடைக்காய்களாக்கும்‌, எம்மக்களிடையே பகையையும்‌ துவேசத்தையும்‌ தூண்டிவிடும்‌ மூன்றாந்தர அரசியலைத்‌ தவிர வேறு என்ன ஆக்கபூர்வமான விடயத்தை செய்திருக்கிறீர்கள்‌ என்ற கேள்வி என்னுள்‌ எழுவதை என்னால்‌ தடுக்க முடியவில்லை’ என்று கூறியுள்ளார்.

2009ல்‌ யுத்தம்‌ நிறைவடைந்த காலத்தில்‌ மறைந்த தமிழகத்தின்‌ முதலமைச்சர்‌ மரியாதைக்குரிய கலைஞர்‌ கருணாநிதியின்‌ கட்சியான திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பிலான பாராளுமன்றக்‌ குழு இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு. வடக்கு – கிழக்கு பகுதிகளை பார்வையிட்டதுடன்‌ முன்னாள்‌ ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன்‌ சிநேக பூர்வமான சந்திப்பிலும்‌ ஈடுபட்டிருந்தமை உலகம்‌ அறிந்த விடயம்‌. அதில்‌ விடுதலை சிறுத்தைகள்‌ கட்சியின்‌ தலைவரும்‌ கெளரவ பாராளுமன்ற உறுப்பினருமான தொல்‌ திருமாவளவன்‌ அவர்கள்‌ கலந்து கொண்டதுடன்‌, எம்முடன்‌ சிநேகபூர்வ கலந்துரையாடலில்‌ ஈடூபட்டதுடன்‌. எமது நிலைப்பாடுகளையும்‌ தெளிவுற அறிந்து கொண்டிருந்தார்‌. அத்தகையவர்‌ இன்று இவ்வாறு சந்தர்ப்பவாத அறிக்கை விடுவது எமக்கு அதிர்ச்சியாக உள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தடை செய்யப்படுகிறதா?! விஸ்வரூபம் எடுக்கும் திருமாவளவனின் சர்ச்சை பேச்சு!

0

விடுதலை சிறுத்தைகள் கட்சி தடை செய்யப்படுகிறதா?! விஸ்வரூபம் எடுக்கும் திருமாவளவனின் சர்ச்சை பேச்சு!

சில நாட்களுக்கு முன்பு மத சார்புடைய ஒரு அரசியல் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராக உள்ளவரும்,சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான திருமாவளவன் இந்து கோவில்கள் குறித்து சர்ச்சை பேச்சை பதிவு செய்திருந்தார். இது இந்து மத உணர்வாளர்கள் மற்றும் பொது மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் திருமாவளவனின் மத கலவரத்தை தூண்டும் வகையிலான இந்த பேச்சுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு குரல் எழுந்து வருகிறது. இவரது இந்த சர்ச்சை பேச்சை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. அவரை கைது செய்ய வலியுறுத்தி பல இடங்களில் காவல் நிலையங்களில் வழக்கும் பதிவு செய்து வருகின்றனர்.

குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு எதிராக இந்த விவகாரத்தை கையிலெடுத்த இந்து அமைப்பினர் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி காங்கேயம் காவல் நிலையத்தில் இந்து மக்கள் கட்சியின் சார்பாக மனு அளித்துள்ளனர். இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும் சமூகவலைத்தளங்களிலும், கட்சி கூட்டங்கள் மூலம் பொது இடங்களிலும், தொடர்ந்து மக்களிடையே மதக் கலவரத்தை தூண்டும் வகையில் திருமாவளவன் செயல்பட்டு வருவதாக இந்த புகார் மனுவில் இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி இந்த மனுவில் வலியுறுத்தி உள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியான திருமாவளவன் மக்களிடையே மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளதாகவும் அதனால் அவரது எம்பி பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்றும்,மேலும் அவருடைய விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது.

தனக்கு கிடைத்த பதவி மூலமாக அவர் சார்ந்த தொகுதி மக்களுக்கு எதையும் செய்யாமல் மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது அவரது கட்சியினரிடையேயும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்வார்களா? என்ற எதிர்பார்ப்பில் பல இந்து அமைப்பினர் காத்து கொண்டு இருக்கின்றனர்.

