அந்த நேரத்தில் சுற்றி வளைத்த போலீசார்! கள்ள காதலியுடன் சல்லாபத்தில் இருந்த பொழுது மாட்டிய கொலையாளி!

Photo of author

By Kowsalya

கொலை குற்றவாளி ஒருவர் காதலியுடன் தனிமையில் இருந்த பொழுது போலீசார் சுற்றி வளைத்து பிடித்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் ஹசிம் என்ற ஒருவர் மீது பல கொலை கொள்ளை வழக்குகள் அதிகமாக இருந்துள்ளது. அதனால் போலீசார் அவனை வலை வீசி தேடி வந்துள்ளனர். மேலும் அவரை பிடித்து தருபவர்களுக்கு 6 லட்சம் ரூபாய் தருவதாக சொல்லி இருந்தார்கள். ஆனால் அப்படியும் அவர் யார் கண்ணிற்கும் தெரியாமல் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் பல நாட்களாக தலைமறைவாக இருந்த இந்த கொலை குற்றவாளிக்கு ஒரு கள்ள காதலி இருந்துள்ளார். இருவரும் தனிமையில் உல்லாசமாக இருக்க நினைத்துள்ளார் ஹஷிம். அதனால் அவர்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து காதலியை சந்திக்க திட்டமிட்டு ஏற்பாடு செய்துள்ளார்.
ஹாஷிம் கள்ள காதலியின் வீடு ஷாஹத்ராவில் உள்ள சுபாஷ் பூங்காவில் உள்ளது.அந்த காதலியின் வீட்டிற்க்கு புதன்கிழமை அதிகாலை வந்துள்ளார்.

இந்த விஷயம் போலீசாரின் உளவுப்பிரிவுக்கு ஒரு சிலர் மூலம் தகவல் தெரிந்துள்ளது .அதனால் எப்படியாவது ஹஷிமை பிடிக்க வேண்டும் என திட்டமிட்டனர். புதன் கிழமை காதலி வீட்டிற்குள் நுழைந்து ஹஷிம் காதலியோடு சல்லாபம் புரிய முற்பட்ட போது, போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.

வீட்டின் வெளியே ஏதோ சத்தம் கேட்க்கிறதே என்று பார்க்க ஹசிம் வெளியே வந்துள்ளார். உடனே போலீசார் சுற்றி வளைத்து ஹஷிமை பிடித்துள்ளார்கள். போலீஸிடம் இருந்து தப்பிக்க பைக்கை நோக்கி ஓடிய ஹசிமை போலீசார் ஒரு துப்பாக்கியால் அவரின் காலில் சுட்டு பிடித்தார்கள்.