“நொச்சி + முடக்கத்தான்”.. இப்படி பயன்படுத்தினால் மூட்டு வலி வேரோடு நீங்கும்!

0
273
#image_title

“நொச்சி + முடக்கத்தான்”.. இப்படி பயன்படுத்தினால் மூட்டு வலி வேரோடு நீங்கும்!

மூட்டு வலியை குணமாக்குவது எளிதான காரியம் அல்ல. மூட்டு பகுதிகளை சுற்றி வீக்கம், ஜவ்வு தேய்மானம் ஆகியவையால் அதிக வலி ஏற்படுகிறது.

வயதானால் மட்டும் அல்ல தற்பொழுது உள்ள சூழலில் சிறுவர், சிறுமிக்கு கூட வரும் ஒரு பாதிப்பாக மூட்டு வலி உருவெடுத்து விட்டது .

இந்த பாதிப்பை குணமாக்கும் வழிகள் இதோ…

தேவையான பொருட்கள்:-

*விளக்கெண்ணெய்
*முடக்கத்தான்
*நொச்சி இலை

செய்முறை…

அடுப்பில் கடாய் வைத்து சிறிது விளக்கெண்ணெய் ஊற்றவும். அடுத்து அதில் 1 கைப்பிடி அளவு முடக்கத்தான் கீரை மற்றும் 1 கைப்பிடி அளவு நொச்சி இலை சேர்த்து வதக்கி எடுக்கவும்.

இதை ஒரு காட்டன் துணியில் போட்டு மூட்டுகளில் வலி இருக்கும் இடத்தில் அழுத்தம் கொடுக்கவும். இவ்வாறு செய்தால் மூட்டுகளில் உள்ள வலி, வீக்கம் குறையும்.

தேவையான பொருட்கள்:-

*எள்
*தண்ணீர்

செய்முறை…

ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் வெள்ளை அல்லது கருப்பு எள் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற விடவும்.

மறுநாள் காலையில் இந்த தண்ணீரை குடித்தால் மூட்டு வலி முழுமையாக நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

*சுக்கு
*மஞ்சள்

ஒரு துண்டு சுக்கு மற்றும் மஞ்சளை இடித்து பொடியாக்கி தண்ணீர் கலந்து குழப்பி மூட்டுகளில் வலி உள்ள இடத்தில் தடவினால் அவை விரைவில் குணமாகும்.

Previous articleசகல செல்வங்களும் கிடைக்க பஞ்சமி திதி அன்று நீங்கள் ஏற்ற வேண்டிய தீபம்!
Next articleவறண்ட மலத்தை வெளியேற்ற உதவும் பாட்டி வைத்தியம்..!