மேலும் இது பற்றிய செய்திகளுக்கு: கீழுள்ள செய்தியையும் பாருங்கள்

திருமாவளவனின் எம்பி பதவிக்கு வந்தது ஆபத்து! மகளிர் அணியினரே வைத்த ஆப்பு

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

கமல் விழாவில் அஜித் வராதது ஏன்? புதிய தகவல்

0

கமல் விழாவில் அஜித் வராதது ஏன்? புதிய தகவல்

‘கமல்ஹாசன் 60’ என்று ஞாயிறு அன்று நடைபெற்ற பாராட்டு விழாவில் அஜித்துக்கு என பிரத்யேக அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால் அவர் கண்டிப்பாக இந்த விழாவில் பங்கேற்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வழக்கம்போல் இந்த விழாவையும் புறக்கணித்துவிட்டார்.

இந்த விழாவில் அஜித் சென்னையில் இருந்து கொண்டே கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. ரஜினி, கமல் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொள்ளும் இந்த மேடை, கமல்ஹாசனுக்கான பாராட்டு விழா மேடையாக இருந்தாலும் நிச்சயம் இந்த மேடையில் அரசியல் பேசப்படும் என்றும், ஏற்கனவே இதேபோன்ற ஒரு மேடையில் அஜித் பேசியது பெரும் விளைவுகளை ஏற்படுத்தியிருந்ததால் அதேபோன்ற ஒரு சூழ்நிலையை மீண்டும் வலிய சென்று வரவழைத்து கொள்ள வேண்டாம் என்று அஜித் கருதியதாலும் அவர் விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது

ஆனால் அதே நேரத்தில் கமல்ஹாசனிடம் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அஜித் வாழ்த்து கூறியதாகவும், தன்னால் இந்த விழாவிற்கு வர இயலாது என்பதை அவர் விளக்கியதாகவும் கூறப்படுகிறது

அஜித் எதிர்பார்த்த மாதிரியே கமல்ஹாசன் 60 என்ற இந்த விழாவில் கமல்ஹாசன் புகழைவிட, அதிகம் பேசப்பட்டது அரசியல் தான் என்பதும், குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி குறித்து ரஜினிகாந்த் பேசிய கருத்தும், ரஜினி-கமல் இணைந்து அரசியல் செய்ய வேண்டும் என்று எஸ்.ஏ.சி கூறிய கருத்தும் இன்றளவும் விவாதப்பொருளாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

கோவில் புறம்போக்கு இடங்களில் பட்டா! தமிழக அரசை கதறவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்

0

கோவில் புறம்போக்கு இடங்களில் பட்டா! தமிழக அரசை கதறவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்

புறம்போக்கு மற்றும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் எவ்வளவு, ஆக்கிரமிப்பில் உள்ளது என்ற விவரங்கள் இல்லாமல் பட்டா வழங்கும் அரசாணையை அமல்படுத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசு, புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்து கொண்டு இருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. சட்டவிரோதமாக புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு இது உதவியாக இருப்பதாகவும் இந்த அரசாணை என , ராதா கிருஷ்ணன் என்பவர் தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை ரத்து செய்ய கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு, எதிர்ப்பு இல்லாத அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்கள் அடையாளம் காணப்பட்டு அதில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என தெரிவித்திருந்தது. மேலும் ஏழை மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தும் நலத்திட்டத்திற்கான இந்த அரசாணையானது, மத உணர்வுகளுக்கோ, பக்தர்களுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும் பதில்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி கொண்ட அமர்வுக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் ஆஜராக கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழக அரசு பிறப்பித்த அரசாணை என்பது ஒரு மதத்திற்கான வழிபாட்டு தளங்களுக்கு மட்டும் தான் பொருந்துமா? மற்ற மத வழிப்பாட்டு தளங்களுக்கு கிடையாதா? என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இதன் மூலம் கோவில் நிலங்களை விற்க அறநிலைய துறையை தமிழக அரசு வற்புறுத்துகிறதா? இந்த அரசாணை எப்படி கோவில்களுக்கு பலனளிக்கும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் அரசுக்கு ஊதுகுழலாகவும், ரிமோர்ட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் பொம்மைகளாகவும் தான் இருக்கிறார்கள் என வேதனை தெரிவித்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 38 ஆயிரம் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் எவ்வளவு, அதில் ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்கள் எவ்வளவு என்பது தொடர்பான விவரங்கள் இல்லாமல் அரசாணையை அமல்படுத்த முடியாது என தெரிவித்த நீதிபதிகள், அரசாணைக்கு தடை கோரிய மனு மீதான தீர்ப்பை தேதிக்குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

பாமக பாஜகவினருக்கு பயந்த திருமாவளவன்! எடப்பாடி பழனிசாமியிடம் தஞ்சமா?

