வெறிச்சோடிய சிட்னி மைதானம்

வெறிச்சோடிய சிட்னி மைதானம்

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்றுவருகிறது.. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதி ஏற்பட்டுள்ளது. தற்போது வரை ஏறக்குறைய 5000 ஆயிரம் உயிர்களை காவு வாங்கியுள்ள இந்த வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. மேலும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டத்துக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படாததால் மைதானம் வெறிச்சோடி … Read more

உலகையே பயத்தில் கும்பிடு போட வைத்த கொரோனா பீதி!

Modi Tweets to People About Corona Virus Awareness

சீனாவின் பல மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் தொற்று இத்தாலி தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்த நோயை குணப்படுத்த பல நாடுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தாலும் முழுமையாக குணப்படுத்த முடியவில்லை என்பது அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரஸ் இருமல் தும்மல் கைகுலுக்குவது தொடுவது போன்ற நேரடி தொடர்புகள் மூலமாகவே அதிகம் பரவுகிறது. இந்த நோய் தொற்று இந்தியாவிலும் பரவி … Read more

இத்தாலியில் ஆயிரம் உயிர்களை குடித்துள்ள கரோனா

இத்தாலியில் ஆயிரம் உயிர்களை குடித்துள்ள கரோனா

இத்தாலியில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் கரோனா பாதிப்புக்கு 189 பேர் மரணம் அடைந்த நிலையில், வைரஸ் பரவத் தொடங்கி இரண்டு வாரத்தில் கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 16 ஆக உயர்ந்துள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் ஆயிரம் உயிர்களை காவு வாங்கியுள்ள கரோனா உலகில் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது..

ஐபிஎல்-க்கு ஆப்பு வைத்த கொரோனா – மத்திய அரசு பிறப்பித்த அவசர உத்தரவு!

ஐபிஎல்-க்கு ஆப்பு வைத்த கொரோனா - மத்திய அரசு பிறப்பித்த அவசர உத்தரவு!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரசால் இதுவரை 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தொற்றால் பலியானவர் எண்ணிக்கை 4500 தாண்டிவிட்டது. சீனாவில் பரவத் தொடங்கிய இந்த நோய்க்கிருமி தற்போது வரை 114 நாடுகளில் பரவி அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இதில் இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அபாயகரமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. … Read more

பிரதமர் மனைவிக்கும் கொரோனா

பிரதமர் மனைவிக்கும் கொரோனா

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பிய ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோஃபிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அதிபரும் அவரது மனைவி சோஃபியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதே போல் இத்தாலி கால்பந்து வீரரான டேனியல் ருகானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தனிமைப் படுத்தப்பட்டு மருத்துவர்கள் … Read more

கொரோனா வைரஸ் குறித்து பொது மக்கள் அச்சமடைய வேண்டாம் பிரதமர் மோடி வேண்டுகோள்

Modi Tweets to People About Corona Virus Awareness

கொரோனா வைரஸ் குறித்து பொது மக்கள் அச்சமடைய வேண்டாம் பிரதமர் மோடி வேண்டுகோள் சமீபத்தில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகத்தையே அச்சுறுத்தி கொண்டிருந்தது. ஆரம்பத்தில் இந்தியாவில் அதன் பாதிப்பு இல்லை என்ற ஆறுதலில் இருந்தாலும் தற்போது இந்தியாவிலும் பரவி விட்டது என்ற தகவல் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கேரளா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் 73 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் … Read more

கொரோனாவிற்கு இந்தியாவில் முதல் பலி! ரத்த பரிசோதனையில் உறுதி: இந்திய அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு

Corona First Death in India-News4 Tamil Latest National News Today

கொரோனாவிற்கு இந்தியாவில் முதல் பலி! ரத்த பரிசோதனையில் உறுதி: இந்திய அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு சமீபத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தகாக கூறப்பட்டது. ஆனால் முறையான பரிசோதனை எதுவும் நடத்தபடாமல் இருந்ததால் அதனை கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட மரணம் என்பதை தெரிவிக்க மறுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில் மரணம் அடைந்த கர்நாடகத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர், கொரோனா வைரஸ் தாக்குதலால் தான் பலியானார் என்று … Read more

புதிய படத்திற்காக எடையைக் குறைத்து ஸ்லிம்மான மீனா : ஆச்சரியத்தில் புருவம் உயர்த்திய ரஜினி

புதிய படத்திற்காக எடையைக் குறைத்து ஸ்லிம்மான மீனா : ஆச்சரியத்தில் புருவம் உயர்த்திய ரஜினி

கடந்த பொங்கலுக்கு முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் ரஜினி புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்திற்கு பிரபல நடிகைகளான குஷ்பூ மீனா கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ரஜினியுடன் இணைந்து நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் மீனாவும் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு அண்ணாத்த என்று பெயர் சூட்டியுள்ளதாக படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்து இருந்தனர். இந்த … Read more

சென்னை மாநகரப் பேருந்துகள் நேரத்தை அறிய ‘சலோ’ செயலி

சென்னை மாநகரப் பேருந்துகள் நேரத்தை அறிய 'சலோ' செயலி

சென்னை மாநகரப் பேருந்துகள் நேரத்தை அறிய ‘சலோ’ செயலி சென்னை மாநகராட்சியில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் போக்குவரத்து முறையாக பேருந்து போக்குவரத்தே உள்ளது. பல இலட்சக்கணக்கான மக்கள் தினம் தினம் சென்னை மாநகரப் போக்குவரத்தை பயன்படுத்தி தங்கள் பயணத்தை மேற்கொள்கின்றனர். ஆனால் சென்னை மாநகராட்சியில் பெருகி உள்ள மக்கள் தொகையால் மாநகரப் பேருந்துகள் சரியான நேரத்தில் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு மக்களிடையே உள்ளது. மேலும் வெளி ஊர்களில் இருந்து வரும் மக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கான … Read more

சமூக வலைதளத்தை கலக்கிய விஸ்வாசம் ! அஜீத் ரசிகர்கள் உற்சாகம்

சமூக வலைதளத்தை கலக்கிய விஸ்வாசம் ! அஜீத் ரசிகர்கள் உற்சாகம்

கடந்த 2019ம் ஆண்டு அஜீத் நடித்து பொங்கல் ரிலீஸாக வெளியானது விஸ்வாசம் திரைப்படம். இந்த படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வசூல் சாதனை புரிந்தது. விஸ்வாசம் திரைப்படம் நடிகர் அஜீத் மற்றும் இயக்குனர் சிவாவிற்கும் நல்ல பெயரை வாங்கித் தந்தது. இத்திரைப்படம் அஜீத் நடித்த படங்களில் குறிப்பிடத்தக்கது என்று சினிமா விமர்சகர்கள் கூறிவந்தனர். இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனம் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘உலகிலேயே டுவிட்டரில் 2019ம் ஆண்டு அதிகம் இடம் … Read more