Saturday, September 21, 2024
Home Blog Page 4919

மேயர் கொலை வழக்கில் திமுக பெண் பிரமுகர் கணவருடன் கைது! திடுக்கிடும் தகவல்கள்

0

மேயர் கொலை வழக்கில் திமுக பெண் பிரமுகர் கணவருடன் கைது! திடுக்கிடும் தகவல்கள்

நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் உமாமகேஸ்வரி வயது 62. அவரது கணவர் முருகசங்கரன் வயது 71. கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி இவர்கள் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர்.

அப்போது வீட்டில் இருந்த மாரி என்ற பணிப்பெண்ணும் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது,.

நகை பணத்திற்காக கொள்ளையர்கள் கொலையை செய்திருக்கலாம் என்று முதலில் காவல்துறையின் சந்தேகப்பட்டனர். இது தொடர்பாக மூன்று தனிப்படை போலீசார் பல கோணங்களில் கொலையாளியை கண்டுப்பிடிக்க விசாரணையை மேற்கொண்டனர்.

கூடவே, அரசியல் போட்டி காரணமாக கூலிப்படையை அனுப்பி யாராவது கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து, உமா மகேஸ்வரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அவர்களது தீவிர விசாரணையில் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள் மகன் கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவர் தான் அரசியல் பொறாமை காரணமாக கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் தி.மு.க. பிரமுகர் சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்று தெரிகிறது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசின் மீட்புப் பணியை திமுக தலைவர் ஸ்டாலின் குறை கூறி வருகிறார்-தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா

0

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசின் மீட்புப் பணியை திமுக தலைவர் ஸ்டாலின் குறை கூறி வருகிறார்-தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அரசின் மீட்புப் பணியை திமுக தலைவர் ஸ்டாலின் குறை கூறி வருகிறார் என தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருச்சி மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் இரண்டு வயது சுஜித் வில்சன் தவறி விழுந்த செய்தி அறிந்ததும் குழந்தை சுஜித்தை பாதுகாப்பாக மீட்பதற்காக தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. ஆனால் அனைத்து நடவடிக்கைகளும் பலன் அளிக்காமல் போனது துரதிர்ஷ்டவசமானது.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், இரவு பகலாக, மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். கடினமான பாறைகள் இருந்ததால், மீட்புப் பணிகளில், பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. அவற்றை வல்லுநர் குழு உதவியுடன் சரி சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், சிறுவனைக் காப்பாற்ற முடியாமல், சடலமாக மீட்கப்பட்ட செய்தி, மிகுந்த மன வேதனையை அளித்தது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அரசின் மீட்புப் பணியை திமுக தலைவர் ஸ்டாலின் குறை கூறி வருகிறார். ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தையை உயிருடன் மீட்க கிடைத்த நேரங்களில் எல்லாம் மொத்தமாக வீணடிக்கப்பட்டது என்றும் மீட்பு நடவடிக்கை குறித்து அனுபவம் வாய்ந்தவர்களை அழைத்துப் பேசி ஒரு வியூகம் வகுக்கப்படவில்லை என்றும் சில அமைச்சர்கள் சம்பவ இடத்தில் நின்றுகொண்டு மீட்புப் பணிகளில் குறுக்கிட்டுக் கொண்டிருந்ததையும் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் காண முடிந்தது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும், சுஜித்தை மீட்க ராணுவம் அல்லது துணை ராணுவத்தை ஏன் முன்கூட்டியே அழைக்கவில்லை என்றும் சுஜித்தைக் காப்பாற்ற முடியாத அரசு தமிழக மக்களை எப்படி காப்பாற்றப் போகிறது என்றும் கேள்விகள் எழுப்பியுள்ளார்.

* தமாகா இளைஞரணி சார்பாக நான் உங்களிடம் கேட்டுக் கொள்வதெல்லாம் சிறுவன் விழுந்த நான்கு நாட்களில், அரசினுடைய செயல்பாடுகளையும், மீட்புக் குழுவினருடைய செயல்பாடுகளையும் குறை கூற முடியாத எதிர்க்கட்சித் தலைவர் ஏன் குழந்தை துரதிர்ஷ்டவிதமாக மீட்கப்படாத போது கற்பனை கலந்த புகாரை முன் வைக்கிறீர்கள்?

* தமிழ் தமிழ் என்று உச்சரிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் தமிழக காவல்துறை, தமிழக தீயணைப்புத் துறை மற்றும் தமிழக வல்லுநர்களையும் நம்பாதது வியப்பாக உள்ளது.

* மேலும் ஏன் ராணுவத்தையும், துணை ராணுவத்தையும் அழைக்கவில்லை என்று கேட்கிறீர்கள்? சென்னை வெள்ளப்பெருக்கு, ஒக்கி புயல், கஜா புயல் மற்றும் பல ஆபத்தான காலகட்டங்களில் NDRF மற்றும் SDRF வீரர்கள் தனது உயிரைப் பணையம் வைத்து மக்களைக் காப்பாற்றினார்கள் என்பது நாடறிந்த விஷயம். அப்படிப்பட்ட பேரிடர் மீட்புக் குழுவினர் மீது சந்தேகப்படலாமா?

* மீட்பு நடவடிக்கையின் போது ஒவ்வொரு கட்டத்திலும் தொழில்நுட்ப வல்லுநர்களை அணுகித்தான் மீட்பு நடவடிக்கை நடைபெற்றது. இதை அனைத்து தொலைக்காட்சிகளும் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை தெளிவாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தது. அப்படி என்றால் இங்கு உள்ள தொழில் நுட்ப வல்லுநர்கள் யாரும் சிறந்தவர்கள் இல்லையா?

* நீங்கள் பல ஆண்டுகால ஆட்சியில் துணை முதல்வராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும், பல்வேறு துறைகளில் அமைச்சராகவும் பொறுப்பு வகித்தீர்கள். அப்போது தங்கள் ஆட்சிக் காலத்திலிருந்து இன்றுவரை தொழில்நுட்ப வல்லுநர்கள் தமிழகத்தில் கிடையாதா? அதை நீங்கள் உருவாக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? இது போல் பல்வேறு விஷயங்கள் தங்கள் பேட்டியின் போது வெளிப்படுகின்றன.

நாங்கள் எதிர்க்கட்சித் தலைவரைக் கேட்டுக்கொள்வது பல அறிஞர்களையும் வல்லுநர்களையும், அரசியல் தலைவர்களையும் உருவாக்கியது தமிழகம். நீங்கள் அரசியலில் ஆளும் கட்சியைக் குறைகூறுவது சகஜம் தான். ஆனால் ஒரு போதும் நமது வல்லுநர்களைக் குறை கூறாதீர்கள்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் அண்டை மாநிலம் போல மக்களுக்கு ஆபத்து ஏற்படும் போது ஆளும் கட்சியோடு சேர்ந்து மக்களைக் காப்பாற்றும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமே தவிர குறை சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. எனவே மரியாதைக்குரிய திமுக தலைவர் ஸ்டாலின் இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்த்து மக்களுக்கு நல்லது எது என்று ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்றும் யுவராஜா தெரிவித்துள்ளார்.

