Thursday, September 19, 2024
Home Blog Page 4900

9 வருஷமா விளையாடிய வீரரை தூக்கி வீசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

0

9 வருஷமா விளையாடிய வீரரை தூக்கி வீசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

கிரிக்கெட் மீதுள்ள அதீத ஆர்வத்தால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 20 ஓவர்கள் கொண்ட ஐபிஎல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடருக்கான அணி களுக்கு தேவையான வீரர்களின் ஏலம் மற்றும் அணி வீரர்கள் மாற்றம் ஆகியவை தற்போது நடந்த வருகிறது.

இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள இந்த ஐபிஎல் போட்டி தொடருக்கான ராஜஸ்தான் அணியில் பல ஆண்டுகளாக சிறப்பாக விளையாடிய வீரரை அந்த அணி நீக்கியுள்ளது. அதாவது கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து ஒன்பது வருடங்களாக ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் ரகானே இந்த வருட 2020 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் அவரை தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணி விலைக்கு வாங்க இருக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.4 கோடிக்கு ஏலத்தில் ரஹானே எடுக்கப்பட்டார். தொடர்ந்து பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டு வந்தார்.மேலும் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் வெளியேறிய பின் ராஜஸ்தான் அணியின் கேப்டனாகவும் அவர் செயல்பட்டார்.

ஆனால், ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஸ்மித் தடைக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று வருவதால் கடந்த ஆண்டு ஸ்மித் மீண்டும் அணிக்குத் திரும்பிய பின் ரஹானேவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு மீண்டும் ஸ்மித்திடமே அளிக்கப்பட்டது. இதனால், கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வரும் ரஹானே சிறிது மன வருத்தத்துடன் காணப்பட்டார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்ட ரஹானே ஏற்கனவே சிறப்பான இளம் வீரர்களை கொண்டுள்ள டெல்லி அணிக்கு செல்வதால் மேலும் அந்த அணியின் பேட்டிங் பலப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அஸ்வின் பஞ்சாப் அணியில் இருந்து டெல்லி அணிக்காக மாறி அந்த அணிக்காக கேப்டன் செய்யவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் தற்போதைய பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தலைமையிலும் மற்றும் ஆலோசகர் சவுரவ் கங்குலி தலைமையிலும் அந்த அணி மெருகேறி வருகிறது. கடந்த ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில் டெல்லி அணி அனைத்து வகையிலும் சிறப்பாகச் செயல்பட்டு அரையிறுதி வரை முன்னேறியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே டெல்லி அணியில் ஷிகர் தவண், பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் அய்யர், ஹனுமார விஹாரி, ரிஷப் பந்த் போன்ற பேட்ஸ்மேன்கள் இருக்கும் நடுவரிசையை பலப்படுத்த ரஹானே இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என கங்குலி அளித்த ஆலோசனையை ஏற்று ரஹானே டெல்லி அணிக்கு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

இதுவரை 140 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே 3,820 ரன்களைச் சேர்த்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 121 ஆகவும் சராசரியாக 32 ரன்களும் வைத்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

முதல் டெஸ்ட்: டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் வங்கதேச அணி

0

முதல் டெஸ்ட்: டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் வங்கதேச அணி

இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இன்று முதல் இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் ஆரம்பமாகிறது. இந்தூரில் இன்று நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. அந்த அணி இந்திய பந்துவீச்சாளர்களை பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சற்று முன்வரை 42 ஓவர்களில் 107 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது

வங்கதேச அணியின் தொடக்க வீரர்களான இஸ்லாம் 6 ரன்களிலும், இம்ருல் காயிஸ் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கேப்டன் மாமுனுல் ஹக் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடி 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் போல்டானார். அதன்பின் நட்சத்திர ஆட்டக்காரர்களான மிது மற்றும் முசாஃபிர் ரஹிம் ஆகியோர்களும் 13 மற்றும் 36 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியின் ஷமி, அஸ்வின், உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர். வங்கதேச அணியின் 4 முக்கிய விக்கெட்டுக்கள் வீழ்ந்துவிட்டதால் இன்றுடன் ஆல் அவுட் ஆக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

ஒரு கிலோ தக்காளி ரூ.300: இந்தியாவை பகைத்து கொண்ட நாட்டின் பரிதாப நிலை!

