உங்கள் வீட்டிற்கு வந்த உறவினர்களிடம், விருந்தினர்களிடம்.. சொல்ல மற்றும் காண்பிக்கக் கூடாதவை!!

0
28
#image_title

உங்கள் வீட்டிற்கு வந்த உறவினர்களிடம், விருந்தினர்களிடம்.. சொல்ல மற்றும் காண்பிக்கக் கூடாதவை!!

காண்பிக்கக் கூடாதவை:-

1.பூஜை அறை / பூஜை சாமான்கள்

2.தாலி செயின்

3.உங்கள் நகைகள்

4.உங்கள் புடவைகள் / துணிமணிகள்

5.பணப் பெட்டி

(ஏதாவது வாங்க வேண்டி இருக்கும் போது அவர்கள் முன் பணப் பெட்டியில் இருந்து பணம் எடுக்கக் கூடாது)

சொல்லக் கூடாதவை:-

1.வருமானம்

2.சேமிப்பு பற்றிய தகவல்

3.நகை, பணம், சீட்டு சேமிப்பு பற்றிய தகவல்

4.பிள்ளைகளின் மதிப்பெண்

5.கணவன், மனைவியின் மனைவி அன்பு, அன்யோன்யம் குறித்து

ஏற்கனவே காட்டிட்டோமே, ஏற்கனவே சொல்லிட்டோமே என்பவர்களும், காட்ட வேண்டிய அல்லது சொல்ல வேண்டிய சூழ்நிலை வந்தால் என்ன செய்வது என்று நினைப்பவர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்வது நல்லது.

இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அதேபோல் நம் வீட்டை எந்த ஒரு எதிர்மறை எண்ணங்களும் அண்டாமல் இருக்கும்.

நாட்டை ஆளும் அரசனுக்கு கோட்டைச்சுவர் தான் பாதுகாப்பு என்பது போல வீட்டை ஆளும் நமக்கு வீட்டு தலைவாசல் தான் பாதுகாப்பு.

100 சதுர அடியில் இருந்தாலும் 10,000 சதுர அடியில் இருந்தாலும் அந்த வீட்டுக்கு பாதுகாப்பு நிலைவாசல் கதவு தானே…

அப்பேற்பட்ட நிலைவாசலை நம்மில் பலர் சரியாக கவனித்துக் கொள்வதில்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் காலை 6 முதல் 7 மணிக்குள் நிலை வாசலுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து 2 சாமந்தி பூவாவது வாசலின் இரு புறத்திலும் வைக்கவும்.

முடித்தவர்கள் வாசலில் ஓர் அகல் விளக்கு ஏற்றி 2 ஊதுபத்தி வைக்கவும். பன்னீர் பச்சைக் கற்பூரம் சேர்த்து மஞ்சள் குழப்பி வைக்கவும். குல தெய்வமும் மற்ற தெய்வங்களும் வரும் வழியை இப்படி தான் வைக்க வேண்டும்.

தினமும் வெளியில் சென்று வந்தவுடன் நிலை வாசலின் மேற்பகுதியை தொட்டு நல்ல படியாக வீடு வந்து சேர்வதற்கு நன்றி சொல்லவும்.

தினமும் தூங்கி எழுந்தவுடன் கதவு திறக்கும் போது நிம்மதியான உறக்கத்தைக் கொடுத்து பாதுகாப்பை இருந்ததற்கு நன்றி என்று சொல்லிப்பாருங்கள். உங்கள் வாழ்வில் ஏற்படும் முன்னேற்றத்தை கண் கூடாக பார்க்க முடியும். அதேபோல் நம் வீட்டை எந்த ஒரு எதிர்மறை எண்ணங்களும் அண்டாமல் இருக்கும்.