மூலத்தை வேரோடு அறுத்து எறிய உதவும் “வெங்காயம் + வெந்தயம்”! இதை எவ்வாறு பயன்படுத்துவது!

Photo of author

By Divya

மூலத்தை வேரோடு அறுத்து எறிய உதவும் “வெங்காயம் + வெந்தயம்”! இதை எவ்வாறு பயன்படுத்துவது!

நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்பால் உருவாகும் மூல நோய்க்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நிரந்தர தீர்வு காணலாம்.

தேவையான பொருட்கள்:-

1)சின்ன வெங்காயம்
2)வெந்தயம்
3)தேன்
4)தண்ணீர்

செய்முறை:-

முதலில் 3 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/4 தேக்கரண்டி வெந்தயம் போட்டு மிதமான தீயில் வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றவும். அதன் பின்னர் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்க்கவும்.

அதேபோல் வறுத்து பொடியாக்கி வைத்துள்ள வெந்தயத் தூளை போட்டு மிதமான தீயில் காய்ச்சவும்.

இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் மூல நோய்க்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

மற்றொரு தீர்வு

தேவையான பொருட்கள்:-

*நாயுருவி விதை
*மஞ்சள் தூள்

செய்முறை:-

தேவையான அளவு நாயுருவி விதை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

இந்த பொடியில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பேஸ்டாக்கி கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை மூலத்தின் மேல் பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும்.