Friday, September 20, 2024
Home Blog Page 4911

கேரளாவில் கடவுள், தமிழகத்தில் மட்டும் நாத்திகரா? ஹெச்.ராஜா கேள்வி

0

கேரளாவில் கடவுள், தமிழகத்தில் மட்டும் நாத்திகரா? ஹெச்.ராஜா கேள்வி

தெய்வப்புலவர் திருவள்ளுவர் இந்துமத கடவுளா? அல்லது மதச்சார்பற்றவரா? அவரது உடை காவியா? அல்லது வெள்ளையா? அவர் முனிவரா? அல்லது சாதாரண மனிதரா? என்பது குறித்த ஆராய்ச்சிகளை கடந்த சில நாட்களாக தமிழக அரசியல்வாதிகள் செய்து வருகின்றனர்

அரசியல்வாதிகள் பொது பணி செய்வதற்கு எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது, திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்து வருவது உண்மையான திருவள்ளுவரின் பக்தர்களுக்கு பெரும் வருத்தமாக உள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள ஒரு பகுதியினர் திருவள்ளுவரை கடவுள் போல் வழிபட்டு வருவதாகவும் கேரளாவில் வள்ளுவரை இந்துக் கடவுளாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் தமிழகத்தில் அவரை இந்துவாக கூட பார்க்கப்படுவதை குற்றம் சொல்வது ஏன்? என்றும் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது; தமிழுக்கு பெருமையாக இருக்கின்ற திருவள்ளுவருக்கு தமிழ்நாட்டில் ஒரே ஒரு கோவில் தான் (மைலாப்பூர்), ஆனால் கேரளாவில் மட்டும் திருவள்ளுவருக்கு 42 கோவில்கள் உள்ளன. கேரள மக்கள் அவரை இந்து கடவுளாக வழிபடுகிறார்கள். தமிழ்நாட்டில் அவரை இந்து என்றாலே மிகப்பெரிய குற்றமாக பார்க்கப்படுவது ஏன்? என்று பதிவு செய்துள்ளார்.

கேரளாவிலுள்ள முவட்டுப்புழா என்ற பகுதியில் உள்ள மக்கள் திருவள்ளுவருக்கு கோவில்கள் எழுப்பி தினமும் வழிபட்டு வருகின்றனர். குறிப்பாக மலையாள மாதத்தின் முதல் நாளும் திருக்குறளை பாடல் போல் பாடி வழிபட்டு வருகின்றனர். அவரை தங்களது குல தெய்வம் போல் இந்த பகுதியினர் வழிபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி கேரளாவில் மொத்தம் திருவள்ளுவருக்கு என 42 கோயில்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கூட திருவள்ளுவருக்கு மயிலாப்பூரில் மட்டும் ஒரே ஒரு கோவில் தான் உள்ளது

கேரளாவில் உள்ள மக்கள் இந்துக் கடவுளாக திருவள்ளுவரையே பார்த்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் அவரை இந்து என்று கூறினால் மிகப்பெரிய குற்றமாக பார்க்கப்படுவது ஏன் என்ற ஹெச்.ராஜாவின் கேள்விக்கு திராவிடக் கட்சியினர் என்ன பதில் அளிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தாய்லாந்தில் ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயுடன் பிரதமர் மோடி சந்திப்பு

0

தாய்லாந்தில் ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயுடன் பிரதமர் மோடி சந்திப்பு

தாய்லாந்து நாட்டில் நடைபெறும் 16வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி ஜப்பான் பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு, கிழக்கு ஆசிய உச்சி மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி தாய்லாந்து சென்றிருக்கிறார். இந்நிலையில் ஆசியான் உச்சி மாநாடு நிறைவடைந்த நிலையில், அடுத்து கிழக்கு ஆசிய உச்சி மாநாடு நடந்தது.