0

ஒரு கிலோ தக்காளி ரூ.300: இந்தியாவை பகைத்து கொண்ட நாட்டின் பரிதாப நிலை!

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புப் பிரிவான 370-வது பிரிவை சமீபத்தில் மத்திய அரசு நீக்கியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் போர் நிகழவும் வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் தலைவர்கள் மிரட்டினர்

பாகிஸ்தான் தலைவர்களின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்தியாவில் உள்ள வணிகர்கள் பாகிஸ்தானுடனான வணிகத்தை திடீரென நிறுத்தினர். இதனால் இந்தியாவிலிருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதியான நிலையில் அது முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து பாகிஸ்தான் சந்தையில் தக்காளியின் விலை இன்றைய இன்று ரூபாய் 180 முதல் 300 வரை விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்நாட்டு பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து உள்ளனர். இந்தியாவை வணிக ரீதியாக பகைத்து கொண்டதால் ஏற்பட்ட விளைவுதான் இது என அந்நாட்டு மக்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பாகிஸ்ஹான் எதிர்கட்சியினர் நாடு முழுவதும் சாலைகளை முற்றுகையிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பாகிஸ்தானில் இம்ரான்கான் உடனே பதவி விலக வேண்டும் என்றும், மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி சமீபத்தில் பிரமாண்டமான பேரணி நடந்த நிலையில் அடுத்தகட்டமாக ‘பிளான் பி’ என்ற பெயரில் நாடு முழுவதும் சாலைகளை முற்றுகையிட்டு போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சபரிமலை மறுசீராய்வு மனுவின் அதிரடி தீர்ப்பு

0

சபரிமலை மறுசீராய்வு மனுவின் அதிரடி தீர்ப்பு

சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களும் வழிபடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவின் தீர்ப்பு சற்றுமுன் வெளியானது. இந்த தீர்ப்பின்படி சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் நுழைய தடை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சபரிமலையில் 10 வயது முதல் 50 வயதுடைய பெண்கள் நுழைய காலம் காலமாக தடை விதிக்கப்பட்டு வந்த நிலையில் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டடு. இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு சபரிமலையில் அனைத்து பெண்களும் நுழையலாம் என சமீபத்தில் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டாலும் ஒருசில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேரளத்தை சேர்நத நாயர் சொசைட்டி, பல்வேறு அமைப்புகள், தனிநபர்கள் என மொத்தம் 60-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மறு சீராய்வு மனுக்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் விசாரணை செய்யப்பட்டு இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.. இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நான்கு நீதிபதிகள் என மொத்தம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வாசித்தது. இதில் சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் நுழைய தடை இல்லை என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது

ஸ்டாலின் கைதானார் ஆனால் எதற்காக கைதானார்? மீண்டும் மிசா விவகாரத்தில் சர்ச்சையை கிளப்பிய மாஃபா பாண்டியராஜன்

0

ஸ்டாலின் கைதானார் ஆனால் எதற்காக கைதானார்? மீண்டும் மிசா விவகாரத்தில் சர்ச்சையை கிளப்பிய மாஃபா பாண்டியராஜன்

சமீபத்தில் அதிமுகவை சேர்ந்த தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திமுக தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதானது குறித்து விமர்சனம் செய்திருந்தார்.

