73 வது குடியரசு தினம்; டெல்லியில் முப்படைகள் அணிவகுப்பு!

73 வது குடியரசு தினம்; டெல்லியில் முப்படைகள் அணிவகுப்பு!

நாட்டின் 73-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் ராணுவ மற்றும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்புகள் நடக்க உள்ளன. இந்தியா 1947 இல் சுதந்திரம் அடைந்த நிலையில், 1950 இல் குடியரசாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி இந்தியாவில் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு, தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை மரியாதை செலுத்த உள்ளார். … Read more

பாஜக எம்எல்ஏ மகன் கார் விபத்தில் மரணம்: பிரதமர் இரங்கல்!

பாஜக எம்எல்ஏ மகன் கார் விபத்தில் மரணம்: பிரதமர் இரங்கல்!

மகாராஷ்டிராவில், பாஜக எம்.எல்.ஏ மகன் உட்பட 7 மாணவர்கள் கார் விபத்தில் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் உள்ள செல்சுரா பாலத்திற்கு அருகே இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. பாஜக எம்.எல்.ஏ விஜய் ரஹாங்க்தலே மகன், சவாங்கி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து நள்ளிரவில் காரில் சென்றபோது செல்சுராபாலத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது ,எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவர் மீது … Read more

இந்தியாவின் எதிரி சீனா- அகிலேஷ் யாதவ் பேட்டி!

இந்தியாவின் எதிரி சீனா- அகிலேஷ் யாதவ் பேட்டி!

உத்திரபிரதேசம் சட்டப்பேரவைத் தேர்தல அடுத்த மாதம் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து வருகிறது. ஆளும் பாஜகவிற்கு முக்கிய எதிர்க்கட்சியான, சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், நமது உண்மையான எதிரி சீனா, பாகிஸ்தான் என்று தெரிவித்திருந்தார். ஆனால் பாஜக வாக்கு வங்கி அரசியலுக்காக பாகிஸ்தானை மட்டுமே குறி வைக்கிறது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், … Read more

அசாமில் புதிய கட்டுப்பாடு – அசாம் அரசு அதிரடி!

அசாமில் புதிய கட்டுப்பாடு - அசாம் அரசு அதிரடி!

அசாமில், தடுப்பூசி போடாத அரசு ஊழியர்கள் அலுவலகம் வர வேண்டாம் என அறிவித்துள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அசாம் அரசு குறிப்பிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அசாம் அரசு கடும் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5902 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று ஒரே நாளில் 18 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும் 44 ஆயிரத்து 75 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நிலையில், … Read more

மெட்ரோ ரயில் நிலையங்களின் வாகன நிறுத்தும் இடங்கள் மூடல்! மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!!

மெட்ரோ ரயில் நிலையங்களின் வாகன நிறுத்தும் இடங்கள் மூடல்! மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!!

மெட்ரோ ரயில் நிலையங்களின் வாகன நிறுத்தும் இடங்கள் மூடல்! மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!! இந்தியாவில் நாளை மறுநாள் குடியரசு தின விழா நடைபெற இருக்கிறது. தலைநகர் புதுடெல்லியில் குடியரசு தின விழாயையொட்டி முப்படைகளின் அணிவகுப்பு உள்பட சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் டெல்லி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்புப்படை வீரர்கள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் மட்டும் சுமார் 27ஆயிரம் போலீசார் … Read more

குடியரசு தின விழாவில் பங்கேற்க இவர்களுக்கு அனுமதி கிடையாது!

குடியரசு தின விழாவில் பங்கேற்க இவர்களுக்கு அனுமதி கிடையாது!

குடியரசு தின விழாவில் பங்கேற்க இவர்களுக்கு அனுமதி கிடையாது! உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவிலும் கொரோனாவின் பரவலால்  பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதுபோல் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்றின் பரவலும் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. எனவே இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் தொற்றை கட்டுப்படுத்த … Read more

ஒமிக்ரானின் புதிய மாறுபாடு! கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

ஒமிக்ரானின் புதிய மாறுபாடு! கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

ஒமிக்ரானின் புதிய மாறுபாடு! கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்! கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் முதன்முறையாக கண்டறியப்பட்டது கொரோனா வைரஸ். அதன் பிறகு இந்த கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் குறுகிய காலத்திலேயே உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளுக்கும் பரவி பலகட்ட உருமாற்றம் பெற்று மிக வீரியமுடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் முதன்முதலாக இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா … Read more

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கொரோனா! நடைபெறுமா பட்ஜெட் கூட்டத்தொடர்?

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கொரோனா! நடைபெறுமா பட்ஜெட் கூட்டத்தொடர்?

நாடாளுமன்ற பணியாளர்கள், 175 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், அனைத்து அரசு, சட்ட பணிகளும் கடும் கட்டுப்பாடுகளோடு செயல்பட்டு வருகிறது. அதேபோல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், அங்கு பணியாற்றும் அனைவருக்கும் கொரோனா கண்டறியும் பரிசோதனை சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. கொரோனா பரிசோதனைகளின் முடிவுகள் வெளிவந்த நிலையில், 875 … Read more

மகாராஷ்டிரத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு!

மகாராஷ்டிரத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு!

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் எதிரொலியாக மகாராஷ்டிரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கி உள்ளதால் பள்ளிகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மழலையர் பள்ளிகளும், 1ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளும் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரத்தில், கொரனோ பரவல் அதிகரித்த போது அதை தடுக்கும் நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. மும்பை உட்பட்ட மாநிலத்தின் பல பகுதிகளில், கொரனோ பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் திங்கள் முதல் பள்ளிகள் … Read more

ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவு.. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவு.. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

பனிப் பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் பனிப்பொழிவு முன்பைவிட அதிகரித்து வருகிறது. இந்த காலநிலை மாற்றம் காரணமாக சுற்றுலா சென்று வரும் பயணிகள் மகிழ்ச்சி அடைகின்றனர். புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குல்மார்க் பகுதியில், பனிப் பொழிவில் நனைந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர். பனிப் பொழிவு மற்றும் மழை காரணமாக மலைகளின் அரசியான மூசோரியில் எங்கும் பனி சூழ்ந்தது. இதனிடையே ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பணி சூழ்ந்ததால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ரஜோரி, பூஞ்ச், … Read more