நடந்து முடிந்த ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகளுக்கு இடையே பிரதமர் மோடி பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார். அந்த வகையில் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயையும் நேற்று காலையில் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்தனர். மேலும் மியான்மர் தலைவர் ஆங்சான் சூகியையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைப் போல ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனை சந்தித்த பிரதமர் மோடி, இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் பற்றியும் அவருடன் விவாதித்தார்.

பின்னர் வியட்நாம் பிரதமர் நுயன் ஜுவான் பக்கையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினிக்கு அறிவிக்கப்பட்ட விருதுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? ஒரு அலசல்

0

ரஜினிக்கு அறிவிக்கப்பட்ட விருதுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? ஒரு அலசல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கோல்டன் ஐகான் விருது சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தபோது, திரையுலகைச் சேர்ந்த பலர் பாராட்டினாலும் அரசியல்வாதிகள் சிலர் இதை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்த்து எதிர்ப்பு தெரிவித்தனர்

ரஜினிகாந்த் பாஜகவின் முகமாக இருப்பதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டு இருப்பதாகவும், ரஜினியின் பிரபலத்தை பாஜக பயன்படுத்திக் கொள்ளவே இந்த விருதை கொடுத்து அவரை தனது பக்கம் இழுக்க முயற்சிப்பதாகவும் கூறிவருகின்றனர்

இதே மத்திய அரசு கடந்த காலங்களில் ரஜினிகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் பத்மவிபூஷன் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகியவற்றை வழங்கியுள்ளது. அப்பொழுது எந்த திரையுலகினரும் எந்த அரசியல்வாதியும் எந்தவித எதிர்ப்பையும் காட்டவில்லை. ஆனால் தற்போது மட்டும் ஐகான் விருது பெறும்போது எதிர்ப்பு தெரிவித்து இருப்பது ஏன்? என்ற கேள்வி எழுகிறது

ரஜினிகந்த் விரைவில் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ளதால் தான் இந்த எதிர்ப்பு கிளம்பி உள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை ரஜினியின் அரசியல் அறிவிப்பு இல்லாமல் இருந்திருந்தால் எந்த அரசியல்வாதியும் இந்த விருதுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க மாட்டார்கள் என்றே கூறப்படுகிறது

இந்த விருதை கமலுக்கு கொடுத்திருக்கலாம் கமலை விட ரஜினிகாந்த் என்ன சாதனை செய்தார்? என்று கேள்வி கேட்பவர்களுக்கு ஒரு சின்ன விளக்கம். ஐகான் விருது என்பது உலகப் புகழ்பெற்ற பிரபலங்களுக்கு கொடுக்கும் விருது. இன்று உலக அளவில் பிரபலமாக இருப்பது ரஜினியா? கமலா? என்ற ஒரு கேள்வியை எழுப்பினால் ஒரு சின்ன குழந்தையை கேட்டால் கூட ரஜினிகாந்த் என்று தான் பதில் சொல்லும்

உலகின் சிறந்த நடிகர் என்ற விருது என்றால் கமலுக்கு தாராளமாக கொடுக்கலாம் ஆனால் உலகின் மிகவும் பிரபலமான பிரபலமானவர் என்ற ஐகான் விருது ரஜினிக்கு கொடுப்பது பொருத்தமானதுதான் என்பதே நடுநிலையாளர்களின் பதில். அரசியல் கண்ணாடி இன்றி இந்த விருதை பார்த்தால் கண்டிப்பாக இந்த விருதுக்கு ரஜினிகாந்த் பொருத்தமானதுதான் என்பது அனைவருக்கும் புரியும்

திருவள்ளுவர் திமுக தலைவர் அல்ல: பாஜக பிரமுகர் ஆவேசம்!

0

திருவள்ளுவர் திமுக தலைவர் அல்ல: பாஜக பிரமுகர் ஆவேசம்!