தற்போது இது குறித்து ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என்று தான் கூறவில்லையென என்றும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது தொடர்பாகக் கருத்து தெரிவித்த தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஸ்டாலின் மிசாவில் சிறை செல்லவில்லை என்றும், மேலும் அவர் கைதனதற்கான காரணங்கள் என சில சர்ச்சையான கருத்துகளையும் தெரிவித்திருந்தார். ஸ்டாலின் குறித்து அவர் கூறிய கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்ட ஒன்று தான் என்றாலும் ஒரு அமைச்சராக அதை பொது வெளியில் பேசியது தான் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் அமைச்சரின் இந்த பேச்சுக்கு திமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக திமுகவினர் பல இடங்களில் அவரது உருவப் பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், திமுக தொண்டர்களின் இந்த போராட்டத்தைக் கைவிட அறிக்கை விட்ட ஸ்டாலின், சிறை சென்றதற்கான ஆவணங்களைப் படிக்க மனமில்லாமல் விமர்சிக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், இரண்டு நாட்களுக்குள் ஸ்டாலின் மிசாவில் சிறை சென்றாரா, இல்லையா என்பதற்கான ஆவணங்களை வெளியிடுவேன் என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இஸ்மாயில் கமிஷன் அறிக்கையில் ஸ்டாலின் பெயர் இருப்பது உள்ளிட்ட, மிசாவில் சிறை சென்றதற்கான ஆவணங்களை திமுகவினர் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு அமைச்சருக்குப் பதிலடி கொடுத்துவந்தனர். இருந்தாலும் அந்த அவங்களில் எல்லாம் ஸ்டாலின் சிறை சென்றார் ஆனால் எதற்காக சென்றார் என்ற தகவல் எதும் விளக்கமாக குறிப்பிடப்படவில்லை. இந்நிலையில் எதிர் தரப்பினர் ஸ்டாலின் எதற்காக சிறை சென்றார் என்ற மறைக்கப்பட்ட தகவல்கள் என சிலவற்றையும் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை. மிசாவின்போது போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ செய்யாத ஸ்டாலின் எதற்காக கைதானார் என்றே கேட்டேன். மேலும் மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கான விடையை அவர்கள் கொடுத்து விட்டனர். ஆனால் ஸ்டாலின் மிசா விவகாரத்தில் என் நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என்று கூறியுள்ளார்.

அவர் கூறியதை வைத்து பார்க்கும் போது மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைதாகவில்லை என்று தான் கூறியதில் எந்த மாற்றமும் இல்லை என உறுதியாக உள்ளது தெளிவாகிறது. மேலும் இதன் மூலமாக ஸ்டாலின் எதற்காக கைதானார் என்ற கேள்வியை எழுப்பி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவர் பலி! அதிர்ச்சி தகவல்

0

டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவர் பலி! அதிர்ச்சி தகவல்

கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளதும், அதில் சிலர் பலியாகி வருவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அரசு மருத்துவர் பிருந்தா என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மதுரை விசாலாட்சிபுரத்தை சேர்ந்த பிருந்தா என்பவர் சிவகங்கை மாவட்டம் அரசலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு இருந்தார்.

இதனையடுத்து அவர், மதுரை பிபி.குளம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த செவ்வாயன்று அவருக்கு டெங்கு அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவர் ஒருவரே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மீண்டும் முதல்வர் வேட்பாளரா? அல்லது துணை முதல்வரா? பக்கா பிளானுடன் களத்தில் இறங்கிய அன்புமணி

0

மீண்டும் முதல்வர் வேட்பாளரா? அல்லது துணை முதல்வரா? பக்கா பிளானுடன் களத்தில் இறங்கிய அன்புமணி

பாமக சார்பாக கட்சியை வளப்படுத்தும் வகையில் புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள முப்படைகளின் தொண்டர்களுடன் அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கலந்துரையாடினார்.

இன்று காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் முப்படைகளின் இந்த சந்திப்பை தொடங்கிய அன்புமணி ராமதாஸ், இனி வரும் காலங்களில் அனைத்து மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொண்டு இந்த முப்படைகளின் தொண்டர்களுடன் கலந்துரையாடுவார் என்று கூறப்படுகிறது.

அடுத்து வரவுள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும்,கட்சியை அடிமட்ட அளவில் பலப்படுத்தவும் பாமகவின் சார்பாக அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை, அன்புமணி மக்கள் படை ஆகிய மூன்று படைகள் பாமகவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சிக்கென குறிப்பிட்ட அளவு நிலையான வாக்கு வங்கி இருந்து வந்தாலும் அக்கட்சியால் தேர்தல் அரசியலில் பெரியதாக ஜொலிக்க முடியவில்லை. தொடர்ந்து ஏதாவது ஒரு பெரிய கட்சியின் ஆதரவுடன் தான் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதனை போக்கும் வகையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அன்புமணி ராமதாஸ் அவர்களை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தனியாக களம் கண்டது.