ஊரக வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கைகள் தேவை-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

0

ஊரக வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கைகள் தேவை-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஊரக வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கைகள் தேவை என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இந்தியாவின் பெருநகரங்கள் வியக்க வைக்கும் வகையில் வளர்ச்சியடைந்து வந்தாலும், அவை மக்களை மயக்க வைக்கும் வகையில் இல்லை; வெறுக்க வைக்கும் வகையில்தான் உள்ளன என்பது ஒரு கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது. நகரங்களில் இருந்து மக்கள் வெளியேறுவது வரவேற்கத்தக்கது தான் என்றாலும் அது விருப்பத்தின் அடிப்படையில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, புனே, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத் ஆகிய 8 பெருநகரங்கள், கொச்சின், லக்னோ, கான்பூர், இந்தூர் ஆகிய 4 வளர்ச்சியடைந்து வரும் மாநகரங்கள் ஆகியவை வாழ்வதற்கு வசதியானவையா? என்பது குறித்து ‘எகனாமிக் டைம்ஸ்’ இதழ் இணையதளம் மூலம் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

அதில் தெரியவந்துள்ள பெரும் அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவெனில், இந்தியாவின் பெரு நகரங்களில் வாழும் மக்களில் 65 விழுக்காட்டினர் பெருநகரங்களை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள 35 விழுக்காட்டினரில் 22 விழுக்காட்டினர் கருத்து தெரிவிக்காத நிலையில், 13 விழுக்காட்டினர் மட்டும் தான் பெரு நகரங்களில் தொடர்ந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அவர்களும் பெருநகரங்களில் தொடர்ந்து வாழ விரும்புவதன் காரணம் பெருநகரங்கள் மீதான ஈர்ப்பு அல்ல. மாறாக, தங்களின் சொந்த வீடு பெருநகரங்களில் இருப்பது, அதிக ஊதியத்தில் வேலை கிடைப்பது, நவீன மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் உள்ளன என்பவை தான்.

சென்னை போன்ற பெருநகரங்களை விட்டு வெளியேறுவதற்காக மக்கள் கூறும் இரு முக்கியக் காரணங்கள் வாழ்வதற்கான செலவு மிகவும் அதிகமாக இருப்பதும், வீடுகளின் விலைகள் அல்லது வாடகை மிகவும் அதிகமாக இருப்பதும் தான். இவை தவிர பாதுகாப்பற்ற சூழல், நெரிசல் ஆகியவையும் இதற்குக் காரணமாக உள்ளன.

இந்தியாவில் மட்டுமின்றி, தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே மிகவும் பாதுகாப்பான நகரம் சென்னை தான் என்றாலும் கூட, அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை அதிகமுள்ள பெருநகரங்களில் டெல்லி, மும்பைக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தையும், வாடகை அதிகமுள்ள நகரங்களில் ஐந்தாவது இடத்தையும் சென்னை பிடித்துள்ளது. கூடுதலாக குடிநீர் பற்றாக்குறை, பொதுப்போக்குவரத்து வசதி குறைபாடு ஆகியவை தான் சென்னையிலிருந்து மக்கள் வெளியேற நினைப்பதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.

பாமகவைப் பொறுத்தவரை பெருநகரங்களில் இருந்து வெளியேறி இரண்டாம் நிலை நகரங்களை நோக்கியும், கிராமப்புறங்களை நோக்கியும் மக்கள் செல்வது வரவேற்கத்தக்கதாகும். இதுதான் கிராமங்களை நோக்கி இடம்பெயர்தல் என்றழைக்கப்படுகிறது.ஆனால், பெருநகரங்களிலிருந்து மக்கள் வெளியேறுவது அவற்றின் மீதான வெறுப்பால் நிகழக்கூடாது; மாறாக இரண்டு – மூன்றாம் நிலை நகரங்கள், கிராமப்புறங்கள் ஆகியவற்றின் மீதான காதலால் நிகழ வேண்டும்.

இந்தியாவிலேயே அதிக அளவில் நகர்ப்புறமயமாக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு ஆகும். புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்க்கும் போது இது பெருமைப்பட வேண்டிய ஒன்றல்ல.

நகர்ப்புறமயமாக்கலை இரு வகையாக பிரிக்கலாம். முதலாவது கிராமப்புறங்கள் வளர்ச்சியடைந்து நகரங்களாக மாறுவதால் ஏற்படும் நகரமயமாக்கல், இரண்டாவது கிராமப்புறங்களில் வாழ்வாதாரங்கள் இல்லாததால் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பிழைப்புத் தேடி நகரங்களுக்கு செல்வதால் ஏற்படும் நகரமயமாக்கல்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரண்டாவது வகையான நகரமயமாக்கல் தான் அதிகமாக நடைபெறுகிறது. இது வளர்ச்சியின் அடையாளம் அல்ல…. மாறாக, வீக்கத்தின் வெளிப்பாடு ஆகும்.

தமிழ்நாட்டின் தொழில்துறை உற்பத்தியில் சுமார் 75% சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய தலைநகரப் பகுதிகளிலும், கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளிலும்தான் நடைபெறுகிறது. மீதமுள்ள 30% தொழில் உற்பத்தி மட்டும்தான் மாநிலத்தின் மீதமுள்ள மாவட்டங்களில் நடைபெறுகின்றன.

அவ்வாறு இருக்கும் போது விவசாயம் லாபகரமான தொழிலாக இருந்தால் மக்கள் சொந்த ஊர்களை விட்டு வெளியேற மாட்டார்கள்.

ஆனால், காலநிலை மாற்றம் மற்றும் அதைச் சார்ந்த விஷயங்களால் வறட்சியும், வெள்ளமும் கணிக்க முடியாத அளவுக்குச் சென்று விட்ட நிலையில், விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தகைய சூழலில் கிராமப்பகுதிகளில் வேலையில்லாத அனைவரும் தொழில் உற்பத்தி அதிகம் நடைபெறும் சென்னை, கோவை ஆகிய இடங்களுக்குத்தான் செல்வர். அதுதான் நகரமயமாக்கல் என்று கூறப்படுகிறது. இது நல்லதல்ல.

