Friday, September 20, 2024
Home Blog Page 4909

‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் மூன்று பிரபலங்கள் அறிவிப்பு

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் இரவுபகலாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும், இந்த படத்தின் நான்கு மொழிகளில் மோஷன் போஸ்டரை இந்தியாவின் நான்கு முன்னணி நட்சத்திரங்கள் வெளியிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் மோஷன் போஸ்டரை உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும், மலையாள மோஷன் போஸ்டரை மோகன்லால் அவர்களும், ஹிந்தி மோஷன் போஸ்டரை சல்மான்கான் அவர்களும் வெளியிட இருப்பதாக இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தெலுங்கு மோஷன் போஸ்டரை வெளியிடும் நட்சத்திரம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் வளர்ந்து வரும் இந்த படம் 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும்

பாதுகாப்பற்ற பயணம்: பிரபல கேப் கார் நிறுவனம் மீது பிக்பாஸ் நடிகை புகார்!

0

பாதுகாப்பற்ற பயணம்: பிரபல கேப் கார் நிறுவனம் மீது பிக்பாஸ் நடிகை புகார்!

திரைப்பட நடிகையும் பிக்பாஸ்2 நிகழ்ச்சியில் வின்னருமான நடிகை ரித்விகா சமீபத்தில் தனியார் கேப் நிறுவனம் ஒன்றின் காரில் பயணம் செய்துள்ளார். அந்த காரின் டிரைவர் மிகவும் முரட்டுத்தனமாக காரை ஓட்டியதாகவும் எனவே இந்த பயணத்தை தான் பாதுகாப்பற்ற பயணமாக கருதியதாகவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமன்றி கார் சரியான கண்டிஷனில் இல்லை என்றும் தனது ட்விட்டர் தளத்தில் ரித்விகா பதிவு செய்துள்ளார். மேலும் அந்த காரின் எண் மற்றும் காரின் மாடல், டிரைவரின் பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டு அந்த நிறுவனம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று தனது நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து ஒரு ரித்விகாவின் புகார் குறித்து பதிலளித்துள்ள அந்த தனியார் கேப் நிறுவனம் ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறி உள்ளது

இந்த நிலையில் ரித்விகா நடித்த ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை பா ரஞ்சித் தயாரித்துள்ளார் என்பது, ஆதிரை அதியன் என்பவர் இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

பிரபல நடிகையை திருமணம் செய்யவுள்ளாரா பிகில் நடிகை?

0

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் வேம்பு என்ற கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டை பெற்ற நடிகை இந்துஜா, தனது சக நடிகை ஒருவரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்று சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேயாத மான் படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் பிகில் படத்தில் நடித்த நடிகை இந்துஜா எந்நேரமும் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக செயல்படுபவர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்துஜாவுடன் மகாமுனி என்ற படத்தில் நடித்த மஹிமா நம்பியார், ‘நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா? என்று இன்ஸ்டாகிராமில் கேள்வி எழுப்ப இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள இந்துஜா ‘உனக்கு சம்மதம் என்றால் எனக்கும் சம்மதம், எப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்

நடிகைகள் இருவரும் காமெடியாக உரையாடிய இந்த உரையாடலை ஒருசிலர் சீரியஸாக எடுத்து கொண்டு கடுமையான விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

பிகில் படத்தின் வெற்றிக்கு பின்னர் தற்போது இந்துஜா மூன்று தமிழ்ப்படங்களிலும் ஒரு மலையாள படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

பேனர் வைக்கும் செலவில் தளபதி ரசிகர்கள் செய்த உருப்படியான விஷயம்!

0

பேனர் கலாச்சாரத்தால் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம் பெண் பலியான நிலையில் இனிமேல் பேனர் வைக்க வேண்டாம் என மாஸ் நடிகர்கள் தங்களுடைய ரசிகர்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய தொண்டர்களுக்கும் அறிவுறுத்தினர்

சுபஸ்ரீ சம்பவத்தை அடுத்து வெளிவந்த சூர்யாவின் காப்பான் மற்றும் தனுஷின் அசுரன் ஆகிய திரைப்படங்கள் ரிலீசின் போது சூர்யா மற்றும் தனுஷ் ரசிகர்கள் பேனர் வைக்கும் செலவுக்கு பதிலாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மத்தியிலும் நல்ல பெயர் கிடைத்தது

