மளமளவென உயரும் பெட்ரோல் டீசல் விலை!

0
196

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன.

பொதுத்துறை நிறுவனங்களாக இருந்து வரும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் டீசல் மற்றும் பெட்ரோல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. நோய்த்தொற்று மற்றும் பொது முடக்கம் காரணமாக சென்ற மார்ச் மாதம் கடைசி முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. ஜூன் முதல் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வருகிறார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து இருக்கிறது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 24 காசுகள் அதிகரித்து 93 ரூபாய் 62 காசுக்கும், டீசல் ஒரு லிட்டருக்கு 29 காசுகள் அதிகரித்து 87 ரூபாய் 25 காசுக்கு விற்பனையாகி வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்திருக்கிறது.

Previous articleதங்கத்திற்காக கொலை!கூட்டாளிகள்  அதிரடி கைது!
Next articleவசதிகள் கண்டிப்பாக குறையும்! வாட்ஸ்அப் அதிரடி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here