இன்னும் கேட்டால் சென்னை போன்ற பெருநகரங்கள் வாழத்தகுதியற்றவையாக மாறுவதற்கு காரணமே, சென்னையால் எந்த அளவுக்கு தாக்குப் பிடிக்க முடியுமோ, அதைவிட அதிக எண்ணிக்கையிலானோர் சென்னையில் வேலை தேடி குடியேறுவது தான்.

இச்சிக்கலுக்கு ஒரே தீர்வு வாழத்தகுந்த பகுதிகளாக உள்ள சிறு நகரங்கள், ஊரகங்கள் ஆகியவற்றை வாழ்வாதாரம் மிக்கவையாகவும் மாற்றுவதுதான். சென்னை போன்ற நகரங்களுக்கு யாரும் விரும்பி வருவதில்லை; வேறு வழியின்றி, வேலை தேடித் தான் வருகின்றனர். சென்னையில் கிடைப்பதை விட 40% குறைவான ஊதியம் சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் கிடைத்தால் அங்கு வாழ்வதையே மகிழ்ச்சியாக கருதுவதாக பெரும்பான்மை மக்கள் கூறுகின்றனர்.

எனவே, அதற்கேற்ற வகையில் தொழில் உற்பத்தியை தமிழகம் முழுவதும் பரலாக்குதல், வேளாண்மையை லாபம் தரும் தொழிலாக மாற்றுதல் ஆகியவற்றின் மூலம் நகரப்புறங்களில் உள்ள மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் ஊரகப் பகுதிகளை நோக்கி இடம்பெயரச் செய்ய முடியும். இதுதான் உண்மையான நகரமயமாக்கலாக அமைவதுடன் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வளர்ச்சியையும் உறுதி செய்யும்.

எனவே, அதற்கேற்ற வகையில் கொள்கைகளை வகுத்து செயல்பட மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்,” என்றும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தென்னை சர்க்கரை தென்னை தேன் அசத்தும் விவசாயிகள்! அதிக லாபத்தால் மகிழ்ச்சி

0

தென்னை சர்க்கரை தென்னை தேன் அசத்தும் விவசாயிகள்! அதிக லாபத்தில் மகிழ்ச்சி

தென்னையிலிருந்து சர்க்கரை மற்றும் தேனை எடுத்து கடலூர் மாவட்ட விவசாயிகள் அசத்தி வருகின்றனர்,

மதுவிலக்கு கொள்கையில் சில மாற்றங்களை செய்து தமிழக அரசு தென்னை மரத்திலிருந்து நீராபானம் எடுக்கலாம் என்று விதிமுறையை தளர்த்தியது.

இதனைத்தொடர்ந்து தென்னை விவசாயிகள் நீராபானம் எடுத்து வணிகரீதியாக விற்பனைக்கு விற்பனை செய்து வருகின்றனர், நீராபானம் கள்ளாக மாறாமல் இருக்க தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளுக்கு விவசாய அலுவலர்கள் பயிற்சி கொடுத்து வருகின்றனர்.

விவசாயிகளுக்கு வணிகரீதியாக லாபத்தை கொடுக்கும் வகையில் சென்னையிலிருந்து சர்க்கரை தயாரிக்கும் முறை மற்றும் தேன் எடுக்கும் முறையை கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு கற்றுக் கொடுத்து வருகின்றனர்,. இதன்மூலம் கூடுதலாக தென்னை மரத்திலிருந்து லாபம் பார்க்கலாம் என்று விவசாயத்துறை அலுவலர்கள் கூறிவருகின்றனர்,.

நீராபானம் எடுக்க தனி நபர் ஒருவருக்கு மட்டும் அனுமதி கிடைக்காது, சுமார் 250 தென்னை விவசாயிகள் ஒன்றிணைந்து தான் நீராபானம் எடுப்பதற்கான உரிமையை பெற முடியும் அதுவும் மாவட்ட ஆட்சியரின் நேரடி பார்வையில்தான் கொடுக்கப்படும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்,.

கடலூர் மாவட்ட விவசாயிகள் இதில் வெற்றி பெற்றால் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தி மாநிலம் முழுவதும் தென்னையிலிருந்து சர்க்கரை மற்றும் தேன் உற்பத்தி செய்ய ஊக்கம் அளிக்கப்படும் என்று விவசாய மற்றும் தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Gobackmodi ட்ரெண்ட் செய்பவர்களுக்கு மரண அடி கொடுக்க போகும் மோடி! கலக்கத்தில் திராவிட கூடாரங்கள்

0

#Gobackmodi ட்ரெண்ட் செய்பவர்களுக்கு மரண அடி கொடுக்க போகும் பிரதமர மோடி கலக்கத்தில் திராவிட கூடாரங்கள்

பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களின் சந்திப்பு பல்லவர் தேசமான மாமல்லபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது. உலக தலைவர்கள் அனைவரும் உற்று நோக்கிய இந்த சந்திப்பு நிகழ்வை தமிழகத்தில் அதுவும் மாமல்லபுரத்தில் நடத்தி உலகம் முழுவதும் தமிழர்களின் பாரம்பரியம் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பரப்பினார் பிரதமர் மோடி, மேலும் ஐநா சபையிலும், நாடாளுமன்றத்திலும் தமிழில் பேசி அனைவரின் பார்வையையும் தமிழகத்தின் பக்கம் திருப்பி தனி முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவது நாம் பெருமை கொள்ள வேண்டிய விஷயமாகும்.

அவர் நினைத்திருந்தால் உலக அரங்கில் இந்தி மொழியை பெருமைப்படுத்திப் பேசி இருப்பார், ஆனால் அவர் தமிழ்தான் சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி என்று அங்காங்கே குறிப்பிட்டு தமிழுக்குப் பெருமை சேர்த்து வருகிறார்,.

இத்தகைய சூழ்நிலையில் #GoBackModi என்று டிவிட்டரில் ட்ரெண்ட் செய்பவர்களையும், பலூன் விடும் தமிழக எதிர்க்கட்சிகளின் கூடாரத்தை கதறவிடும் அளவுக்கு இன்னொரு நிகழ்வு நடைபெற உள்ளது,.

பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் அவர்களின் சந்திப்பு மதுரையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நேரடியாக பார்த்துக்கொண்டே சந்திப்பு நிகழ்வு நிகழ்வு நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.,

இப்படி ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை பிரதமர் மோடி நடத்திக் காட்டினால் ஜல்லிக்கட்டை உலகமே அன்றைய தினம் உற்றுநோக்கும் அளவில் திருப்பிவிட்டு தமிழர்களின் வீரத்தையும் உலக அரங்கில் தலை நிமிரச் செய்து தமிழ் சமுதாயத்திற்கு மிகப்பெரிய தொண்டு ஆற்றுகிறார் என்பதில் மாற்றுக்கருத்து எவருக்கும் இருக்க முடியாது.

