மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? அப்போ இந்த மேஜிக் ஆயில் ட்ரை பண்ணி பாருங்க!

Photo of author

By Divya

மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? அப்போ இந்த மேஜிக் ஆயில் ட்ரை பண்ணி பாருங்க!

கடந்த காலங்களில பெரியவர்களுக்கு மட்டும் இருந்த மூட்டு வலி பிரச்சனை தற்பொழுது இளம் வயதினர், சிறுவர்கள் என்று அனைவருக்கும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு மோசமான வாழ்க்கை முறை முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. மூட்டுகளில் [அடிபடுதல், ஜவ்வு தேய்மானம் ஆகுதல் போன்றவற்றாலும் மூட்டு வலி ஏற்படுகிறது.

தேவையான பொருட்கள்:-

*வேப்ப எண்ணெய்

*தேங்காய் எண்ணெய்

*முடக்கத்தான் கீரை

*சூடம்

*மஞ்சள்

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், 3 தேக்கரண்டி வேப்ப எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்தவும். பின்னர் அதில் 5 முடக்கத்தான் கீரை, சிட்டிகை அளவு மஞ்சள் மற்றும் 2 சூடம் சேர்த்து கரைத்து எண்ணெய் சூடேறியதும் அடுப்பை அணைக்கவும்.

அடுத்து மூட்டு பகுதியை வெந்நீர் கொண்டு சுத்தம் செய்து தயார் செய்து வைத்துள்ள எண்ணெயை தேவையான அளவு எடுத்து மூட்டு பகுதிகளில் சேர்த்து மஜாஜ் செய்து கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் மூட்டு வலி பாதிப்பு சில நாட்களில் குணமாகும்.