கடந்த இரண்டு நாட்களாக திருவள்ளுவர் இந்துவா? அல்லது வேற்று மதத்தைச் சேர்ந்தவரா? திருவள்ளுவரின் உடை வெள்ளையா? அல்லது காவியா? என்ற பிரச்சனை திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜக இடையே காரசாரமாக நடைபெற்று வருகிறது

இந்த பிரச்சனையால் நாட்டு மக்களுக்கு எந்தவித பிரயோஜனமும் இல்லை என்றாலும் இரு தரப்பினரும் ஆவேசமாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதன் உச்சமாக தஞ்சை அருகே உள்ள பிள்ளையார்பட்டி என்ற இடத்திலிருந்த திருவள்ளுவர் சிலைக்கு அவமதிப்பும் நடந்துள்ளது. இந்த அவமதிப்பை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் கண்டித்து உள்ளதால் இந்த அவமதிப்பை செய்தது யார்? என்ற கேள்வி எழுந்து உள்ளது

இந்த நிலையில் திருவள்ளுவர் பிரச்சனைக்கு முடிவே இல்லாதவாறு இதன் வாக்குவாதம் நீடித்து கொண்டிருக்கும் நிலையில் பாஜக பிரமுகர் முரளிதரராவ் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில், ‘திருவள்ளுவர் ஒரு துறவி என்றும் திமுக தலைவர் அல்ல என்றும் கூறியுள்ளார்.

மேலும் உலகளாவிய மனித குலத்திற்கான மதிப்பீடுகளுடன் வாழ்ந்தவர் திருவள்ளுவர் என்றும், அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்க நினைப்பதை திமுக கைவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

வழக்கம்போல் இந்த டுவீட்டிற்கும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. முரளிதரராவின் இந்த டுவீட்டுக்கு விரைவில் திமுக தரப்பில் இருந்து பதிலடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

விஜய்சேதுபதி படத்திற்கு ’விஜய்சேதுபதி’ என்றே டைட்டில்!

0

விஜய்சேதுபதி படத்திற்கு ’விஜய்சேதுபதி’ என்றே டைட்டில்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ’சங்கத்தமிழன்’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாக இருப்பதாக அறிக்கை அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்த படம் தீபாவளி பட்டியலில் இருந்து பின்வாங்கி நவம்பர் மாதம் இரண்டாம் வாரம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் சமீபத்தில் ’சங்கத்தமிழன்’ திரைப்படம் நவம்பர் 15ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகள் தொடங்கியது. இந்த நிலையில் இந்தப் படம் வெளியாக இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது

மேலும் ’சங்கத்தமிழன்’ திரைப்படத்தை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியிட இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான விஜயா மூவிஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து தெலுங்கு டப்பிங் பணிகளும் முடிவடைந்து தற்போது தெலுங்கு படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ’சங்கத்தமிழன்’ படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு ’விஜய் சேதுபதி’ என்றே டைட்டில் வைத்து டைட்டில் போஸ்டரையும் சற்று முன்னர் படக்குழுவினர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்

ஒரு நடிகர் நடிக்கும் திரைப்படத்திற்கு அந்த நடிகரின் பெயரையே டைட்டிலாக வைப்பது என்பது எப்பொழுதாவது நடைபெறும் நிகழ்வு ஆகும். இதற்கு முன்னர் ரஜினிகாந்த் நடித்த ஒரு திரைப்படத்திற்கு ’அன்புள்ள ரஜினிகாந்த்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் மூவிஸ் தயாரிப்பில் விஜய்சேதுபதி, ராஷிகண்ணா, நிவேதா பேத்ராஜ், ஜான்விஜய், சூரி, நாசர் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் விஜய்சேதுபதி உள்பட படக் குழுவினர்களுக்கு திருப்புமுனையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக்கோப்பை டி20 போட்டி: முழு அட்டவணை வெளியீடு

0

உலகக்கோப்பை டி20 போட்டி: முழு அட்டவணை வெளியீடு

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 2007ஆம் ஆண்டு ஆரம்பித்த நிலையில் இதுவரை 6 டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில் ஏழாவது உலகக் கோப்பை டி20 ரிக்கெட் போட்டியின் முழு அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது

இந்த போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது என்பதும் வரும் 2020ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டி நவம்பர் 15ஆம் தேதி முடிவடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த போட்டியின் முழு அட்டவணையை தற்போது பார்ப்போம்

முதல் சுற்று (இந்திய நேரப்படி)

அக்டோபர் 18: இலங்கை – அயர்லாந்து, கார்டினியா பார்க், தெற்கு ஜீலாங் – 8:30 காலை

அக்டோபர்18: பப்புவா நியூ கினியா, – ஓமன், கார்டினியா பார்க், தெற்கு ஜீலாங்- 1.30 பிற்பகல்

அக்டோபர் 19: வங்காள தேசம் – நமீபியா பெல்லரைவ் ஓவல், டாஸ்மானியா -8:30 காலை

அக்டோபர் 19: நெதர்லாந்து – ஸ்காட்லாந்து , பெல்லரைவ் ஓவல், டாஸ்மானியா-1.30 பிற்பகல்

அக்டோபர்20: அயர்லாந்து- ஓமன் கார்டினியா பார்க், தெற்கு ஜீலாங்- -8:30 காலை

அக்டோபர்20: இலங்கை – பப்புவா நியூகினியா, கார்டினியா பார்க், தெற்கு ஜீலாங் -1.30 பிற்பகல்

அக்டோபர் 21: நமீபியா – ஸ்காட்லாந்து பெல்லரைவ் ஓவல், டாஸ்மானியா- 8:30 காலை

அக்டோபர் 21: வங்காள தேசம்- நெதர்லாந்து , பெல்லரைவ் ஓவல், டாஸ்மானியா -1.30 பிற்பகல்

அக்டோபர் 22: நியூ பப்புவா கினியா- அயர்லாந்து கார்டினியா பார்க், தெற்கு ஜீலாங் – 8:30 காலை

அக்டோபர் 22: இலங்கை – ஓமன் ,கார்டினியா பார்க், தெற்கு ஜீலாங் -1.30 பிற்பகல்

அக்டோபர் 23: நெதர்லாந்து – நமீபியா பெல்லரைவ் ஓவல், டாஸ்மானியா- 8:30 காலை

அக்டோபர் 23: வங்காள தேசம -ஸ்காட்லாந்து பெல்லரைவ் ஓவல், டாஸ்மானியா-1.30 பிற்பகல்

சூப்பர் 12 குழுக்கள் பின்வருமாறு:

குரூப் ஏ: ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்,வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, குரூப் ஏ மற்றும் குரூப் பி

குரூப் பி: இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், குரூப் பி மற்றும் குரூப் ஏ

அக்டோபர் 24: ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் , சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி -1.30 பிற்பகல்

அக்டோபர் 24: இந்தியா- தென்னாப்பிரிக்கா பெர்த் மைதானம் பெர்த்- 4.30 மாலை

அக்டோபர் 25: குரூப் 1 தகுதி- குருப் பி தகுதி , ப்ளண்ட்ஸ்டோன் அரினா, ஹோபார்ட் -8:30 காலை

அக்டோபர் 25: நியூசிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் மெல்போர்ன் -1.30 பிற்பகல்

அக்டோபர் 26: ஆப்கானிஸ்தான்- குரூப் பி தகுதி , பெர்த் மைதானம் பெர்த்- 11:30 காலை

அக்டோபர் 26: இங்கிலாந்து – குரூப் ஏ தகுதி , பெர்த் மைதானம் பெர்த் – 4.30 மாலை

அக்டோபர் 27: நியூசிலாந்து -குரூப் பி தகுதி , ப்ளண்ட்ஸ்டோன் அரினா, ஹோபார்ட் -1.30 பிற்பகல்

அக்டோபர் 28: ஆப்கானிஸ்தான் – குரூப் ஏ தகுதி , பெர்த் மைதானம் பெர்த் – 11:30 காலை

அக்டோபர் 28: ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் பெர்த் மைதானம் பெர்த்- 4.30 மாலை