இப்படி ஒரு நிகழ்வு நடைப்பெற்றால் தமிழக எதிர்க்கட்சிகள் அதுவும் திராவிட கும்பல் என்று சொல்லிக்கொள்ளும் கூடாரங்கள் தமிழகத்தில் பாஜக எக்காலத்திலும் காலூன்ற முடியாது என்று சொல்லிக்கொண்டிருக்கும் திராவிட கூடாரங்கள் தமிழுக்கு மொழிக்கு என்றும் எதிர்ப்பாக செயல்படுகிறார் என்று ஆங்காங்கே கூட்டம் போட்டு கூவிக்கொண்டிருக்கும் கும்பலுக்கும் பிரதமர் மரணஅடி கொடுப்பார் என்பது தெளிவாக தெரிகிறது.

இந்தியா – சவுதி அரேபியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு கவுன்சில் ஒப்பந்தம் கையெழுத்து

0

இந்தியா – சவுதி அரேபியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு கவுன்சில் ஒப்பந்தம் கையெழுத்து

பாதுகாப்பு ஒத்துழைப்பு கவுன்சில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம், இந்தியா – சவுதி அரேபியா இடையே ஏற்கனவே நிலவும் வலுவான உறவுகள் மேலும் வலுப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர், அராப் நியூஸ் இதழுக்கு பேட்டி அளித்தார்.

மூன்று ஆண்டுகளில் சவுதி அரேபியாவுக்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.

இருநாடுகளும் ஜி-20-க்கு உட்பட்டு, சமத்துவமின்மையை குறைக்கவும், நீடித்த வளர்ச்சியை ஏற்படுத்தவும், சேர்ந்து பாடுபட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

எண்ணெய் விலைகள் நிலையாக இருப்பது உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்தது என்று கூறியுள்ள அவர், இந்தியாவின் எரிசக்தி தேவைகளுக்கு நம்பத்தகுந்த  முக்கிய ஆதாரமாக சவுதி அரேபியா திகழ்வதாகப் பாராட்டினார்.

தமக்கும், சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் இடையே நிலவும் தனிப்பட்ட உறவுகள் சிறப்பாக இருப்பதாக கூறிய பிரதமர், “2016-ஆம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு நான் முதன் முதலாக பயணம் செய்தபோது, நமது இருதரப்பு உறவுகளில் பிரமிக்கத்தக்க வளர்ச்சியை வெளிப்படையாகக் கண்டேன், நான் ஐந்து முறை பட்டத்து இளவரசரை சந்தித்து இருக்கிறேன். எனது முந்தைய சந்திப்புகள் குறித்து அவரிடம் விளக்கியிருக்கிறேன். இந்த முறை பயணத்தின்போதும் அவரைச் சந்திப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். சவுதி அரேபிய மன்னர் மேன்மை தங்கிய சல்மான், மேன்மை தங்கிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரது தலைமையின்கீழ், இந்தியாவுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுவுடன் வளரும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

“அண்டை நாடுகள் முதலில்”  என்பது எனது அரசின் வெளியுறவுக் கொள்கையின் வழிகாட்டுதல் நோக்காக தொடர்கிறது என பிரதமர் தெரிவித்தார். சவுதி அரேபியாவுடனான இந்திய உறவு, மிக முக்கியமான இருதரப்பு உறவுகளில் ஒன்றாகத் திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார்.

இந்தப் பயணத்தின்போது கையெழுத்திடப்படவுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்புக் கவுன்சில் ஒப்பந்தம் குறித்துப் பேசிய அவர், பல்வேறு துறைகளில் புதிய ஒத்துழைப்புக்கான சகாப்தம் தொடங்கவுள்ளது என்றார். வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை வலுவான, ஆழமான உறவில் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டு, மேலும் வலுவடையும் என்று அவர் கூறினார்.

“ஆசிய சக்திகளாக விளங்கும் இந்தியா, சவுதி அரேபியா ஆகியவை தங்கள் அண்டை நாட்டிடமிருந்து ஒரே மாதிரியான பாதுகாப்பு தொடர்பான இடையூறுகளை அனுபவித்து வருவதை,  பகிர்ந்து கொண்டுள்ளதாக நான் நம்புகிறேன். எங்களது ஒத்துழைப்பு, குறிப்பாக பயங்கரவாத ஒழிப்பு, பாதுகாப்பு குறித்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது குறித்து நான் மகிழ்சியடைகிறேன். எனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ரியாத்துக்கு அண்மையில் மேற்கொண்ட பயணம் மிகுந்த பலனுள்ளதாக அமைந்தது” என்று அவர் கூறினார்.

இந்தியாவுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, அந்தக்குழு அடிக்கடி கூட்டங்களை நடத்தி வருவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர ஆர்வம் கொண்ட பல்வேறு துறைகளை இருநாடுகளும் கண்டறிந்துள்ளதாக அவர் கூறினார். 

“பாதுகாப்பு ஒத்துழைப்பு, பாதுகாப்புத் தொழிற்சாலைகளுடன் கூட்டு முயற்சி ஆகியவற்றில் நுழைவது குறித்த நடைமுறைகளை வகுப்பதில் இருநாடுகளும் ஈடுபட்டுள்ளன. இருநாடுகளுக்கும் இடையே விரிவான பாதுகாப்பு நடைமுறை குறித்த பேச்சுவார்த்தையை நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

மேற்காசியாவில் பல்வேறு பிராந்தியங்களில் நிலவும் கொந்தளிப்பான குழப்ப நிலை குறித்த கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, மற்ற நாடுகளின் கொள்கைகள், இறையாண்மை ஆகியவற்றுக்கு மதிப்பளித்து, அந்த நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமை போன்ற சமன்பாடான அணுகுமுறை தேவை என்று கூறினார்.

“இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுடனும் இந்தியா சிறப்பான இருதரப்பு உறவுகளைக் கொண்டுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட பெருமளவு இந்தியர்கள் வசிக்கின்றனர். எனவே, இந்தப் பிராந்தியத்துக்கு மிகவும் அவசியமான அமைதி, பாதுகாப்பை கொண்டுவர,  பேச்சுவார்த்தையில் அனைத்து தொடர்புடையவர்களும் பங்கேற்பதை ஊக்கப்படுத்துவது மிகவும் முக்கியமாகும்” என்று அவர் கூறினார்.