0

பாமக பாஜகவினருக்கு பயந்த திருமாவளவன்! எடப்பாடி பழனிசாமியிடம் தஞ்சமா?

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும்,சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள திருமாவளவன் தொடர்ந்து மக்களிடம் சாதி மற்றும் மத அடிப்படையிலான பிரிவினைகளை தூண்டும் வகையில் பேசி சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கமானது. தன்னுடைய வாக்கு வங்கி அரசியலுக்காக தொடர்ந்து தலித் இன மக்களை பயன்படுத்தி வருவதும், அவர்களை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக திசை திருப்பி விடுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தலித் மக்களின் அடையாளமாக உள்ள அவரையோ அல்லது அவரது தொண்டர்களையோ அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட எந்த கட்சிகளும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்கின்றன. எங்கே அவரை விமர்சனம் செய்ய அது தங்களுடைய வாக்கு வங்கியை பாதிக்குமோ என்ற அச்சதிலேயே இவர்களது அடாவடி தனத்தை எல்லாம் கண்டு கொள்ளாமல் கடந்து செல்கின்றன.

வழக்கம் போலவே தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் இந்து மத கோவில்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசியது இந்து மதத்தினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற மதத்தினரின் வாக்குகளை பெற நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள திருமாவளவன் இவ்வளவு கேவலமான அரசியலை செய்யலாமா என சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

இந்து கோவில்கள் குறித்து விசிக கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதை எதிர்த்து பாமக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல இடங்களில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பல இடங்களில் அவரை கைது செய்ய வலியுறுத்தி வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இதை சற்றும் எதிர்பார்க்காத திருமாவளவன் சூழ்நிலையை சமாளிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சமீபத்தில் சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினராக சில கோரிக்கைகளை வலியுறுத்தி சந்திப்பு நிகழ்ந்ததாக தெரிவித்திருந்தாலும் இந்த நேரத்தில் நடந்த சந்திப்பு ஏன் என்ற சந்தேகமும் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுகிறது.

தொடர்ந்து சாதி மற்றும் மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி வந்தாலும் எந்த கட்சியும் அதை கண்டு கொள்வதில்லை. வழக்கம் போலவே இதை பாமக மற்றும் பாஜக கட்சி நிர்வாகிகள் மட்டுமே கண்டித்து அவருக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வழக்கு தொடர்வது என கடுமையான அழுத்தத்தை கொடுத்து வருகின்றனர். முன்பு போல இல்லாமல் தற்போது பாஜக மற்றும் பாமக ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருப்பதால் தனக்கு எதிராக ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டதால் தான் திருமாவளவன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து தஞ்சமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இது பற்றிய செய்திகளுக்கு: கீழுள்ள செய்தியையும் பாருங்கள்

திருமாவளவனின் எம்பி பதவிக்கு வந்தது ஆபத்து! மகளிர் அணியினரே வைத்த ஆப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சி தடை செய்யப்படுகிறதா?! விஸ்வரூபம் எடுக்கும் திருமாவளவனின் சர்ச்சை பேச்சு!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

3-வது டி20 ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்

0

லக்னோவில் நடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டி20 ஆட்டத்தில் 29 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வென்று டி20 தொடரைக் கைப்பற்றியது.

