உடல் எடையை குறைக்க ரோஸ்மேரி டீ செய்து குடிங்கள்!

Photo of author

By Divya

உடல் எடையை குறைக்க ரோஸ்மேரி டீ செய்து குடிங்கள்!

காலை நேரத்தில் காபி, தேயிலை டீக்கு பதில் ரோஸ்மேரி டீ குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் கரைந்து வெளியேறும். ரோஸ்மேரி ஒரு நறுமணம் மிக்க மூலிகை இலை. இந்த இலையில் டீ போட்டு குடித்தால் அவை மிகவும் சுவையாக இருப்பதோடு உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

தேவையான பொருட்கள்:-

1)ரோஸ்மேரி இலை
2)தண்ணீர்
3)தேன்

செய்முறை:-

ஒரு கைப்பிடி அளவு ரோஸ்மேரி இலையை நிழலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.

இதை ஒரு டப்பாவில் போட்டு சேமிக்கவும். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றவும். பிறகு அதில் 1 அல்லது 2 ரோஸ்மேரி இலை சேர்க்கவும். மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

ரோஸ்மேரி டீயை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி தேன் கலந்து குடிப்பதை வழக்கமாக்கி கொண்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.