இதன் மூலமாக குறிப்பிட்ட வாக்குவங்கியை உறுதி செய்து தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்பதை நிரூபித்து நிலையில் அக்கட்சியால் எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை. இதனையடுத்து தற்போது நடந்த மக்களவை தேர்தலில் தமிழக அரசியல் தலைவர்கள் யாருமே எதிர்பார்க்காத வகையில் அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்து போட்டியிட்டது. இதிலும் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்றாலும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் தொடர சட்டமன்ற இடைத்தேர்தலில் பாமகவின் வாக்குகள் பெரிதும் உதவியது. அடுத்து தற்போது நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெற பாமக வாக்குகள் பெரிதும் உதவியது.

இந்நிலையில் தான் அடுத்து வரும் உள்ளாட்சி மற்றும் தமிழக சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக பாமக கூட்டணி தொடரும் என பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதி செய்தார். கூட்டணி தொடரும் நிலையில் இதன் மூலமாக உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிட்ட மாநகராட்சி மேயர் பதவிகளையும், அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியில் பங்கு மற்றும் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு துணை முதல்வர் பதவி என்ற கோரிக்கையையும் நிறைவேற்றி தர வேண்டும் என்று அதிமுக தலைமையிடம் பாமக தரப்பு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வாய்ப்பு கிடைக்கும் நிலையில் பாமக நிலையான வாக்கு வங்கியை கொண்டுள்ள தொகுதிகளில் தங்களது வெற்றியை உறுதி செய்யும் வகையில் தான் அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை, அன்புமணி மக்கள் படை என்ற மூன்று படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் படைகளை பட்டை தீட்டி வரும் சட்டமன்றத் தேர்தலில் கிராம வாரியாக களத்தில் இறக்க பாமக தலைமை முடிவு செய்திருக்கிறது.

இதனிடையே காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட இடங்களில் இந்த முப்படைகளை சேர்ந்தவர்களுடன் இன்று கலந்துரையாடல் நடத்திய அன்புமணி ராமதாஸ் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அன்புமணியின் பாசிட்டிவான பேச்சைக் கேட்டு அதில் கலந்து கொண்ட இந்த முப்படைகளின் இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் உற்சாகம் ஆகினர்.

இதனையடுத்து வடதமிழகத்தில் 75 தொகுதிகள் அடங்கிய பட்டியல் தயார் செய்து அங்கு மட்டும் இந்த முப்படைகளை இறக்கி முழு வீச்சில் செயல்பட பாமக தலைமை திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த முப்படைகளுக்கு தேவையான ஆலோசனைகளையும், உதவிகளையும் செய்து கொடுக்குமாறு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த முப்படைகளில் அக்கட்சியின் தொண்டர்கள் மட்டுமல்லாமல், பாமகவின் மது ஒழிப்பு,மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகள்,நாகரிக அரசியல் உள்ளிட்ட சித்தாந்தங்கள் மீது பற்று கொண்டுள்ள அனைத்து தரப்பினரையும் இணைக்க கட்சி மேலிடம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனையடுத்து தாங்கள் கேட்டவாறு ஆட்சியில் பங்கு மற்றும் அன்புமணி ராமதாசுக்கு துணை முதல்வர் பதவி என்பதை ஏற்று கொண்டால் அதிமுக கூட்டணியில் தொடரலாம் இல்லையென்றால் மீண்டும் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் களமிறங்கலாலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காவல் துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் 350 கோடி ஊழல்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை கேட்கும் ஸ்டாலின்

0

காவல் துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் 350 கோடி ஊழல்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை கேட்கும் ஸ்டாலின்

தமிழக காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் 350 கோடி ஊழல் நடந்ததாக எழுந்துள்ள குற்ற சாட்டு சம்பந்தமான வழக்கை உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் விசாரிக்க வேண்டும், ஊழல் செய்தவர்களுக்கு சரியான தண்டனை பெற்றுத் தந்து, லஞ்ச ஒழிப்புத்துறை நம்பகத்தன்மையை நிலைநாட்ட வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.