அக்டோபர் 29: பாகிஸ்தான் -குரூப் ஏ தகுதி , சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி -8:30 காலை

அக்டோபர் 29: இந்தியா -குரூப் பி தகுதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் மெல்போர்ன் -1.30 பிற்பகல்

அக்டோபர் 30: இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா , சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி- 1.30 பிற்பகல்

அக்டோபர் 30: வெஸ்ட் இண்டீஸ் – குரூப் பி தகுதி , பெர்த் மைதானம் பெர்த் -4.30 மாலை

அக்டோபர் 31: பாகிஸ்தான் – நியூசிலாந்து பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானம், பிரிஸ்பேன்- 8:30 காலை

அக்டோபர் 31: ஆஸ்திரேலியா – குரூப் ஏ தகுதி , பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானம், பிரிஸ்பேன் -9:30 காலை

நவம்பர் 1: தென்னாப்பிரிக்கா -ஆப்கானிஸ்தான், அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்- 9:00 காலை

நவம்பர் 1: இந்தியா- இங்கிலாந்து மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் மெல்போர்ன் -1.30 பிற்பகல்

நவம்பர் 2: குரூப் 2 – குரூப் ஏ தகுதி , சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி-8:30 காலை

நவம்பர் 2: நியூசிலாந்து – குரூப் ஏ தகுதி , பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானம், பிரிஸ்பேன்-2.30 பிற்பகல்

நவம்பர் 3: பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்- – 9:00 காலை

நவம்பர் 3: ஆஸ்திரேலியா – குரூப் பி தகுதி , அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்- 2.00 பிற்பகல்

நவம்பர் 4: இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானம், பிரிஸ்பேன்- 2.30 பிற்பகல்

நவம்பர் 5: தென்னாப்பிரிக்கா – குரூப் பி தகுதி , அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்-9:00 காலை

நவம்பர் 5: இந்தியா -குரூப் ஏ தகுதி, அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட் -2.00 பிற்பகல்

நவம்பர் 6: பாகிஸ்தான்-குரூப் பி தகுதி, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் மெல்போர்ன் -8:30 காலை

நவம்பர் 6: ஆஸ்திரேலியா -நியூசிலாந்து மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் மெல்போர்ன் -1.30 பிற்பகல்

நவம்பர் 7: இங்கிலாந்து -குரூப் ஏ தகுதி, அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட் -9:00 காலை

நவம்பர் 7: வெஸ்ட் இண்டீஸ் – குரூப் ஏ தகுதி , மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் மெல்போர்ன் -1.30 பிற்பகல்

நவம்பர் 8: தென்னாப்பிரிக்கா – குரூப் பி தகுதி சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி- 8:00 காலை

நவம்பர் 8: இந்தியா – ஆப்கானிஸ்தான் சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி -2.00 பிற்பகல்

அரை இறுதி

நவம்பர்11: கால் இறுதியில் வெற்றி பெறும் அணிகள், சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி-1.30 பிற்பகல்

நவம்பர் 12: , கால் இறுதியில் வெற்றி பெறும் அணிகள் அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட் -2.00 பிற்பகல்

இறுதி போட்டி

நவம்பர் 15: அரை இறுதியில் வெற்றி பெறும் அணிகள் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன்-1.30 பிற்பகல்

தாசில்தாரை எரித்துக்கொன்ற கொடூரம் நாட்டையே அதிரவைத்த அதிர்ச்சி சம்பவம்!

0

தாசில்தாரை எரித்துக்கொன்ற கொடூரம் நாட்டையே அதிரவைத்த அதிர்ச்சி சம்பவம்!

தெலங்கானா ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள அப்துல்லாபூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியராக பணி புரிந்து வந்தார் விஜயா ரெட்டி!

நிலப்பிரச்சனைக்காக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த இளைஞர் வட்டாட்சியர் விஜயா ரெட்டி அறைக்குள் சென்று பேசிக் கொண்டிருந்தார்.