தற்போதைய உலகப் பொருளாதார நிலை குறித்து குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, “உலகப் பொருளாதார நிலை,  இந்தியா போன்ற பெரிய வளரும் நாடுகள் உருவாக்கிய பாதையை வெகுவாக சார்ந்துள்ளன. செப்டம்பர் மாதம் ஐ நா பொதுச்சபைக் கூட்டத்தில் நான் ஆற்றிய உரையில் குறிப்பிட்டது போல, அனைவரது வளர்ச்சிக்கும், ஒவ்வொருவரின் நம்பிக்கையுடன் ஒருமித்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

“பொருளாதார நிலையற்ற தன்மை, சமன்பாடற்ற பலமுனை வர்த்தக முறைகளால் ஏற்பட்ட விளைவாகும். ஜி-20 நாடுகளுக்குள் இந்தியாவும், சவுதி அரேபியாவும் சமத்துவமின்மையைக் குறைக்கவும், நீடித்த வளர்ச்சியை மேம்படுத்தவும் ஒன்று சேர்ந்து பாடுபட்டு வருகின்றன. ஜி-20 உச்சிமாநாட்டை அடுத்த ஆண்டு சவுதி அரேபியா நடத்தப்போவது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியா சுதந்திரமடைந்த 75-வது ஆண்டான 2022-ஆம் ஆண்டு இந்தியா அந்த உச்சிமாநாட்டை நடத்தவுள்ளது” என அவர் தெரிவித்தார்.

மேற்கத்தியப் பொருளாதாரங்களில் தற்போது நிலவும் தேக்கநிலை, அதில் இந்தியா – சவுதி அரேபியாவின் பங்கு என்ற கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் “தொழில் நடத்த உகந்த சூழலை உருவாக்க இந்தியா பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. உலகப் பொருளாதாரம் மற்றும் நிலைத்தன்மைக்கான முக்கிய ஊக்குவிப்பாக நாங்கள் திகழ்கிறோம். தொழில் தொடங்க சாதகமான எங்களது சீர்திருத்தங்கள், முதலீட்டுக்கு உகந்த முன்முயற்சிகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவை உலக வங்கியின் தொழில் நடத்த சாதகமான நாடுகளின் தரவரிசையில் முன்னேற்றத்துக்கு வழிவகுத்துள்ளது. தரவரிசையில் 2014-ஆம் ஆண்டு 142-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2019-ல் 63-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது” என்று கூறினார்.

“இந்தியாவில் தொடங்கு, டிஜிட்டல் இந்தியா, திறன் இந்தியா, தூய்மை இந்தியா, பொலிவுறு நகரங்கள், மேக் இன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு முன்முயற்சிகள் அந்நிய முதலீட்டாளர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. அதேபோல, சவுதி அரேபியாவும் 2030 தொலைநோக்குத் திட்டத்தின் ஒருபகுதியாக சீர்திருத்த நடவடிக்கைகளை தொடங்கியிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்று அவர் கூறினார்.

இந்தியாவுக்கு பெருமளவில் எண்ணெய் விநியோகிக்கும் சவுதி அரேபியாவுடன் நீண்டகால எரிசக்தி உறவு குறித்து குறிப்பிட்ட அவர், “சவுதி அரேபியாவிடமிருந்து இந்தியா அதன் இறக்குமதியில் 18 சதவீதம் அளவுக்கு கச்சா எண்ணெயை வாங்குகிறது. இதன்மூலம், எங்களுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெயை வழங்கும் இரண்டாவது நாடாக சவுதி அரேபியா திகழ்கிறது.  வெறும் விற்பவர் – வாங்குபவர் என்ற உறவுக்கு மாறாக நாங்கள் பாதுகாப்பு ஒத்துழைப்பு என்ற அளவுக்கு நெருங்கியுள்ளோம். இதன்மூலம், இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களில் சவுதி அரேபியா முதலீடு செய்யவுள்ளது” என்றார்.

“எங்கள் எரிசக்தி தேவையில் நம்பகமான முக்கிய ஆதாரமாக சவுதி அரேபியா முக்கிய பங்கு வகிப்பதை நாங்கள் மதிக்கிறோம்.  நிலைத்தன்மையான எண்ணெய் விலைகள் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு, குறிப்பாக, வளரும் நாடுகளுக்கு  மிகவும் அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம். சவுதியின் ஆரம்கோ நிறுவனம் இந்தியாவின் மேற்குக் கரையில் முக்கிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோக் கெமிக்கல் திட்டத்தில் பங்கேற்கவுள்ளது.  இந்தியாவின் பெட்ரோலிய ஆதாரங்களில் ஆரம்கோ பங்கேற்பதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்”.

அரசு அறிவித்துள்ள பொலிவுறு நகரங்கள் திட்டத்தில், சவுதி அரேபியா பங்கேற்பதை இந்தியா விரும்புகிறதா என்ற கேள்விக்கு பிரதமர் மோடி “எங்கள் உள்கட்டமைப்புத் திட்ட முதலீடுகளில் இந்தியா – சவுதி அரேபியா இடையிலான ஒத்துழைப்பும் ஒரு முக்கிய பகுதியாகும். பிப்ரவரி மாதம் சவுதி பட்டத்து இளவரசர் இந்தியா வந்தபோது, இந்தியாவில் பல்வேறுத் திட்டங்களில் 100 பில்லியன் டாலர் கூடுதலாக முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்” எனத் தெரிவித்தார்.

“பொலிவுறு நகரங்கள் திட்டம் உட்பட எங்கள் உள்கட்டமைப்புத் திட்டங்களில் சவுதி அரேபியா அதிக அளவில் முதலீடு செய்வதை நாங்கள் வரவேற்கிறோம். தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்தில் முதலீடு செய்ய சவுதி அரேபியா ஆர்வம் கொண்டிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்”.

“எரிசக்தி தவிர மற்ற துறைகளில் இந்தியாவும், சவுதி அரேபியாவும் ஒத்துழைக்கும் துறைகள் பற்றி பேசிய பிரதமர், இந்தப் பயணத்தின்போது இந்தியாவும், சவுதி அரேபியாவும் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் செய்துகொள்ளத் திட்டமிட்டுள்ளது குறித்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறேன்” என்றார்.

“இந்திய வம்சாவளியினர் பணம் போடுவதற்கும், எடுப்பதற்கும் வசதியாக சவுதி அரேபியாவில் ரூபே அட்டையை அறிமுகப்படுத்தும் திட்டம் உட்பட பல்வேறு முக்கிய முன்முயற்சிகள் தொடங்கப்படவுள்ளன. இ-மைக்ரேட், இ-தவ்தீக் இணையதளங்களை ஒருங்கிணைத்து இந்திய தொழிலாளர்களை குடியமர்த்தும் நடைமுறைகளைத் தொடங்குவது, நிறுவனங்களின் பயிற்சிக்கான உடன்படிக்கை செய்துகொள்வது ஆகியவை இதற்கு பயன்படக்கூடியதாகும்”.