காவல்துறைக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் 350 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக உள்துறைச் செயலாளர் விசாரிக்க ஆணையிட்டும், இன்னும் லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறை எந்தவித விசாரணையும் நடத்தாமல் இருப்பதாக இன்று வெளிவந்திருக்கும் செய்தி, அதிமுக அரசு ஊழலை ஊறப்போடவும், விசாரணையை முடிந்தவரை தாமதப்படுத்தவும் வெட்கம் ஏதுமின்றி முயற்சி செய்கிறது என்பதை உணர்த்துகிறது.

ஊழல் புகாருக்குள்ளான டி.ஜி.பி. அலுவலகத்தில் உள்ள காவல்துறை தொழில்நுட்ப பிரிவு எஸ்.பி.,யை அதே பதவியில் வைத்துக் கொண்டு, இந்த ஊழல் தொடர்பான அலுவலகக் கோப்புகளை பத்திரமாக வைத்திருந்த அமைச்சுப் பணியாளர் ராஜாசிங்கை மட்டும் திடீரென்று ராமநாதபுரத்திற்கு மாற்றியிருப்பது ஆதாரங்களை அழிக்கும் முதற்கட்ட முயற்சியோ என்ற வலுவான சந்தேகம் எழுகிறது.

காவல்துறை தொழில்நுட்ப பிரிவில் உள்ள எஸ்.பி – அவருக்கு ஆணையிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் யார் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அதிமுக அரசு, பொதுமக்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்க வேண்டிய கடமை உள்ள தமிழக காவல்துறையையும் ஊழல் துறையாக மாற்றி வருவது கண்டனத்திற்குரியது.

2019 ஜனவரி மாதத்தில் வெளிவந்த இந்த ஊழல் புகார் குறித்து, ‘குட்கா’ ஊழல் வழக்கில் ரெய்டு செய்யப்பட்ட தமிழ்நாடு காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஓய்வு பெறும் வரை, எந்த விசாரணையும் நடத்தாமல் கிடப்பில் போட்டார்.

பிறகு புதிய டிஜிபி திரிபாதி பொறுப்பேற்ற பிறகு இந்த ஊழலை விசாரிக்குமாறு உள்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பி – அந்த கடிதத்தின் அடிப்படையில் செப்டம்பர் 2019-ல் விசாரணைக்கு உத்தரவிட்டார் உள்துறைச் செயலாளர்.

ஆனால், ஏறக்குறைய 11 மாதங்களாக இந்த புகார் மீது எந்த விசாரணையும் நடக்கவில்லை. அதிமுக அரசு ஊழல்வாதிகளை எப்படியாவது காப்பாற்றுவது இயற்கை. அதில் அதிர்ச்சியடைய ஏதுமில்லை. ஆனால், சுதந்திரமாக செயல்பட வேண்டிய லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையும் – அதில் நேர்மையானவர் என்று காவல்துறை வட்டாரத்தில் அறியப்படும் இயக்குநர் விஜயகுமார் ஐபிஎஸ்-சும் ஊழல் அதிகாரிகளைக் காப்பாற்றுவது ஏன்? என்பதுதான் புதிராக உள்ளது.

ஊழல் நடவடிக்கை எடுக்க உள்துறைச் செயலாளர் உத்தரவிட்டும், ஏன் கோப்பினை மூட்டை கட்டி வைத்திருக்கிறார்? ஒரு அரசு ஊழியர் மீது புகார் வந்து விட்டாலே, அவரை வேறு பதவிக்கு மாற்றுமாறு அரசுக்கு அறிவுறுத்தும் லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை, ஏன் காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கிய புகாரில் ஈடுபட்ட அதிகாரிகளை மாற்ற இதுவரை அரசுக்கு பரிந்துரை செய்யவில்லை?

நேர்மையாகவும், நியாயமாகவும் விசாரணை நடத்த வேண்டிய லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை இப்படி ஏனோ அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது. கூடுதல் பொறுப்பாக மாநில விஜிலென்ஸ் ஆணையத்தின் தலைவர் பதவியையும் தன்னிடமே வைத்துள்ள தலைமைச் செயலாளர், இந்த மெகா ஊழல் பற்றியும், லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையில் தாண்டவமாடும் அரசியல் தலையீடு குறித்தும் கண்டு கொள்ளாமல், மவுனமாக இருப்பது ஏன்?