வழக்கமான புகார் தொடர்பான விஷயங்களில் பேசிக்கொண்டு இருக்கலாம் என்று அலுவலக அதிகாரிகள் தங்களது பணிகளை செய்து கொண்டிருந்தனர்.
திடீரென அறைக்குள் இருந்து ஐயோ! அம்மா! காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள் என்ற விஜயா ரெட்டியின் மரணக்குரல் கேட்டதை தொடர்ந்து சத்தம் கேட்டு ஓடிவந்த பணியில் இருந்த ஊழியர்கள் தாசில்தார் அறை கதவை திறந்து பார்த்த போது விஜயா ரெட்டி தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தார்.

அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர் மீதும் தீப்பற்றியதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
ஊழியர்கள் வட்டாட்சியர் விஜயா ரெட்டி மீது மீது எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்து அலுவலகத்திலேயே துடிதுடித்து கொடூரமான முறையில் உயிரிழந்தார்.

வட்டாட்சியர் விஜயா ரெட்டி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை இளைஞர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.
அவரை கைது செய்துள்ள போலீசார், விஜயா ரெட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ரங்கா ரெட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், எதற்காக விஜயா ரெட்டியை இளைஞர் கொலை செய்தார் என்பதை தங்களது பாணியில் விசாரணையை துவக்கி உள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நடிகைக்கு வந்த குழந்தை ஆசை: ராகவா லாரன்ஸ் இடம் கேட்ட ஐடியா!

0

பிக்பாஸ் நடிகைக்கு வந்த குழந்தை ஆசை: ராகவா லாரன்ஸ் இடம் கேட்ட ஐடியா!

பிக்பாஸ் 1 நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வந்தவர் நடிகை காஜல். இவர் பிக்பாஸ் 3 ரன்னரின் முன்னாள் மனைவி ஆவார். இந்த நிலையில் தற்போது காஜலுக்கு ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனது டுவிட்டரில் ராகவா லாரன்ஸ் இடம் ஆலோசனை கேட்டுள்ளார்.

தான் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்புவதாகவும், குழந்தை இல்லாமல் வாழ்க்கை முழுமையடையவில்லை என்றும், குழந்தை தத்தெடுப்பது இந்த காலத்தில் எளிதான காரியமும் அல்ல என்பதால் அதுகுறித்து உங்கள் உதவி தேவை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க நீங்கள் உதவி செய்தால் அந்தக் குழந்தையின் தேவைகளை தன்னால் பூர்த்தி செய்ய முடியும் என்றும், இந்த உதவியை தனக்கு செய்தால் காலம் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருப்பேன் என்றும் நடிகை காஜல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சுஜித் ஆழ்துளை குழாயில் விழுந்து மரணம் அடைந்தபோது அவனது பெற்றோருக்கு ஒரு குழந்தையை தத்தெடுத்து அந்த குழந்தைக்கு சுஜித் என்று பெயர் வைத்து வளர்க்குமாறு டுவிட்டரில் ராகவா லாரன்ஸ் ஆலோசனை கூறியிருந்தார் என்பதும் இந்த டுவீட்டை பார்த்துதான் காஜல் தற்போது ராகவா லாரன்ஸிடம் இந்த உதவியை கேட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்த்தக்கது

இந்தியாவின் தலைநகர் ஆகின்றதா சென்னை? பரபரப்பு தகவல்!

0

இந்தியாவின் தலைநகர் ஆகின்றதா சென்னை? பரபரப்பு தகவல்!