முன்னதாக களமிறங்கி பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை எடுத்திருந்தது. அடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களை மட்டுமே எடுத்து 29 ரன்களில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொரை 2-1 என்ற கணக்கில் நடப்பு டி20 சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணியை ஆப்கானிஸ்தான் வென்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரும்,அந்த அணியின் விக்கெட் கீப்பருமான குர்பாஸ் ஆட்ட களத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை விளாசி எடுத்து விட்டார். மரண அடி அடித்த குர்பாஸ் தனக்கு கிடைத்த 52 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்பட மொத்தமாக 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அதே போல அந்த அணியின் பந்துவீச்சில் ரஷித் கான் வழக்கம் போல் கட்டுக்கோப்பாக வீசினார். 4 ஓவர்கள் வீசி வெறும் 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். அடுத்து வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல்ஹக் 24 ரன்களை மட்டுமே எதிரணியினருக்கு கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். முஜிபுர்ரஹ்மான் 3 ஓவர்கள் வீசி 9 ரன்கள் கொடுத்து அவரும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோ நகரில் இந்த போட்டி நடந்தது. ஏற்கனவே இரு போட்டிகளில் இந்த இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றிருந்ததால், இறுதியாக நடைபெற்ற இந்த 3-வது போட்டி இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இதில் 29 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வென்று இந்த டி20 தொடரைக் கைப்பற்றியது.

முன்னதாக நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்த ஆப்கானிஸ்தான் அணி இந்த டி20 தொடரை வென்று தக்க பதிலடி கொடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் முதல் முயற்சியிலேயே 9 வெற்றியாளர்களை உருவாக்கிய முதல் இலவச பயிற்சி மையம்

0

தமிழ்நாட்டில் முதல் முயற்சியிலேயே 9 வெற்றியாளர்களை உருவாக்கிய முதல் இலவச பயிற்சி மையம்

ஆரஞ்சு அம்மாள் நல்வழி ( Goodway) இலவச பயிற்சி மையம்-பரணம்,அரியலூர் மாவட்டம்.

இந்த மையமானது அரியலூர் மாவட்டத்தில் பரணம் எனும் கிராமத்தில் திரு.பழனிசாமி அவர்களின் சீரிய முயற்சியில் கடந்த இரு வருடமாக பல்வேறு துறையில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொண்டு அரசு பணியாளர் (TNPSC) தேர்விற்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்ட வந்த நிலையில் கடந்த மாதம் முதல் நீட் (NEET ) தேர்விற்கும் விடுமுறை நாட்களில் இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது

இந்த மையத்தில் இருந்து கடந்த வருடம் தமிழ்நாடு வன அலுவலர் (Forest officer) பணிக்கு ஒருவர் தேர்வாகியுள்ளார்.

இந்த வருடம் செப்டம்பர் மாதம் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வான (TNPSC) குரூப்- 4 தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அதில் இந்த பயிற்சி மையத்தில் இருந்து மட்டும் முதல் முயற்சிலேயே 9 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

இந்த தேர்விற்காக மட்டும் 16 ஆசிரியர்கள் களம் இறக்கப்பட்டனர் இவர்களின் சீரிய முயற்சி மற்றும் வழிகாட்டுதலின் படி 6 மாதம் மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டு இத்தகைய சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளது இந்த பயிற்சி மையம்.

அதே போன்று கடந்த மாதம் வெளியிடப்பட்ட தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வில் 15 மாணவ – மாணவிகள் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றிருந்தார்கள் அவர்களுக்கு உடல் தகுதி தேர்விற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது தற்போது அவர்கள் அனைவரும் தேர்வு முடிவிற்காக காத்திருக்கிறார்கள்.

ஒரு புறம் (NEET) நீட் தேர்விற்கும் இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடைப்பெற்று வருகிறது இத்தேர்விற்கு கணிதம் உட்பட ஒவ்வொரு பாடத்திற்கும் 2 ஆசிரியர்கள் வீதம் சிறந்த அனுபவமிக்க 10 ஆசிரியர்களை கொண்டு கடந்த மாதம் முதல் வகுப்புகள் நடைப்பெற்று வருகிறது.

வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அனைவருக்கும் இலவசமாக தங்கு வசதியையும் இந்த பயிற்சி மையம் ஏற்பாடு செய்துள்ளது.

தற்போது இந்த பயிற்சி மையத்தில் புதிய பாடத்திட்டதின் படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாகிய குரூப் -2&2A மற்றும் நீட் தேர்விற்காக 120 க்கும் மேற்பட்ட மாணவ/மாணவியர்கள் படித்து வருவது கூடுதல் சிறப்பாகும்.