இதேபோல், குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு தமிழக அதிகாரிகள் மீது ‘குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய’ மத்திய விழிப்புணர்வு ஆணையம் அனுமதி கேட்டும், இதுவரை அதிமுக அரசு அனுமதி அளிக்காமல் இழுத்தடிப்பதாகவும் செய்தி வெளிவந்துள்ளது.

அதிமுக அரசு தமிழகத்தில் ஊழலாட்சி நடத்தி வருவதும்; அதைக் கண்டு கொள்ளாமல், ஏதோ காரணங்களுக்காக அதிமுக அரசைக் காப்பாற்றுவதும்; இதுவரை இல்லாத அளவிற்கு ஏற்பட்டிருக்கும் மகா கேடு என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஆகவே, காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கிய வழக்கினை உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்றும், மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் காவல்துறையிலேயே ஊழல் செய்த பெருச்சாளிகளைப் பிடித்துக் கொண்டுவந்து, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத் தருவதோடு மட்டுமின்றி – ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்து நம்பகத்தன்மையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலாளர் ஊழல் புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை நேர்மையாக விசாரணை நடத்துவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விலைமதிப்பற்ற பழங்கால சிலைகள் சீரழிவதை அனுமதிக்கக் கூடாது! மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

0

விலைமதிப்பற்ற பழங்கால சிலைகள் சீரழிவதை அனுமதிக்கக் கூடாது! மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

உலகின் அனைத்து நாடுகளும் ஏங்கக்கூடிய கலைச் சின்னங்கள் நம்மிடம் இருக்கும் நிலையில், அவற்றை பாதுகாக்க சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1250-க்கும் மேற்பட்ட விலைமதிப்பற்ற பழங்கால சிலைகள் எந்தவித பாரமரிப்பும் இல்லாமல், வாகனங்கள் நிறுத்துமிடங்களிலும், வெட்ட வெளியிலும் குப்பைகளைப் போல கிடத்தி வைக்கப்பட்டிருப்பதாக தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. உலகப்புகழ் பெற்ற சிலைகளுக்கும், பிற கலைச் சின்னங்களுக்கு சென்னையில் பாதுகாப்பு மிக்க ஓர் இடம் ஒதுக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது.

சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலுள்ள சிலரின் வீடுகளிலும், பண்ணைத் தோட்டங்களிலும் கடந்த 2016-17 ஆம் ஆண்டுகளில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் நடத்திய சோதனைகளில் ஏராளமான பழங்கால சிலைகள், கற்சிலைகள், மரச்சிற்பங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக ஏராளமான தொழிலதிபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்ய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளில் மதிப்பு பலநூறு கோடி ரூபாய் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அத்தகைய சிலைகள் அவற்றுக்குரிய மதிப்புடன் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கிண்டியில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகம் அமைந்துள்ள பொருளாதாரக்குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தின் தரைத்தளத்தில் எந்தவித பாதுகாப்புமின்றி குவித்து வைக்கப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளின் மதிப்பு பலநூறு கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சிலைக்கடத்தல் மற்றும் சிலை பதுக்கல் தொடர்பான வழக்குகளுக்கு அவை தான் முக்கிய ஆதாரம் ஆகும். ஆனால், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் அவை வைக்கப்பட்டுள்ள நிலையைப் பார்க்கும் போது, அவற்றை யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும் என்றே தோன்றுகிறது. இது சிலைகளுக்கு மட்டுமின்றி, சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இந்த ஆபத்து தடுக்கப்பட வேண்டும்.

வெட்ட வெளியில் எந்த பாதுகாப்புமின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகள் வெயிலிலும், மழையிலும் கிடக்கும் போது அவை பல்வேறு வேதிவினைகளுக்கு உள்ளாகும். இதனால் சிலைகள் அழகையும், சிறப்பம்சங்களையும் இழந்து சாதாரணமான கற்களாகவும், மரத்துண்டுகளாகவும் மாறிவிடக்கூடும். மழையில் நனைந்து, வெயிலில் காயும் போது மரச்சிலைகளில் வெடிப்பு ஏற்படும். இந்த சிலைகளில் உள்ள சிறப்பம்சங்களுக்காகத் தான் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்படுகின்றன. அத்தகைய சிறப்புமிக்க சிலைகளை அலட்சியத்தால் இழந்து விடக் கூடாது.

