ஆட்சியின் சாதனை அனைவரையும் பிரமிப்படைய வைக்கிறது! எப்படி இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள்!

The achievement of the regime amazes everyone! How does everything go like this!

ஆட்சியின் சாதனை அனைவரையும் பிரமிப்படைய வைக்கிறது! எப்படி இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள்! பெங்களூருவில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாரதிய ஜனதா அரசு எந்தவித உதவியையும் செய்து கொடுக்கவில்லை என்றும் மக்கள் வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். ஊரடங்கு காரணமாக மக்களால் எந்த வேலைக்கும் செல்ல முடியாமலும், கையில் பணமில்லாமல் என்ன செய்வதென்று தெரியாமலும் திகைத்து நிற்கின்றனர். நான் முதல் … Read more

நாட்டில் வெகுவாக குறைந்த தினசரி நோய் பாதிப்பு!

நாட்டில் வெகுவாக குறைந்த தினசரி நோய் பாதிப்பு!

நாட்டில் நோய் தொற்று பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்து 166 பேருக்கு நோய் தற்போது உறுதி செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. நாடு முழுவதும் ஒரே நாளில் 437 பேருக்கு நோய் தொற்றுக்கு பலியாகியிருக்கிறார்கள், இதன் மூலமாக நோய் தொற்று பரவாது இதுவரையில் பலியானவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 32 ஆயிரத்து 209 ஆக அதிகரித்திருக்கிறது. … Read more

சார்பட்டா பரம்பரை விவகாரம்! இயக்குனர் பா ரஞ்சித்திற்க்கு நோட்டீஸ் அனுப்பிய அதிமுக!

சார்பட்டா பரம்பரை விவகாரம்! இயக்குனர் பா ரஞ்சித்திற்க்கு நோட்டீஸ் அனுப்பிய அதிமுக!

சார்பட்டா பரம்பரை திரைப்படம் திமுகவின் புகழ்பாடும் திரைப்படமாக இருக்கிறது என பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக எமர்ஜென்சியின் காரணமாக தான் திமுக ஆட்சிகவிழ்க்கப்பட்டதாக வரும் கதைக்கு பலரும் தங்களுடைய விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் குத்துச் சண்டையை மையமாக கொண்டு சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படத்தின் காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கிறது என்ற காரணத்தால், படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இருந்தாலும் எப்போதும்போல உண்மை கதை என்று சொல்லி பா ரஞ்சித்திற்குத் … Read more

சிலிண்டர் விலை உயர்வு! டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்!

சிலிண்டர் விலை உயர்வு! டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 25 அதிகரிக்கப்பட்டு இருக்கிறது இதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து இருக்கின்றார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறும் சமயத்தில் டீசல் மற்றும் பெட்ரோல் அதோடு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிப்பது வழக்கம். அதனடிப்படையில் சென்ற பிப்ரவரி மாதத்திலிருந்து தற்போது வரையில் சிலிண்டர் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. சென்ற வருடம் டிசம்பர் மாதம் அளவில் 610 ஆக இருந்த சமையல் … Read more

. வேலுமணியை தொடர்ந்து அடுத்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கும் முன்னாள் அமைச்சர்?

. வேலுமணியை தொடர்ந்து அடுத்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கும் முன்னாள் அமைச்சர்?

முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மீதான அறப்போர் இயக்கத்தினரின் புகார்களின் அடிப்படையில் சென்ற ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி அவரைக் குறிவைத்து 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை செய்தார்கள். அதோடு அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில், மற்றொரு முன்னாள் அமைச்சரான கே சி வீரமணி மீது அடுத்தகட்ட புகாரை தெரிவித்திருக்கிறது. இந்த அரப்போர் இயக்கம் முன்னாள் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே சி வீரமணி தன்னுடைய வருமானத்திற்கு அதிகமாக … Read more

டீசல் விலை குறைப்பு? சட்டசபையில் நிதியமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

டீசல் விலை குறைப்பு? சட்டசபையில் நிதியமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக பட்ஜெட் தாக்கலின் விவாதம் நேற்றைய தினம் சட்டப் பேரவையில் நடந்தது இதில் அதிமுக மற்றும் திமுக சட்ட சபை உறுப்பினர்களிடையே தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது தொடர்பாக காரசாரமான விவாதம் நடைபெற்று வந்தது. அதிலும் குறிப்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தெரிவித்து இருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த நிலையில் இன்றைய தினம் ஆரம்பமான இரண்டாவது நாள் … Read more

டிஜிட்டல் பட்ஜெட்! திமுகவிற்கு பாராட்டுப் பத்திரம் வாசித்த அதிமுக எம்எல்ஏ!

