வீட்டில் பதுங்கி உங்களைப் படுத்தி எடுக்கும் எலி தொல்லைக்கு நிமிடத்தில் தீர்வு வேண்டுமா?

0
47
#image_title

வீட்டில் பதுங்கி உங்களைப் படுத்தி எடுக்கும் எலி தொல்லைக்கு நிமிடத்தில் தீர்வு வேண்டுமா?

நம் வீட்டில் ஒரு முறை எலி புகுந்து விட்டால் அதனை வெளியேற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. இவ்வாறு உணவு பொருட்களை உண்டு நமக்கு அதிகளவு பயத்தை காட்டி வரும் எலிகளை வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து எளிதில் விரட்டி விட முடியும். இதனால் வீட்டில் எப்பொழுதும் எலி தொல்லை இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும்.

தீர்வு 1:

புதினா வாசனை எலிகளுக்கு அறவே பிடிக்காது. இந்த புதினாவின் சாறு அல்லது எண்ணெயை வீட்டில் எலி நடமாட்டம் இருக்கும் இடத்தில் தெளித்தால் அதன் தொல்லை நீங்கும்.

தீர்வு 2:

வெங்காயத்தில் இருந்து வரும் மணத்தை எலிகள் விரும்புவதில்லை. இந்த வெங்காயத்தை இரண்டாக நறுக்கி எலி நடமாட்டம் இருக்கும் இடத்தில் வைப்பதன் மூலம் உரியத் தீர்வு கிடைக்கும்.

தீர்வு 3:

மிளகை பொடி செய்து எலி நடமாட்டம் இருக்கும் இடத்தில் தூவி விட்டால் அதன் தொல்லை அடியோடு நீங்கும்.

தீர்வு 4:

உருளைக்கிழங்கில் தயாரித்த பொடியை எலி நடமாட்டம் இருக்கும் இடத்தில் தூவி விட்டால் அந்த வாசனைக்கு எலிகள் வராது.

தீர்வு 5:

பூண்டு பல் சிறிதளவு எடுத்து இடித்து தண்ணீரில் கலந்து எலி நடமாட்டம் இருக்கும் இடத்தில் ஸ்ப்ரே செய்து விடலாம்.

தீர்வு 6:

பிரியாணி இலையில் இருந்து வரும் வாசனை எலிகளுக்கு அறவே பிடிக்காது. இந்த பிரியாணி இலையை எலி நடமாட்டம் இருக்கும் இடத்தில் வைத்தால் அதன் தொல்லை இருக்காது.

தீர்வு 7:

அந்துருண்டைகளை எலி நடமாட்டம் இருக்கும் இடத்தில் வைத்தால் அந்த வாசனைக்கு எலி வராது.

தீர்வு 8:

சிறிதளவு தண்ணீரில் கொஞ்சம் விளக்கெண்ணெய் கலந்து எலி நடமாட்டம் இருக்கும் இடங்களில் ஸ்ப்ரே செய்து விடலாம்.

தீர்வு 9:

அம்மோனியா பவுடரில் இருந்து வரும் வாசனை எலிகளுக்கு அறவே பிடிக்காது. இந்த அம்மோனியா பவுடரை எலி நடமாட்டம் இருக்கும் இடத்தில் ஒரு கிண்ணத்தில் கொட்டி வைத்தால் அதில் இருந்து வரும் வாசனைக்கு எலிகள் தெறித்தோடி விடும்.

தீர்வு 10:

வர மிளகாய் தூள், கோதுமை மாவு, வாஷிங் லிக்விட், வினிகர் உள்ளிட்டவற்றை கலந்து சிறு உருண்டைகளாக பிடித்து எலி நடமாட்டம் இருக்கும் இடங்களில் வைத்து தீர்வு காணலாம்.