இந்த நிலையில் சமீபத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்கும் பெரும்பாலான விஜய் ரசிகர்கள் பேனர் வைப்பதற்கு பதிலாக நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்

அந்த வகையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு பள்ளி அடிப்படை வசதி இல்லாததை அறிந்து பிகில் படத்தை முன்னிட்டு தளபதி விஜய்ரசிகர்கள் நலத்திட்ட உதவிகளை செய்துள்ளனர். இந்த பள்ளிக்கு தேவையான அடிப்படை அம்சங்களான குடிநீர் டேங்க், கழிப்பறைகள், கழிவுநீர் சேமிப்பு ஆகிய வசதிகளை செய்து தந்துள்ளனர்

விஜய் ரசிகர்களின் இந்த பணியை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். இதேபோல் அனைத்து தரப்பு ரசிகர்களும் இவ்வாறு சமூகப் பணிகளை செய்து அவரவர்களின் நடிகர்களுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்கவேண்டும் என்று குறி வருகின்றனர்

பேனர் கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிப்போம் என்று உறுதி கூறிய அரசியல்வாதிகள் தங்கள் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு மீண்டும் பேனர் கலாச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில் மாஸ் நடிகர்களின் ரசிகர்கள் தொடர்ந்து தாங்கள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி வருவது சிறப்பு கூறியதாக கருதப்படுகிறது

திருவள்ளுவருக்கு காவி வேசம்! பாஜகவை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் திருமாவளவன் அறிவிப்பு

0

திருவள்ளுவருக்கு காவி வேசம்! பாஜகவை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் திருமாவளவன் அறிவிப்பு

அறிக்கையின் முழு விவரம்,.
அய்யன் திருவள்ளுவரை அவமதிக்கும் வகையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு காவி உடுத்தி, திருநீறுப் பூசி அவரை இந்து மதத் துறவியாக பதிவு செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி
என்னுமிடத்தில் திருவள்ளுவர் சிலையின் மீது சாணம் வீசி அவமதித்துள்ளனர். இந்த அநாகரிகப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

அய்யன் திருவள்ளுவர் சாதி, மதம், மொழி, இனம் மற்றும் தேசம் போன்ற அனைத்து வரம்புகளையும் கடந்தவர். அதற்கு அவருடைய படைப்பான திருக்குறளே சாட்சியமாகும்.

உலகமெங்கும் வாழ்கிற ஒட்டுமொத்த மனித குலத்தையும் எக்காலமும் வழிநடத்தக் கூடிய ஒரு மகத்தான மாந்தநேய கோட்பாட்டை உலகுக்கு வழங்கிய உன்னத மகான் அய்யன் திருவள்ளுவர். அவர் மானுடத்திற்கு அருளியிருக்கும் மகத்தான கொடையே திருக்குறள் ஆகும். இதனை அறிஞர் பெருமக்கள் உலகப் பொதுமறை என்று போற்றுகின்றனர். இது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கானதாக மட்டுமின்றி அனைத்துத் தரப்பினருக்கும் பொருந்தக்கூடியது என்பதால் தான் இதனை பொதுமறை என்று போற்றுகிறோம்.

இந்நிலையில் அதனை இந்து அடையாளத்திற்குள் முடக்க முயற்சிப்பதும் அவருடைய திருவுருவச் சிலையை அவமதித்ததும் மிகவும் வெட்கக்கேடான இழி செயலாகும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மானுட சமத்துவத்திற்காக உரத்துக் குரல் எழுப்பிய மாமனிதரான திருவள்ளுவரைக் காவி உடுத்தி அவமதித்த பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் சாணியடித்து இழிவு செய்த சமூக விரோதிகள் ஆகியோரத் தமிழக அரசு உடனடியாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும்.

அய்யன் திருவள்ளுவரை முன்னிறுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் சங்பரிவார் கும்பலைக் கண்டிக்கும் வகையிலும், சாதி மத வெறுப்பு அரசியலிலிருந்து தமிழகத்தைக் காக்கும் நோக்கிலும் வரும் நவம்பர் 11 அன்று தமிழகம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த அறப்போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகளுடன் அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம் என அறிக்கையில் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.