குற்ற வழக்குகள், கடத்தல் வழக்குகள் ஆகியவற்றில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர ஊர்திகள், மகிழுந்துகள், சரக்குந்துகள் உள்ளிட்ட வாகனங்களின் கதி என்ன? என்பதை அனைவரும் அறிவார்கள். அவை வெயிலிலும், மழையிலும் கிடந்து துருப்பிடித்து வீணாகின்றன. பல வாகனங்களின் சக்கரங்கள், எஞ்சின்கள் கூட திருடப்படுகின்றன. இவ்வாறாக மிகப்பெரிய அளவிலான பொருளாதாரம் யாருக்கும் பயன்படாமல் போகும். விலைமதிப்பற்ற சிலைகளுக்கும் அதே நிலை ஏற்பட்டு விடாமல் தடுக்க வேண்டும்.

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் விலை மதிப்பற்றவை என்பது மட்டுமின்றி, கலைநயமும் மிக்கவை ஆகும். ஆகவே, இந்த சிலைகளைக் கொண்டு ஓர் அருங்காட்சியகம் அமைத்து, ஒவ்வொரு சிலையின் வரலாற்றையும் அதற்கு அருகில் இடம் பெறச் செய்தால் அது அனைவரின் வரவேற்பையும் பெற்று, சுற்றுலா முக்கியத்துவம் கொண்ட இடமாக மாறக்கூடும். அத்தகையக் கலைக்கூடம் சென்னையின் இன்றையத் தேவையும் கூட. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை பாதுகாத்து வைக்க திருவான்மியூர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் இடங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக அம்முயற்சியில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. கடைசியாக கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடம் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் முறைப்படி விண்ணப்பித்து அதை பெற்றுக்கொள்ளலாம் என்றும் இந்து சமய அறநிலையத்துறை கூறியுள்ளது.

உலகின் அனைத்து நாடுகளும் ஏங்கக்கூடிய கலைச் சின்னங்கள் நம்மிடம் இருக்கும் நிலையில், அவை பராமரிப்பின்றி சீரழிவதை அனுமதிக்கக்கூடாது. கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை முறைப்படி பெற்று, அதில் அருங்காட்சியகம் அமைத்து விலைமதிப்பற்ற சிலைகளை பாதுகாக்க சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சசிகுமாரின் அடுத்த படத்தில் பிரபல நடிகரின் மனைவி: ஜோடியா? தங்கையா?

0

சசிகுமாரின் அடுத்த படத்தில் பிரபல நடிகரின் மனைவி: ஜோடியா? தங்கையா?

சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தில் பிரபல நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில் இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கின்றாரா? அல்லது தங்கையாக நடிக்கின்றாரா? என்பது குறித்த தகவலை இன்னும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

திருமணத்துக்கு பின்னர் 36 வயதினிலே என்ற படத்தில் நடித்த ஜோதிகா, அந்த படம் கொடுத்த வெற்றியை அடுத்து காற்றின் மொழி, நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட், செக்க சிவந்த வானம் என தொடர்ச்சியாக தனது வயதுக்கு ஏற்ற கேரக்டர்களில் நடித்து வந்தார்.

தற்போது கார்த்தியுடன் இணைந்து ஒரு படத்திலும், பொன்மகள் வந்தாள் என்ற படத்திலும் ஜோதிகா நடித்து வருகிறார். இந்த நிலையில் கத்துகுட்டி பட இயக்குனர் இரா.சரவணன் இயக்கும் அடுத்த படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கவிருக்கும் நிலையில் இந்த படத்தில் ஜோதிகா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தின் கதைப்படி ஹீரோவின் தங்கை கேரக்டர் ஒன்று இருப்பதாகவும், அந்த கேரக்டரில் தான் ஜோதிகா நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, சூரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் முதல் தொடங்கவுள்ளது.