“இந்தியா உலகத்தரம் வாய்ந்த திறன் மேம்பாட்டு மையங்களுக்குப் பெயர் பெற்றதாகும். பல்வேறு துறைகளில் சவுதி இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க பல்வேறு முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  விண்வெளி ஆராய்ச்சித் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து விவாதித்து வருகிறோம்”.

சவுதி அரேபியாவில் உள்ள வம்சாவளியினருக்கு விடுத்துள்ள செய்தியில், “சுமார் 26 லட்சம் இந்தியர்கள் சவுதி அரேபியாவை தங்களது இரண்டாவது இல்லமாக கொண்டுள்ளனர்.  அதன் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் அவர்கள் பங்களித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பல இந்தியர்கள் ஹஜ் மற்றும் உம்ரா புனித யாத்திரை மேற்கொள்வதுடன் தொழில் ரீதியாகவும்  பயணம் செய்கின்றனர்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

“எனது சக குடிமக்களுக்கு நான் அளிக்கும் செய்தி, சவுதி அரேபியாவுக்கு நீங்கள் செய்துள்ள பங்களிப்பு குறித்து உங்கள் நாடு பெருமிதம் கொள்கிறது. உங்களது கடின உழைப்பும், ஈடுபாடும் ஒட்டுமொத்த இருதரப்பு உறவுகளுக்கு நல்லெண்ண நடவடிக்கையாக திகழ்கின்றன” என்று அவர் தெரிவித்தார்.

“சவுதி அரேபியா உடனான நமது உறவுகளுக்கு நீங்கள் தொடர்ந்து உறுதுணையாக இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.  இரு நாடுகளுக்கும் இடையே பன்னெடும் காலமாக நிலவிவரும் வரலாற்று ரீதியிலான உறவுகள் மக்களுக்கு இடையிலான தொடர்புகளை அடிப்படையாக கொண்டது”.

தற்போதைய பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி, மன்னர் சல்மானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார்.  பட்டத்து இளவரசருடன் பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெறும். மத்தியக் கிழக்கில் முக்கிய பொருளாதார அமைப்பான மூன்றாவது எதிர்கால முதலீட்டு முன்முயற்சி அமைப்பின் கூட்டத்தில் மோடி முக்கிய உரையாற்றுவார்.

பாதுகாப்பு ஒத்துழைப்பு, எரிசக்தி பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகள், வர்த்தகம் மற்றும் தொழில், சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், விவசாயம், விமானப் போக்குவரத்து, உள்கட்டமைப்பு, வீட்டு வசதி, நிதிச்சேவைகள், பயிற்சி மற்றும் திறன் உருவாக்கம், கலாச்சாரம், மக்களுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை விரிவாக்கவும், மேலும் வலுப்படுத்தவும் பிரதமர் மோடியின் பயணம் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் துறைகளில் அரசுகளுக்கு இடையே சுமார் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல, அரசுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

இந்தப் பயணத்தால் ஏற்படும் பயன்களில் மிக முக்கியமான ஒன்றாக இருநாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தவிருக்கும் பாதுகாப்பு ஒத்துழைப்புக் கவுன்சில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளின் வரிசையில், சவுதி அரேபியாவுடன் இத்தகைய ஒப்பந்தத்தை செய்துகொள்ளும் 4-வது நாடாக இந்தியா விளங்கும்.

 இருநாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் தலைமையில் அரசியல், பாதுகாப்பு, கலாச்சாரம், சமுதாயம். இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சவுதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சர் தலைமையில் பொருளாதாரம் மற்றும் முதலீடு ஆகியவற்றைக் கொண்ட இரண்டு இணை வழிகளை பாதுகாப்பு ஒத்துழைப்புக் கவுன்சில் கொண்டிருக்கும்.

எரிசக்திப் பாதுகாப்பு, சவுதி அரேபியாவுடனான இந்தியாவின் உறவில் முக்கிய அம்சமாக திகழ்கிறது.  இந்தியாவின் நீண்டகால எரிசக்தி விநியோகத்தில் சவுதி அரேபியா நம்பகமான முக்கியப் பங்கு வகிப்பதை இந்தியா பாராட்டியுள்ளது.  இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 18 சதவீதத்தையும், திரவ எரிவாயு தேவையில் 30 சதவீதத்தையும் சவுதி அரேபியா விநியோகிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே வாங்குபவர், விற்பவர் என்ற உறவை மாற்றி, பரஸ்பர கூட்டுச்செயல்பாடு, இணைச்சார்பு அடிப்படையில் மேலும் விரிவான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதில் இருநாடுகளும் ஆர்வம் கொண்டுள்ளன.

Source : PIB

கியார் புயலில் சிக்கிக் கொண்ட மீனவர்களை மீட்கும் பணியை இந்திய கடலோரக் காவல் படை தீவிரப்படுத்தியுள்ளது

0

கியார் புயலில் சிக்கிக் கொண்ட மீனவர்களை மீட்கும் பணியை இந்திய கடலோரக் காவல் படை  தீவிரப்படுத்தியுள்ளது

“கியார்” புயலின் காரணமாக சிக்கிக் கொண்ட மீனவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களை மீட்கும் பணியை இந்திய கடலோரக் காவல் படை  தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை 25 மீனவர்கள் கடலோர காவல் படையால் மீட்கப்பட்டதுடன், 2740 மீன்பிடி படகுகளையும், மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள பல்வேறு துறைமுகங்களுக்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்த்துள்ளது.

2019 அக்டோபர் 18-ந் தேதி முதற்கொண்டே, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும், மீனவர்களுக்கும் இந்தியக் கடலோரக் காவல் படை வானிலை முன்னெச்சரிக்கைகளை வழங்கியதுடன், கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், ஏற்கனவே கடலுக்கு சென்றவர்களையும் பத்திரமாக திரும்புமாறும் கேட்டுக் கொண்டிருந்தது. இந்தியக் கடலோரக் காவல் படை கப்பல்கள், விமானங்கள், கடல்சார் மீட்பு ஒத்துழைப்பு மையம் மற்றும் இணையதள விளம்பர நிறுவனங்கள் மூலமாக அனைத்து மாலுமிகளுக்கும், அந்தந்த மாநில மொழி பத்திரிகைகளில் புயல் குறித்த செய்தி வெளியிடப்பட்டதுடன், துறைமுகங்களுக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டது. மீனவர் சங்கங்கள் / அமைப்புகள், கடலோரக் காவல் படை, கடலோர ரோந்து காவல் பிரிவு மற்றும் சம்பந்தப்பட்ட பிற அமைப்பினரின் நெருங்கிய ஒத்துழைப்புடன், நடுக்கடலில் சிக்கியுள்ள மீன்பிடி படகுகளை கணக்கிட்டு அவற்றை பத்திரமாக கரை திரும்ப செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது.