கோவில் பூசாரியை அடித்து உதைத்து நிர்வாணமாக்கிய பெண்கள்: ஆந்திராவில் பரபரப்பு

0

கோவில் பூசாரியை அடித்து உதைத்து நிர்வாணமாக்கிய பெண்கள்: ஆந்திராவில் பரபரப்பு

ஆந்திராவில் உள்ள ஒரு கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்த பூசாரியை அடித்து உதைத்து நிர்வாணமாக்கிய பெண்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஆந்திராவில் உள்ள கோவில் ஒன்றில் பூஜை செய்து கொண்டிருந்த ஐயர் ஒருவர், கோவிலுக்கு வரும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது

இந்த நிலையில் இன்று காலை கோவிலுக்கு சாமி கும்பிட வந்த ஒரு பெண்ணிடம் அந்த ஐயர் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனே தனது வீட்டிற்கு சென்று தனது உறவினர்களை அழைத்து வந்ததாகவும் தெரிகிறது

கோவிலுக்குள் சென்ற அந்த நேராக கருவறையிலிருந்த ஐயரை வெளியே இழுத்து வந்து சரமாரியாக அடித்து உதைத்தனர். அதுமட்டுமன்றி அவர் அணிந்திருந்த வேட்டியை உருவி நிர்வாணமாகினர். இந்த சம்பவத்தால் கோவிலுக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

உடனடியாக அந்த பகுதியில் உள்ள மற்ற அய்யர்கள் ஓடி வந்து நிர்வாணமாக இருந்த அய்யரை காப்பாற்றியதோடு அந்த பெண்களிடம் சமாதானமாக பேசினார். இருப்பினும் பெண்கள் சமாதானம் ஆகாமல் அந்த அய்யரை தொடர்ந்து உதைக்க முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டு அந்த கோவிலுக்கு வந்த போலீசார், அய்யர் மற்றும் பெண்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். அய்யர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவரை கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

சிம்புவுக்கு நல்ல புத்தியை கொடுத்த ஐயப்பன்: மீண்டும் தொடங்கும் மாநாடு!

0

சிம்புவுக்கு நல்ல புத்தியை கொடுத்த ஐயப்பன்: மீண்டும் தொடங்கும் மாநாடு!

நடிகர் சிம்பு மீது இருக்கும் ஒரே ஒரு குற்றச்சாட்டு என்னவெனில் அவர் சரியாக படப்பிடிப்பிற்கு வருவது இல்லை என்றும் படக்குழுவினருக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்பதும் தான். சிம்புவுக்கு இன்னும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கும் நிலையில் ஒழுங்காக படப்பிடிப்புக்கு வந்து சரியான இடைவெளியில் திரைப்படங்களை வெளியிட்டால் அவர் இன்னும் திரையுலகில் முன்னணி நடிகர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக இருந்த மாநாடு திரைப்படம் திடீரென டிராப் செய்யப்பட்டது. இதற்கு காரணமாக சிம்பு சரியான நேரத்தில் படப்பிடிப்பிற்கு வருவது இல்லை என்றும், அப்படியே வந்தாலும் படக்குழுவினர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டது

இந்த நிலையில் மாநாடு படத்தை மீண்டும் தொடங்குவது குறித்த பேச்சுவார்த்தை நடந்ததாகவும், பேச்சுவார்த்தையில் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் அவர்கள் கலந்துகொண்டு, இனிமேல் சிம்பு சரியான நேரத்தில் படப்பிடிப்பிற்கு வர தான் உத்தரவாதம் அளிப்பதாகவும் கூறி இருந்தார்

இதனை அடுத்து மாநாடு படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கின. இந்த நிலையில் சிம்பு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து உள்ளார். இந்த நேரத்தில் சிம்புவை சந்தித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு படத்தில் சிம்பு மீண்டும் நடிப்பதை உறுதி செய்ததோடு, விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் தேதியும் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்

சிம்பு ஐயப்பனுக்கு மாலை போட்ட பிறகு அவருக்கு எல்லாமே நல்லவிதமாக நடக்கும் என்றும் ஐயப்பன் சிம்புவுக்கு அருள்புரிவார் என்றும் அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்

தமிழக பாஜக தலைவர் ஆகின்றாரா ஜிகே வாசன்?