நகரத்தை நோக்கி செல்லும் இந்த காலகட்டத்தில் ஒரு கிராமத்தில் மதுரை,திருவண்ணாமலை, கடலூர் ,சிவகங்கை,நாகை,தஞ்சாவூர்,கடலூர்,விருதுநகர்,கன்னியாகுமரி,சென்னை,திருநெல்வேலி போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ-மாணவிகள் வந்து தங்கி படிப்பது அப்பயிற்சி மைய ஆசிரியர்களின் திறமைக்கு கிடைத்த வெற்றியாகும்.

மேலும் இந்த பயற்சி மையத்தில் சேர்ந்து தொடர்ந்து 6 மாதம் பயிற்சி பெற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை எனில் ரூபாய் 10,000 அளிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் இந்த மையத்தின் நிர்வாக இயக்குனர்.

இது பற்றி நிர்வாக இயக்குனர் திரு.பழனிசாமி அவர்களிடம் கேட்ட போது படிக்க வசதி இல்லாத கிராமபுற ஏழை மாணவர்களை ஒரு அரசு அதிகாரியாக உருவாக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை அதற்காக தான் இந்த பயிற்சி மையத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு (TNPSC) காவலர் தேர்வு ,RRB,TET ,TNUSRB மற்றும் நீட்(NEET) போன்ற தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக கூறினார்.

மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்விற்கு பணம் கட்டி படிக்க வசதி இல்லாமல் தங்களுடைய மருத்துவ கனவை விட்டு விலகி செல்லும் பல மாணவர்களை பார்த்த பிறகு தான் மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது அதன் பின் தான் நீட் தேர்விற்கும் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டதாக கூறினார்.

இங்கு மாணவ- மாணவிகள் படிப்பதற்கு தேவையான நூலக வசதியையும்,பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ( Smart class) 58″ அளவுள்ள LED டிவி மற்றும் ஜெராக்ஸ் இயந்திரம் போன்ற அனைத்து வசதிகளையும் செய்து வைத்து இருக்கிறோம் இத்தகைய வாய்ப்பினை அரசு பணி மற்றும் மருத்துவ கனவோடு இருக்கும் மாணவ – மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார்.

தமிழகத்திலேயே நீட் தேர்விற்கு இலவசமாக பயிற்சி அளிக்க கூடிய மையமாக இதுவாக தான் இருக்கும் இத்தகைய வாய்ப்பை கிராமபுற ஏழை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்

வளர்க மனித நேயம்!!
வாழ்க மனித இனம் !!

தொடர்புக்கு
திரு.பழனிசாமி :7010021004

திருமாவளவனின் எம்பி பதவிக்கு வந்தது ஆபத்து! மகளிர் அணியினரே வைத்த ஆப்பு

0

திருமாவளவனின் எம்பி பதவிக்கு வந்தது ஆபத்து! மகளிர் அணியினரே வைத்த ஆப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும்,சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள திருமாவளவன் தொடர்ந்து மக்களிடம் சாதி மற்றும் மத அடிப்படையிலான பிரிவினைகளை தூண்டும் வகையில் பேசி சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கமானது.

அந்த வகையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் இந்து மத கோவில்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசியது அவரது எம்பி பதவிக்கு ஆபத்தாக முடியும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்து கோவில்கள் குறித்து பேசிய அவருடைய சர்ச்சை பேச்சை எதிர்த்தும்,அதற்காக அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளும்,பொது மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இது போன்று திருமாவளவன் தொடர்ந்து மக்களிடம் மத மோதலை உண்டு பண்ணும் நோக்கில் பேசிவருபதாகவும் அவரை உடனடியாக கைது செய்யவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு எதிராக இந்த விவகாரத்தை கையிலெடுத்த இந்து அமைப்பினர் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி காங்கேயம் காவல் நிலையத்தில் இந்து மக்கள் கட்சியின் சார்பாக மனு அளித்துள்ளனர். இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும் சமூகவலைத்தளங்களிலும், கட்சி கூட்டங்கள் மூலம் பொது இடங்களிலும், தொடர்ந்து மக்களிடையே மதக் கலவரத்தை தூண்டும் வகையில் திருமாவளவன் செயல்பட்டு வருவதாக இந்த புகார் மனுவில் இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி இந்த மனுவில் வலியுறுத்தி உள்ளது.