மீன்பிடி படகுகளின் இருப்பிடத்தைக் கண்டறியும் பணியில், இந்தியக் கடலோரக் காவல் படையின் 9 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டதுடன் புயல் பாதிப்புப் பகுதியில் சிக்கித் தவித்த மீனவர்களுக்கு தேவையான உதவிகளும் வழங்கப்பட்டன. இந்தியக் கடலோரக் காவல் படையின் 2 டார்னியர் ரக விமானங்களும், நடுக்கடலில் சிக்கித் தவித்த மீன்பிடி படகுகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இது தவிர ஹெலோ ஹெலிகாப்டர் ஒன்றும் மீன்பிடி படகுகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

இந்தியக் கடலோரக் காவல் படையின் பல்வேறு பிரிவுகள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, புயலில் சிக்கித் தவித்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 2740 படகுகள் பத்திரமாக கொண்டு வரப்பட்டன. வெராவெல் பகுதியில் 2 மீன்பிடி படகுகள், இந்தியக் கடலோரக் காவல் படையின் சமுத்ரா பிரஹாரா கப்பல் மூலம் கோவாவிற்கு பத்திரமாக கொண்டு வரப்பட்டன. பிபாவவ் பகுதியிலிருந்து 1676 மீன்பிடி படகுகள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டன. குஜராத்தின் 500 படகுகள், கேரளாவின் 80 படகுகள், கர்நாடகாவில் 2 படகுகளும், மகாராஷ்டிராவின் ரஜாபுரியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன. இது தவிர ஜெய்கரில் 130 படகுகள் தஞ்சமடைந்தன. மும்பையில் 7 படகுகளும், சிந்துதுர்கில் சுமார் 600 மீன்பிடி படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. பிற மாநிலங்களைச் சேர்ந்த 197 படகுகள் ரத்தினகிரியில் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 80 படகுகள் கோவாவில் நிறுத்தப்பட்டன. கர்நாடகாவின் கார்வாரில் 500 மீன்பிடி படகுகளும். உடுப்பில் 120 படகுகளும், மங்களூரில் 50 படகுகளும், மால்பேயில் 20 படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.

மாயமான / கடலில் சிக்கித் தவிக்கும் 14 மீன்பிடி படகுகளை தேடி மீட்டு வரும் பணியில், இந்தியக் கடலோரக் காவல் படை, மீனவர் அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட பிற தரப்பினரின் நெருங்கிய ஒத்துழைப்புடன் பணியாற்றி வருகிறது.

Source: PIB

2028 இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்ல மத்திய அரசின் புதிய முயற்சி

0

2028 இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்ல மத்திய அரசின் புதிய முயற்சி

2028 ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்வதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மத்திய இளைஞர் நலன் & விளையாட்டு (தனிப்பொறுப்பு) மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் திரு.கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

சென்னை: சென்னையில் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு அறிவியலுக்கான என்.பி.வி.ராமசாமி உடையார் ஹாக்கி மையத்தை இன்று (29.10.2019) திரு.கிரண் ரிஜிஜூ தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், உலகில் ஒலிம்பிக் விளையாட்டை விட வண்ணமயமான நிகழ்ச்சி வேறு எதுவும் இருக்க முடியாது என்றார். ஒரு நாட்டிற்கு விளையாட்டை தவிர பெருமை தேடித் தருவது வேறு எதுவாகவும் இருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் ஒலிம்பிக் சாம்பியன்களை அதிக அளவில் உருவாக்க இந்த அரசு முயற்சித்து வருவதாக கூறிய அவர், இதற்காக ஒலிம்பிக் நடவடிக்கை குழு ஒன்றை பிரதமர் அமைத்துள்ளதாக தெரிவித்தார். விளையாட்டு கலாச்சாரத்தை ஏற்படுத்த, வெளிப்படைத்தன்மையை கடைப்பிடித்தல், அனைத்து தரப்பினருக்கும் சமவாய்ப்பு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

விளையாட்டுத் துறையை மேம்படுத்த நிதியுதவி அளிப்பது தவிர்க்க முடியாதது என்றும் அவர் கூறினார். முன்பு சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர்களுக்கு அரசு அறிவிக்கும் பரிசுத் தொகை கால தாமதமாக கிடைத்து வந்ததை சுட்டிக்காட்டிய அவர், இதனை தவிர்க்க சம்பந்தப்பட்ட விளையாட்டு வீரர்கள் பதக்கம் வென்று இந்தியாவில் வந்து இறங்குவதற்கு முன்பாகவே அவர்களுக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு, அவர்கள் இந்தியா வந்து இறங்கியவுடன் அதற்கான காசோலை கிடைப்பதை உறுதி செய்ய அரசு முடிவு செய்துள்ளது என்றார்.

2028 ஒலிம்பிக் பதக்க பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியா இடம் பிடிக்க செய்வதே நமது இலக்கு என்றார். இதற்கான ஆரம்பகட்ட பணிகளை அரசு இப்போதே தொடங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்திய விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உணவு, பயணச் செலவு மற்றும் தொழில்நுட்ப உதவிகள் அனைத்தையும் மத்திய அரசு வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த விளையாட்டுத் துறையை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்ல ஏதுவாக, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை விளையாட்டு ஒரு முக்கிய பாடமாக சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது மத்திய அரசின் நிலைப்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட பெரும் மாற்றம் என்று குறிப்பிட்ட அமைச்சர் திரு.கிரண் ரிஜிஜூ இந்த நடவடிக்கை விளையாட்டுத் துறையை நம் நாட்டின் கல்வி முறையில் முக்கிய இடம் பெற செய்யும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக விழாவில் பங்கேற்ற ஒலிம்பிக் ஹாக்கி வீரர்கள், மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடிய மத்திய அமைச்சர், ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் விளையாட்டுத் துறைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வசதிகளை பார்வையிட்டார்.

Source: PIB

விவசாயிகளுக்கு தமிழக அரசு சிறப்பு சட்டம்! மகிழ்ச்சி தரும் சிறப்பு செய்தி

0

விவசாயிகளுக்கு தமிழக அரசு சிறப்பு சட்டம்! மகிழ்ச்சி தரும் சிறப்பு செய்தி

விவசாய நாடு என்றபோதிலும் நம் நாடு முழுவதும், போதிய வருமானம், விளைச்சல் இல்லாமல் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு ஆளாகி வருகின்றனர்.