டெல்லியில் காற்றின் தரம் மிக குறைந்து கொண்டு செல்வதால் டெல்லியை விட்டு வேறு நகரத்திற்கு செல்ல சுமார் 40% சதவிகித பொதுமக்கள் விரும்புவதாக சமீபத்தில் ஒரு சர்வே தெரிவித்துள்ளது. நாட்டின் தலைநகருக்கே இந்த கதியா? என்பதுதான் அனைவரின் கேள்வியாக உள்ளது

இந்த நிலையில் டெல்லி நகரம் உண்மையில் தலைநகரம் என்று அழைக்கப்படுவதற்கு தகுதியானதா? என்று பல கேள்வி பலர் மனதில் எழுந்துள்ளது. ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து இணையதளங்களில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் பெரும்பாலானோர் தலைநகரை மாற்றலாம் என்ற கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா உள்பட ஒருசில நாடுகள் தலைநகரை மாற்ற முடிவு செய்திருப்பதாக கூறப்படும் நிலையில் இந்தியாவில் தலைநகரை மாற்றுவதாக இருந்தால் எந்த நகரை தலைநகராக தேர்வு செய்யலாம் என்ற ஒரு கருத்தும் நெட்டிசன்களிடையே நிலவி வருகிறது

இந்தியாவின் புதிய தலைநகர் குறித்த பட்டியலில் கொச்சி, பெங்களூரு, நாக்பூர், ஐதராபாத் மற்றும் சென்னை போன்ற நகரங்கள் பரிசீலிக்கப்படுகிறது. இந்தியாவின் தலைநகர் மாற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டு, அந்த தலைநகர் சென்னையாக தேர்வு செய்யப்பட்டால்.. கற்பனையாக நினைத்து பார்க்க்ககூட இனிமையாக இருக்கின்றது அல்லவா? ஆனால் இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்

திருவள்ளுவரை பெரியாராக மாற்றிய மு.க. ஸ்டாலின்! அதிர்ச்சியில் உறைந்த திராவிட கூடாரங்கள்

0

திருவள்ளுவரை பெரியாராக மாற்றிய மு.க. ஸ்டாலின்! அதிர்ச்சியில் உறைந்த திராவிட கூடாரங்கள்

புதுக்கோட்டை விராச்சிலையில் நேற்று நடைபெற்ற திமுக பிரமுகர் காசிவிசுவநாதன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மாமனாரான காசிவிஸ்வநாதனை மணமகன் என்று பேசியதால், சற்றுநேரம் திருமணத்தில் வந்தவர்களை அதிர்ச்சி அடையச் செய்தார்,. இது சமூக வலைத்தளங்களில் கேலி கிண்டலுக்கு உண்டாகி வருகிறது,. இந்த சம்பவம் மறைவதற்குள் மேலும் ஒரு உளறல் பேச்சை ஸ்டாலின் பேசி சமூகவலைத்தள வாசிகளுக்கு விருந்து அளித்துள்ளார்.

இன்று திருவள்ளுவர் தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை மர்ம நபர்களால் அவமதிப்பு செய்யபட்டிருப்பதால் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.,

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மு.க. ஸ்டாலின்,. சிலை அவமதிப்புக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார்,. அவர் திருவள்ளுவர் படத்திற்கு காவி வேசம், திருநீறு அணிவித்ததற்கு ஏற்கனவே டிவிட்டரில் கண்டனம் தெரிவித்திருந்தேன். தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் தந்தை பெரியாரின் சிலை அவமதிக்கப்பட்டது கண்டிக்கதக்கது. இது தொடர்புடையவர்கள் மீது உடனடியாக கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவள்ளுவர் படத்திற்கு காவி வேசம் போட்டு இருப்பதற்கும், சிலை அவமதிப்பிற்கும் தொடர்புள்ளது. திருவள்ளுவரை, பெரியார் என கூறி ஸ்டாலின் உளறியதை கேட்டு அங்கிருந்த திமுகவினரும் செய்தியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்,.

நமக்கு ஏன் வம்பு,. தலைவர் எது சொன்னாலும் சரியாக தான் இருக்கும் துண்டு சீட்டு எழுதி கொடுத்தவனை தான் நாம் வெளுத்து வாங்க வேண்டும் என்று திமுகவினர் நினைத்தார்களோ! என்னவோ தெரியவில்லை.