0

தமிழக பாஜக தலைவர் ஆகின்றாரா ஜிகே வாசன்?

காங்கிரஸ் கட்சி மீது தீவிர பற்று கொண்ட ஜி கே மூப்பனார் அவர்களின் வாரிசான ஜிகே வாசன் தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இடம் பிடித்த போது, அவர் பாஜக தலைவர்களுடன் நெருக்கமானார்

இந்த நிலையில் சீன அதிபருடன் சென்னை வந்த பிரதமர் மோடியை ஜிகே வாசன் வரவேற்றபோது, தன்னை டெல்லியில் வந்து சந்திக்குமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தமிழக பாஜகவின் புதிய தலைவராக ஜிகே வாசன் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. இதனை அடுத்து விரைவில் ஜிகே வாசன் டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க இருப்பதாகவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைய இருப்பதாகவும், அதற்கு பதிலாக அவருக்கு தமிழக பாஜக தலைவர் பதவியை பாஜக மேலிடம் தர இருப்பதாகவும் கூறப்படுகிறது

ஆனால் அதே நேரத்தில் தீவிர காங்கிரஸ் பின்னணியை கொண்ட ஜிகே வாசன், அதற்கு நேரெதிர் கொள்கையை உடைய பாஜக கட்சிக்கு தலைமை பொறுப்பை ஏற்பாரா? என்ற சந்தேகமும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் ஒருவேளை ஜிகே வாசன் பாஜக தலைமை பொறுப்பை ஏற்காவிட்டால், அவரை மத்திய அமைச்சராக்கும் திட்டமும் பாஜக மேலிடத்திற்கு இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் விரைவில் பாஜக-தமிழ் மாநில காங்கிரஸ் இணைப்பு நடக்கும் என்றே கூறப்படுகிறது

தமிழுகம் முழுவதும் காவல் ஆய்வாளர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்தார்! காவல்துறை தலைவர் கே.திரிபாதி IPS

0

தமிழுகம் முழுவதும் காவல் ஆய்வாளர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்தார்! காவல்துறை தலைவர் கே.திரிபாதி IPS

கடந்த மூன்றரை ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதம் நடை பெறுவது உறுதியாகி உள்ளது. இதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் சுறுசுறுப்பாக செய்து வருகிறது,.

நிச்சயம் டிசம்பர் மாதம் இடைத்தேர்தல் உறுதியாக நடந்தே தீரும் என்று நேற்று நடைபெற்ற நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றியைத் தொடர்ந்து அதிமுகவின் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது., இதில் தமிழக துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான திரு.பன்னீர்செல்வம் அவர்கள் இன்னும் 15 நாட்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும்,. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுறுசுறுப்பாக செயலாற்றுங்கள் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் நாம் பெரும் வெற்றியை பெற்றாக வேண்டும் என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேசினார்,. மேலும் இன்று நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பணிகளை தற்போதே தொடங்குங்கள் என்று அறிவுறுத்தவே நடைபெற உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது தெரிவிக்கின்றன.,

இதற்கிடையே தமிழக காவல்துறை தலைவர் கே.திரிபாதி அவர்கள் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்,. மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் காவல் ஆய்வாளராக இருக்கும் அதிகாரிகளை உடனடியாக மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார்,. உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடைபெற உறுதுணையாக இருக்கும் பொருட்டு இந்த நடவடிக்கையை இது தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,.

மேலும் அதிமுக, திமுக கூட்டணி கட்சிகளின் உள்ளாட்சித் தேர்தல் ஒதுக்கீட்டு இடங்கள் பற்றி தற்போது மறைமுகமாக பேசி வருகிறது,. மதிமுக,நாம்தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுவோர் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுவை தலைமையிடம் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது,.

கடந்த மாதம் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் உள்ளாட்சி தேர்தல் தேதி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சோழர் குல வாரிசுகளால் ராஜ ராஜன் பள்ளிப்படையில் பிரமாண்டமாக நடைபெறும் 1034 ஆவது ஆண்டு சதய விழா

0

சோழர் குல வாரிசுகளால் ராஜ ராஜன் பள்ளிப்படையில் பிரமாண்டமாக நடைபெறும் 1034 ஆவது ஆண்டு சதய விழா

பிற்கால சோழர்களின் வரலாற்றில் மாபெரும் மைல் கல்லாக விளங்கியவர் ராஜ ராஜன் என்ற அடைமொழியால் அழைக்கப்படும் அருள்மொழிவர்மன். அருள்மொழிவர்மனின் ஆட்சிக்கு பின்னரே சோழர்களின் ஆட்சி கடல் கடந்தும் பரந்து விரிய தொடங்கியது .