விவசாயத்தை நம்பி வாங்கிய கடனை திரும்பும் கட்ட அளவுக்கு வருமானம் ஈட்ட முடியாததால் பல விவசாய குடும்பங்கள் கடனில் மூழ்கி உள்ளனர் என்னதான் பல திட்டங்கள் விவசாயத்திற்காக இருந்தாலும் விவசாயின் நிலைமை மாறாமல் தான் இன்றளவும் இருந்து வருகிறது இதற்காக மத்திய அரசும் பல மாநிலங்களும் விவசாயத்திற்காக நலத்திட்டங்களை செயல்பட்டுக் கொண்டிருக்கும்

விவசாயத்தை நம்பி வாங்கிய கடனும் வருமானம் இல்லாததால், கட்டத் தவறி குடும்பமே சிக்கலில் தவிக்கிறது.
இதனால் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க பல மாநில அரசுகளும் முயன்று வருகின்றன. இதனிடையே தமிழக அரசு நாட்டிலே முதன்முறையாக தமிழ்நாடு வேளாண் விளைபொருள், கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவைகள் என்ற பெயரில் புதிய சட்டம் இயற்றியுள்ளது. இந்த சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

சட்டத்தின் விதிமுறைகள்

கொள்முதல் செய்வோர் அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனத்துடன் விவசாயிகள் விலை நிர்ணயம் செய்ய முடியும்.

ஒப்பந்தம் செய்த அன்று நிர்ணயம் செய்யப்பட்ட விலையிலேயே உற்பத்தி பொருட்களை பரிமாற்றம் செய்ய சட்டப் பாதுகாப்பு.

அதிக விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சி ஏற்படும் நேரங்களில், விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை தடுப்பதற்கான சட்டம்.

வேளாண் பொருள் கொள்முதல் செய்வோர், வணிக வரித்துறையால் அனுமதிக்கப்பட்ட அலுவலரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இடைத்தேர்தல் தோல்வியால் கலங்கி நிற்கும் மு.க.ஸ்டாலின்! விழிப்பிதுங்கி நிற்கும் உடன்பிறப்புகள்

0

இடைத்தேர்தல் தோல்வியால் கலங்கி நிற்கும் மு.க.ஸ்டாலின்! விழிப்பிதுங்கி நிற்கும் உடன்பிறப்புகள்.

விக்கிரவாண்டி,நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததை மு.க.ஸ்டாலின் அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாங்குநேரி தோல்வியை அவர் கண்டுகொள்ளவில்லை அங்கு காங்கிரஸ் தான் போட்டியிட்டது, ஆனால் விக்ரவாண்டி பொருத்தவரை திமுகவிடம் இருந்து அதிமுகவுக்கு சென்றது மிகுந்த பலத்த அடியாகவே கருதுகிறார் மு.க.ஸ்டாலின்.

நாடாளுமன்றத் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இடைத்தேர்தல் தோல்வி பல பாடங்களை ஸ்டாலினுக்கு கற்றுக் கொடுத்ததாக தெரிகிறது, நாடாளுமன்றத் தேர்தலில் திமுக,காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தான் பிரதானமாக இருந்தது, அது அனைவராலும் அறியப்பட்டு ஒன்றுதான்,. கடந்த கால தேர்தல் அறிக்கையில் சொன்னப்படி கடன் தள்ளுபடியை திமுகவும் காங்கிரசும் செய்தன,. இதனால் தமிழக மக்கள் நம்பி வாக்களித்தனர், தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் பிஜேபியும் அதன் கூட்டணி கட்சிகளும் அசுர வெற்றியை பெற்றன,. தமிழகம் மட்டும் தனித்து விடப்பட்ட வெற்றி போல் தமிழக மக்களையே சிந்திக்கும் வகையில் இருந்தது,.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ள முடியாமல் போனதால் திமுக கடும் கலக்கத்திலேயே இருந்தது, அடுத்த தேர்தலில் என்ன சொல்லி சமாளிக்க போகிறோம் என்று தெரியாமல் விழிப்பிதுங்கியது,.

சட்டமன்றத்தில் முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் திமுக தேர்தல் அறிக்கையை கடுமையாக விமர்சித்து பேசினார், குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றி கடத்துவது போல் இந்த தேர்தலில் வெற்றியை திமுக பெற்றனர் என்று தமிழக மக்களை யோசிக்க வைக்கும் அளவில் பேசி திமுகவை கலங்க வைத்தார், இதன் தொடர்ச்சியாக வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, அப்போதைய காலகட்டத்தில் காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவை நீக்கியது, முத்தலாக் தடைச்சட்டம் விளைவாக முஸ்லிம் சமுதாய வாக்குகள் பாஜக கூட்டணியில் இருந்ததால் அதிமுகவிற்கு வாக்களிக்கவில்லை, இதனால் முஸ்லிம் சமுதாய வாக்குகள் அனைத்தும் திமுகவிற்கு விழுந்ததால் கதிர்ஆனந்த் வெற்றி பெற்றார், இதில் 3 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவும் 3 சட்டமன்ற தொகுதிகளில் திமுகவும் முன்னிலை பெற்றன, இந்த முடிவுகள் ஸ்டாலினை திகைத்து போய் வைத்தன.

தனது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி தலைவர் பதவியை இத்தகைய சூழ்நிலையில் கொடுத்தது திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது,. அனைவரும் குடும்ப வாரிசு கட்சி என்று திமுக மீது கடுமையான விமர்சனங்களை வைத்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில்,. எதிர்கட்சிகள் இதனை வைத்து அரசியல் செய்ய வழிவகுத்த விட்டார் என திமுக உடன்பிறப்புகள் புலம்பி வருகின்றனர்,.

வன்னியர்களுக்கு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 20 சதவீத ஒதுக்கீட்டில் 15 சதவீதம் உள்ஒதுக்கீடு தரப்படும் என்ற மு.க.ஸ்டாலின் கூற்றை விக்கிரவாண்டியில் உள்ள வன்னியர்கள் நம்பவில்லை,. காரணம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திமுக மாவட்டச் செயலாளர்களில் ஒருவர் கூட வன்னியர் இல்லை என்பதுதான்,. திமுக வன்னியர் பிரமுகர்களை வைத்து பலமான பிரச்சாரம் செய்தும் பயனில்லாமல் போனது,.

திருமாவளவனை கூட்டணியில் வைத்துக்கொண்டு செயல்படுவதால் வாக்குகள் விழாது என்று திமுக வன்னியர்களே தலைமையிடம் சொல்லியதாகவும் இதனை பொன்முடி கண்டுகொள்ளாமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ஸ்டாலினுக்கு நம்பிக்கையூட்டி ஏமாற்றியதால் அவர் மீது கடுமையான எரிச்சலில் ஸ்டாலின் உள்ளார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.