வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி பெரம்பலூர் அரியலூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

0
253

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழ் தமிழக பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக த இன்று தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அனேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பேசாத முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், கடலூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் போன்ற ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது அதிகபட்ச வெப்பநிலை 33.34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25.26 டிகிரி செல்சியஸ் என்றளவில் இருப்பதற்கான வாய்ப்புள்ளது.

இன்றைய தினம் லட்சித்தீவு பகுதிகள், மாலத்தீவு பகுதிகள், குமரி கடல் பகுதிகள் மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசுவதற்கான வாய்ப்புள்ளது.

ஆகவே மேலே குறிப்பிடப்பட்ட தினங்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous article“எங்களை இப்போது எளிதாக நினைக்கமாட்டார்கள்…” பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் கருத்து!
Next articleதினேஷ் கார்த்திக்கா? ரிஷப் பண்ட்டா? ஆடும் லெவனில் யார்?… சுரேஷ் ரெய்னாவின் சாய்ஸ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here