இந்நிலையில் நடிகை காயத்ரிரகுராம் தன்னுடைய சமூக வலைதள பக்கமான டிவிட்டரில் திருமாவளவன் தொடர்ந்து இந்து மதத்திற்கு எதிராக பேசி வருவதாகவும் , அவருக்கு இந்துக்கள் பாடம் கற்பிக்கவேண்டும் என்றும் அவரை எங்கு பார்த்தாலும் செருப்பால் அடியுங்கள் என்றும் பதிவிட்டிருந்தார், இந்நிலையில் அவருடைய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காயத்ரி ரகுராம் வீட்டினை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மகளிர் அணியினர் முற்றுகையிட்டு அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் அவசரமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்யக்கூடாது என்றும் என்னை கைது செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து தற்போது வரை தமிழக காவல்துறை இதுவரை திருமாவளவனை எதிர்த்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இது இந்து மத பற்றாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் காயத்ரி ரகுராம் வீட்டினை முற்றுகையிட்டு விடுதலை சிறுத்தைகள் பெண் அமைப்பினர் நடத்திய போராட்டத்தால் இந்த விவகாரமனது தேசிய அளவில் நாடாளுமன்ற விவகாரம் குழு தலைவர் வரை சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து தமிழக தலைமை செயலாளருக்கு நாடாளுமன்ற விவகாரம் குழு நோட்டீஸ் அனுப்பவுள்ளதாகவும், மேலும் திருமாவளவன் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் விடியோவாக வெளியாகியுள்ளதும் அவருக்கு தற்போது எதிராக அமைந்துள்ளது.

மேலும் இந்த பேச்சு குறித்து வருத்தம் தெரிவித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூட அவர் பேசியதை நியாயம் உண்மை என்றே வலியுறுத்தியுள்ளதால் நிச்சயம் திருமாவளவனின் எம்பி பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்று உறுதியாகியுள்ளது. மேலும் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியான நாடாளுமன்ற உறுப்பினர் எந்த மதத்தினையும் இழிவு செய்து பேசக்கூடாது என்று விதியிருக்கிறது. அந்த வகையில் பார்த்தாலும் அவருக்கு எதிராகவே சூழ்நிலை அமைந்துள்ளது.

திருமாவளவனின் இந்த சர்ச்சை பேச்சால் காயத்ரி ரகுராம் வீட்டில் போராட்டத்தை நடத்தி இந்த விவகாரத்தை தேசிய அளவில் எடுத்து சென்று தற்போது திருமாவளவனின் எம்பி பதவிக்கும் ஆப்பு வைத்துள்ளனர் அவரது சொந்த கட்சியின் மகளிர் அணியினர்.

மருத்துவர் ராமதாஸ் ஆரம்பித்ததை கையிலெடுத்த பொன்னார்! எச்சரிக்கும் திமுக

0

மருத்துவர் ராமதாஸ் ஆரம்பித்ததை கையிலெடுத்த பொன்னார்! எச்சரிக்கும் திமுக

திமுகவின் அதிகாரபூர்வ நாளிதளான முரசொலியின் அலுவலகம் அமைந்துள்ளது பஞ்சமி நிலம் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்ட அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் அந்த நிலத்திற்கான பட்டாவை பதிவிட்டு பதில் சொல்ல விவாதம் முற்றியது. இதற்கு பதிலளித்த மருத்துவர் ராமதாஸ் பட்டாவை ஸ்டாலின் அந்த நிலத்திற்கான மூலப் பத்திரத்தை காட்டுவாரா? என கேள்வியெழுப்பினார். இதனையடுத்து இதற்கு பதிலளித்த ஸ்டாலின் ஆதாரத்தை வெளியிட்டால் இரண்டு மருத்துவர்களும் அரசியலிலிருந்து விலகுவார்களா? என்றும் கூறியிருந்தார்.

