இந்திய அளவிலான இன்றைய நோய் தொற்று பாதிப்பு நிலவரம்!

0
67

நாட்டில் நோய்த்தொற்று பரவல் புதிதாக 2,706 பேருக்கு பரவியிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நோய்த் தொற்று பாதிப்பு 2,685 ஆக இருந்தது. அதேபோல நேற்றையதினம் 2,828 ஆக இருந்தது. நாட்டில் ஒட்டுமொத்த நோய் தொற்று பாதிப்பு 4,31,55,749 என அதிகரித்திருக்கிறது.

கேரள மாநிலத்தில் 846 பேரும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 550 பேரும், புதிதாக இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தலைநகர் டெல்லியில் 357 பேரும், கர்நாடகாவில் 241பெரும், அரியானாவில் 154 பேரும், உத்திரப்பிரதேசத்தில் 145 பேரும், இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நோய்தொற்று பாதிப்பிலிருந்து மேலும் 2,070பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதுவரையில் குணமடைந்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,26,13,440 என அதிகரித்திருக்கிறது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் எண்ணிக்கை 17,698 ஆக அதிகரித்தது. இது நேற்றைய தினம் பாதிப்பை விட 611 அதிகம் என சொல்லப்படுகிறது.

கேரள மாநிலத்தில் திருத்தப்பட்ட பட்டியல் இணைக்கப்பட்ட 23 மரணங்கள் மற்றும் நேற்றைய தினம் மகாராஷ்டிரா மாநிலம், மேற்கு வங்கத்தில் தலா ஒருவர் என்று மேலும் 25 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

இதுவரையில் நோய்தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 5,24, 611 அதிகரித்திருக்கிறது.

நாடுமுழுவதும் இதுவரையில் 193.31 லட்சம் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது. இதில் நேற்று மட்டும் 2,28,823 தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்கு நடுவே நேற்றைய தினம் 2,78,667 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இதுவரையில் 85 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்திருக்கிறது.