மாநிலங்களவைத் தேர்தல்! போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அந்த 41 பேர்!

மாநிலங்களவைத் தேர்தல்! போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அந்த 41 பேர்!

மாநிலங்களவைக்கு மிக விரைவில் காலியாகயிருக்கின்ற 57 இடங்களுக்கு எதிர்வரும் 10ம் தேதி தேர்தல் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆகவே இதற்காக பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வந்தது. இதற்கு நடுவே வேட்புமனு பரிசீலனை முடிந்து திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இப்படியான நிலையில், 41 பகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் அதிகபட்சமாக பாஜகவிற்கு 14 இடங்கள் கிடைத்திருக்கின்றன. காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், உள்ளிட்ட … Read more

ரஷ்யாவுடன் வர்த்தகத் தொடர்பு! மேலை நாடுகளின் எதிர்ப்பை நிராகரித்த இந்தியா!

ரஷ்யாவுடன் வர்த்தகத் தொடர்பு! மேலை நாடுகளின் எதிர்ப்பை நிராகரித்த இந்தியா!

உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே போர் மிகவும் கடுமையாக நடைபெற்று வருகிறது. இந்தப் போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி தொடங்கி தற்போது வரையிலும் நடைபெற்று வருகிறது. சுமார் 3 மாதங்களுக்கு மேலாக இந்த போர் தொடர்ந்து வருவதால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்திருக்கிறது. இந்த போர் காரணமாக, ரஷ்யாவின் மீது அமெரிக்கா போன்ற மேலை நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்திருக்கின்றன. ரஷ்யாவுடன் எந்த நாடும் வர்த்தகத் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று … Read more

பஞ்சாப் காங்கிரஸ் கட்சியை சார்ந்த பாடகர் படுகொலை! ஆளும் கட்சிக்கு தொடர்பு?

பஞ்சாப் காங்கிரஸ் கட்சியை சார்ந்த பாடகர் படுகொலை! ஆளும் கட்சிக்கு தொடர்பு?

ஹிந்தி பாடகரான சித்து கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவருக்கு கடந்த பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் மான்சா மாவட்டத்திலிருந்து காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனாலும் அவர் அந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தார். அவருக்கு 29 வயதே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது, கடந்த 29ம் தேதி பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியது. அவருடைய வாகனத்தில் சென்று கொண்டிருந்த … Read more

அதிர்ச்சி! சோனியா காந்திக்கு நோய்த்தொற்று உறுதி!

அதிர்ச்சி! சோனியா காந்திக்கு நோய்த்தொற்று உறுதி!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். சோனியா காந்தி கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை சந்தித்து உரையாடி வருகின்ற சூழ்நிலையில், நேற்றையதினம் அவருக்கு லேசான காய்ச்சல் உண்டானது. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நோய் தொற்று பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. … Read more

அதிகரித்து வரும் கள்ளநோட்டுக்களின் எதிரொலி! அதிரடி மாற்றங்களுடன் வெளி வருகிறது புதிய 500 ரூபாய் நோட்டு!

அதிகரித்து வரும் கள்ளநோட்டுக்களின் எதிரொலி! அதிரடி மாற்றங்களுடன் வெளி வருகிறது புதிய 500 ரூபாய் நோட்டு!

இந்தியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டிற்கு முன்பு கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகமிருந்ததால் இந்திய பொருளாதாரம் மிகப்பெரியளவில் பாதிக்கப்பட்டது என சொல்லப்பட்டது. ஆகவே கடந்த 2014ஆம் வருடம் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அமைந்த பிறகு அவர் நாட்டில் பல அதிரடி மாற்றங்களை செய்து வந்தார். அப்படி அவர் செய்த ஒரு மிகப்பெரிய மாற்றம் தான் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று வெளியிட்ட அறிவிப்பு. அப்படி அறிவித்தபோது நாட்டு மக்கள் அனைவரும் … Read more

அதிரடி தீர்ப்பு வழங்கிய கேரள உயர்நீதிமன்றம்! துள்ளி குதித்த ஓரினச்சேர்க்கையாளர் ஜோடி!

அதிரடி தீர்ப்பு வழங்கிய கேரள உயர்நீதிமன்றம்! துள்ளி குதித்த ஓரினச்சேர்க்கையாளர் ஜோடி!

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான அதிலா நஸ்ரினும், 23 வயதான பாத்திமா நூராவும், பள்ளி தினங்களிலிருந்து உறவுமுறையில் பழகி வந்திருக்கிறார்கள். இந்தநிலையில், அவர்கள் கல்லூரிக்கு சென்ற பின்னரும் கூட அவர்களுடைய நட்பு தொடர்ந்திருக்கிறது. பட்டப் படிப்பை முடித்தவுடன் பிரிய மனமின்றி இருவரும் தம்பதியினர் போல ஒன்றாக வாழ முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாடகைக்கு வீடெடெடுத்து தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விவரத்தை அறிந்து கொண்ட இரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். … Read more

இரவு நேரத்தில் ஏற்பட்ட கோர விபத்து! 57 பேர் படுகாயம்!

இரவு நேரத்தில் ஏற்பட்ட கோர விபத்து! 57 பேர் படுகாயம்!

கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் நேற்று இரவு அரசுக்குச் சொந்தமான கே எஸ் ஆர் டி சி பேருந்து மீது சுற்றுலா பேருந்து ஒன்று நேருக்கு நேர் மோதியது. இதில் குறைந்தது 57 பேர் படுகாயமடைந்தனர் என்று சொல்லப்படுகிறது. கொல்லம் பகுதியிலிருக்கின்ற சித்தாரா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட குளத்துப்புழா மடத்தாராசாலையில் இந்த விபத்து நடந்ததாக காவல்துறையினரின் சார்பாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் காயமடைந்த 42 பேர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். லேசான காயமடைந்த 15 பேர் … Read more

இந்திய அளவிலான இன்றைய நோய் தொற்று பாதிப்பு நிலவரம்!

இந்திய அளவிலான இன்றைய நோய் தொற்று பாதிப்பு நிலவரம்!

நாட்டில் நோய்த்தொற்று பரவல் புதிதாக 2,706 பேருக்கு பரவியிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நோய்த் தொற்று பாதிப்பு 2,685 ஆக இருந்தது. அதேபோல நேற்றையதினம் 2,828 ஆக இருந்தது. நாட்டில் ஒட்டுமொத்த நோய் தொற்று பாதிப்பு 4,31,55,749 என அதிகரித்திருக்கிறது. கேரள மாநிலத்தில் 846 பேரும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 550 பேரும், புதிதாக இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தலைநகர் டெல்லியில் 357 பேரும், … Read more

நள்ளிரவில் 9 பேரை பலி வாங்கிய கோர விபத்து

நள்ளிரவில் 9 பேரை பலி வாங்கிய கோர விபத்து

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே நடுஇரவில் நடந்த விபத்து ஒட்டுமொத்த நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாலாறு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டிரக் மீது டெம்போ மோதியதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். குண்டூர் பகுதியை சேர்ந்த 38 பேர் டெம்போவில் ஸ்ரீசைலம் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊரான பலநாடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். வழியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரக் மீது அந்த வாகனம் பயங்கரமாக மோதியது. ட்ரக் மீது … Read more

காஷ்மீரில் பதுங்கியிருந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை! பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை!

காஷ்மீரில் பதுங்கியிருந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை! பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை!

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் மாநில காவல்துறையினர் ஒன்றிணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் கண்டிவாரா பகுதில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர், அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினர் தரப்பில் எதிர் தாக்குதல் நடத்தப்பட்டது, … Read more