மார்னிங்.. லெமென் + சால்ட் பருகினால் உடலில் உள்ள மொத்த நோய்க்கும் டாட்டா தான்!!

Photo of author

By Divya

மார்னிங்.. லெமென் + சால்ட் பருகினால் உடலில் உள்ள மொத்த நோய்க்கும் டாட்டா தான்!!

இன்றைய காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவது மிகவும் முக்கியம். முறையற்ற உணவு முறை மற்றும் வாழக்கை முறை பழக்கத்தால் பல வியாதிகள் நம் உடலை தொத்திக் கொள்கிறது. இந்த நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க எலுமிச்சை மற்றும் உப்பு கலந்த நீர் பெரிதும் உதவும். எலுமிச்சம் பழத்தில் அதிகளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் சி மற்றும் தாதுக்கள் நிறைந்து இருக்கிறது. அதேபோல் உப்பில் அயோடின், தாதுக்கள் உள்ளிட்டவை நிறைந்து இருப்பதால் இவை உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

எலுமிச்சை சாறு தயாரிக்கும் முறை:-

தேவையான பொருட்கள்:-

*எலுமிச்சை சாறு – 1 1/2 தேக்கரண்டி

*தூள் உப்பு – 1/2 தேக்கரண்டி

செய்முறை:-

பாதி எலுமிச்சம் பழ சாற்றை ஒரு டம்ளரில் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து 1/2 தேக்கரண்டி அளவு தூள் உப்பு சேர்த்துக் கொள்ளவும். பிறகு தண்ணீர் ஊற்றி கலந்து பருகவும். இந்த பானம் தயார் செய்ய குளிர்ந்த நீரை(ப்ரிட்ஜ் நீர்) பயன்படுத்த கூடாது.

லெமென் + சால்ட் பருகினால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-

*தினமும் காலையில் எழுந்த உடன் லெமென் + சால்ட் கலந்த நீரை பருகினால் உடல் புத்துணர்ச்சி பெறும். காரணம் இந்த பானத்தை பருகினால் உடல் ஹைட்ரேட்டாக இருக்கும்.

*எலுமிச்சை சாறு, உப்பு கலந்த நீர் பருகினால் பருகுவதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். காரணம் இவை இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை சீராக வைப்பதால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கிறது.

*இந்த அற்புத பானத்தை தினமும் பருகி வருவதன் மூலம் இதயம் மற்றும் இரத்தம் தொடர்பான பாதிப்பு முழுமையாக நீங்கி விடும்.

*அஜீரணக் கோளாறு, மலசிக்கல் பாதிப்பு இருக்கும் நபர்கள் இந்த பானத்தை வெறும் வயிற்றில் பருகினால் உடனடி தீர்வு கிடைக்கும். எலுமிச்யில் உணவை செரிக்கும் ஆற்றல் இருக்கிறது. எலுமிச்சை ஜூஸ் பருகினாலும் இந்த பாதிப்புக்கு தீர்வு கிடைக்கும். தண்ணீரில் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து பருகுவதன் மூலம் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உருவாவது தூண்டப்படுகிறது. இதனால் உண்ணும் உணவு எளிதில் செரிமானம் அடைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

*கிட்னி ஸ்டோன் இருப்பவர்கள் இந்த பானத்தை பருகினால் விரைவில் உரியத் தீர்வு கிடைக்கும்.
அதேப்போல் கிட்னி ஸ்டோன் உருவாவதையும் தடுக்கிறது.

*வாத நோய், பித்தப்பை கற்கள், மூட்டுவலி உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்படும் நபர்கள் எலுமிச்சை + உப்பு கலந்த பானத்தை பருகுவது நல்லது.

*உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடலை ஆரோக்கியமாக வைக்க இந்த பானம் பெரிதும் உதவுகிறது.

*உடலின் முக்கிய உள் உறுப்பான கல்லீரலில் உள்ள நச்சுக்களை அகற்றி அந்த உறுப்பை பாதுகாப்பாக வைக்க எலுமிச்சை + உப்பு கலந்த சாறு பெரிதும் உதவுகிறது.

*உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இந்த பானத்தை பருகுவது நல்லது.