உலகமே கண்டு வியக்கும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜ ராஜன் அதிதீவிர சிவ பக்தன். ஏராளமான சிவாலயங்களை அமைத்து சைவத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டான். தில்லை நடராஜர் கோவிலில் தீட்சிதர்களால் பூட்டி வைக்கப்பட்டிருந்த பன்னிரண்டு திருமுறைகளை மீட்டெடுத்து அதைத் தொகுத்து உலகிற்கு கொடுத்துச் சென்றவன் ராஜ ராஜனே. அவர் கொண்டிருந்த தீவிர சிவ பக்தியின் காரணமாக பண்டித சோழன், சிவபாதசேகரன் என பல பட்டப்பெயர்கள் அவருக்கு உண்டு.

1034th Raja Raja Cholan Sadhaya Vizha Function-News4 Tamil Latest Online Tamil News Today
1034th Raja Raja Cholan Sadhaya Vizha Function-News4 Tamil Latest Online Tamil News Today

அந்த சிவபாதசேகரன் தனது இறுதிக்காலத்தில் சோழ தேசத்தின் ஆட்சிப்பொறுப்பை தனது மகன் ராஜேந்திர சோழனிடம் ஒப்படைத்து விட்டு தவ வாழ்க்கையை மேற்கொண்டு சிவ வழியில் முக்தி அடைந்த இடம் தான் சிவபாதசேகர மங்களம் அதுவே இன்று திருமாளிகை பள்ளிப்படை என்று அறியப்படுகின்ற கும்பகோணம் அருகில் உள்ள உடையாளூர் ஆகும்.

ராஜ ராஜனின் சதய விழா பல நூற்றாண்டுகளுக்கு பிறகு சமீப காலமாக மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான 1034 ஆம் ஆண்டு சதயவிழா 05/11/2019 மற்றும் 06/11/2019 ஆகிய இரு தினங்களில் நடைபெறுகிறது. விழாவினை தலைமை தாங்கி நடத்துபவர் சோழ வம்சத்தின் இன்றைய வாரிசான பிச்சாவரம் பாளையக்காரர் வம்சாவளியின் வாரிசு மகாராஜா ஸ்ரீ மன்னர் மன்னன் சூரப்ப சோழகனார் 06/11/2019 அன்று காலை கொடியேற்றி விழாவினை தொடங்கி வைக்கிறார்.

சோழர்களின் குல தெய்வமான தில்லை நடராஜர் ஆலயத்தில் சோழ அரசர்களுக்கு மட்டுமே காலம் காலமாக வழங்கப்படும் முடிசூட்டும் உரிமையும், சோழ மண்டகப்படி செய்யும் முழு உரிமையும் பெற்றவர் இவர் வம்சா வழியினரே. இவரே நேரடியாக வந்து விழாவினை நடத்தி வைப்பது விழாவின் தனிச்சிறப்பு . சதய நட்சத்திரத்தின் நாளான அன்று புதிதாக வடிவமைக்கப்பட்ட 127 கிலோ எடையிலான பஞ்சலோக ராஜ ராஜன் சிலை அவரது பள்ளிப்படையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

1034th Raja Raja Cholan Sadhaya Vizha Function-News4 Tamil Latest Online Tamil News Today
1034th Raja Raja Cholan Sadhaya Vizha Function-News4 Tamil Latest Online Tamil News Today

சேர, சோழ, பாண்டிய, பல்லவ வழி வந்த ஷத்திரியர்களின் வாரிசுகள் புடை சூழ திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பாடிய படையாட்சி பதிகம் பாடுவதில் தொடங்கி , ஒவ்வொரு நிகழ்வும் அச்சு அசலாக மன்னர்கள் கால முழுமையான ஷத்திரிய விழாவாகவே உடையாளூரில் சதயவிழா நடைபெறுகிறது.