பஞ்சமி நில விவகாரம் ஆரம்பித்ததும் பட்டாவை வெளியிட்ட ஸ்டாலின் மூலப் பத்திரத்தை வெளியிட மட்டும் நிபந்தனை விதித்தது அந்த நிலத்தின் மீதான சந்தேகத்தை அதிகரித்தது. இவ்வாறு திமுக மற்றும் பாமக இடையே காரசாரமான விவாதங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. இந்நிலையில் இது தொடர்பாக ஆணையத்தில் உரிய ஆதாரங்களை சமர்ப்பிப்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து, அது தான் தன்னுடைய இறுதி பதில் என்றும் கூறி பின்வாங்கினார்.

DMK Warns against BJP Ex Minister Pon Radhakrishnan-News4 Tamil Latest Online Tamil News Today Live
DMK Warns against BJP Ex Minister Pon Radhakrishnan-News4 Tamil Latest Online Tamil News Today Live

இந்நிலையில் இந்த விவகாரத்தை மீண்டும் கையிலெடுத்த பாஜக முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமெனவும், அவ்வாறு பஞ்சமி நிலத்தில் அமைந்திருந்தால் முரசொலி அலுவலகத்திற்கு சீல் வைக்க வேண்டுமெனவும் அக்கட்சியின் சார்பாக பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து நேற்று மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன், “முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருந்தால் அதனை உடனே அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த நிலம் ரூ.5 கோடி மதிப்பு எனவும், அந்த நிலத்தை தமிழக அரசிடம் திருப்பி கொடுக்கும் பட்சத்தில் திமுகவிற்கு ரூ.5 கோடி இழப்பு என்றால் அந்த பணத்தை நான் அல்லது பாஜக தரத் தயார்” என்று தெரிவித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பிவிட்டார்

பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்த கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது, நாடாளுமன்றத்திற்கே போகக்கூடாது என்று கன்னியாகுமரி மக்களால் நிராகரித்து தூக்கியெறியப்பட்ட பொன். ராதாகிருஷ்ணன் கற்பனையான பஞ்சமி நிலக் குற்றச்சாட்டை வைப்பது வெட்கக்கேடானது. ஓய்வு அரசியலில் ஒய்யாரமாக இருக்கும் பொன். ராதாகிருஷ்ணன் துணிச்சல் இருந்தால் ஆதாரங்களை வெளியிட வேண்டும். அதற்கு வக்கில்லை என்றால் வேறு வழிகளில் தனது கட்சிக்குள் விரும்பும் தலைவர் பதவியை பெற முயற்சிக்க வேண்டும் என்று விமர்சித்தார்.

DMK RS Bharathi Warns against BJP Ex Minister Pon Radhakrishnan-News4 Tamil Latest Online Tamil News Today Live
DMK RS Bharathi Warns against BJP Ex Minister Pon Radhakrishnan-News4 Tamil Latest Online Tamil News Today Live

பொன். ராதாகிருஷ்ணனுக்கு தைரியம் இருந்தால் மத்திய அரசின் தவறான கொள்கைகளால் இன்றைக்கு தாறுமாறாக நிலைகுலைந்து நிற்கும் பொருளாதாரத்தைப் பற்றியும், வேலையிழப்பு குறித்தும் பேசட்டும் என்றும் தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, கற்பனைக்கு எட்டாத குற்றச்சாட்டை, கதைக்கு உதவாத புகாரை பத்திரிகைகள் தலைப்புச் செய்தி போடுகிறது என்பதற்காக பொன்.ராதாகிருஷ்ணன் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஊழல் அதிமுகவுடன் இருக்கும் பழக்க தோஷத்தால் பொய்களை உண்மைகளாக்க புலம்புவதை நிறுத்திக் கொள்ளுங்கள். முடிந்தால் பஞ்சமி நிலம் குறித்த ஆதாரத்தை வெளியிடுங்கள். அதற்கு நாம் லாயக்குப்பட மாட்டோம் என்று நீங்கள் கருதினால், கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி அரசியலிலும் ஓய்வு எடுங்கள். அதை விடுத்து வீணாக திமுக பற்றி பிதற்றினால் அரசியல் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்து விடலாம் என்று கணக்குப் போட்டு – திமுகவை வீண் வம்புக்கு இழுக்காதீர்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அவர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் ஆரம்பித்து வைத்த விவகாரத்தை பாஜகவினர் கையிலெடுக்க திமுக சிக்கி கொண்டு தவிக்கிறது.