டிஜிட்டல் பட்ஜெட்! திமுகவிற்கு பாராட்டுப் பத்திரம் வாசித்த அதிமுக எம்எல்ஏ!

தமிழகத்தில் எப்பொழுதும் ஏப்ரல் மாதம்தான் பட்ஜெட் தாக்கல் செய்வார்கள் ஆனால் கடந்த சில வருடங்களாக பிப்ரவரி மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதோடு முன்பு காகிதங்களுடன் கூடிய பட்ஜெட்தான் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும்.அதனை மாற்றும் விதத்தில் இந்த ஆண்டு தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக காகித டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. பட்ஜெட் குறித்த விவரங்கள் அந்தந்த சட்டசபை உறுப்பினர்களின் முன்னால் வைக்கப்பட்டிருக்கும் கணினியில் ஒளிபரப்பப்படும் அதனை அனைவரும் காணலாம் என்று சொல்லப்படுகிறது. … Read more

தொண்டர்கள் விருப்பம் தான் என் சந்தோஷம்! சசிகலா பளிச்!

தொண்டர்கள் விருப்பம் தான் என் சந்தோஷம்! சசிகலா பளிச்!

சசிகலா நாள்தோறும் தொண்டர்களுடன் தொலைபேசியில் உரையாடி வருகின்றார் என்று சொல்லப்படுகிறது. அவர் உரையாற்றிய ஆடியோ பதிவுகளில் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி வருகின்றது.அந்த விதத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த ரூபம் வேலன் என்ற தொண்டரிடம் சசிகலா உரையாற்றியிருக்கிறார். அதில் உங்களுடைய பிறந்த நாளில் உங்களை சந்திக்க நினைத்தோம் முடியவில்லை அம்மா என்று தெரிவித்திருக்கிறார். அவருக்கு சசிகலா தற்சமயம் நோய் தொற்று காலம் என்பதால் உங்களுடைய பகுதியிலேயே ஏதாவது உதவி செய்யுங்கள், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட … Read more

ஸ்டெர்லைட் ஆதரவாக போராட்டம் நடத்திய பொதுமக்கள்! அதிரடி உத்தரவை போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!

ஸ்டெர்லைட் ஆதரவாக போராட்டம் நடத்திய பொதுமக்கள்! அதிரடி உத்தரவை போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!

ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்ச்சியாக ஆக்சிஜன் தயாரிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துணைத்தலைவர் சுமதி, புதியம்புதுர் ஊரைச் சேர்ந்த கதிரேசன், செந்தில்குமார் உட்பட பலர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்கள். தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலை பொது மக்கள் போராட்டத்தினால் கடந்த 2018 ஆம் வருடத்தில் மூடப்பட்டது. … Read more

அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அறிவுரை வழங்கிய சிறப்பு நீதிமன்றம்!

அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அறிவுரை வழங்கிய சிறப்பு நீதிமன்றம்!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக சென்ற ஆட்சிக்காலத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்பப் பெறுவதற்கு சென்னை உயர்நீதிமன்ற ஒப்புதலை வாங்குமாறு தமிழக அரசுக்கு சிறப்பு நீதிமன்றம் அறிவுரை வழங்கி இருக்கிறது. சென்ற அதிமுக ஆட்சி காலத்தில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தொடர்பாகவும், மக்களின் மனநிலையை தொடர்பாகவும், வாக்கி டாக்கி கொள்முதல் விவகாரத்தில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார் தொடர்பாகவும், திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக இருவரின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் விதத்தில் … Read more