தோல் அலர்ஜி இருப்பவர்கள் இதை பூசி குளித்தால் 100% பலன் கிடைக்கும்!
தோல் தொடர்பான பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும்.
தேவையான பொருட்கள்:-
1)குப்பைமேனி பொடி
2)துத்தி கீரை பொடி
3)வேப்பிலை பொடி
4)சந்தனத் தூள்
5)தேங்காய் எண்ணெய்
6)வேப்பம் பட்டை தூள்
7)கற்றாழை ஜெல்
இவை அனைத்தையும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அனைத்தையும் சம அளவு வாங்கிக் கொள்ளவும்.
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் குப்பைமேனி பொடி, துத்தி கீரை பொடி சேர்த்து கலந்து விடவும். அதன் பிறகு சந்தனத் தூள் மற்றும் வேப்பிலை பொடி சேர்க்கவும். இவை அனைத்தையும் ஒருமுறை கலந்த பிறகு கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
இறுதியாக வேப்பம் பட்டை தூள் சேர்த்து குழைத்துக் கொள்ளவும். இதை மேனி முழுவதும் பூசி குளித்து வந்தால் தேமல், அலர்ஜி, மங்கு, படர் தாமரை, அரிப்பு, கொப்பளம், மருக்கள் அனைத்தும் நீங்கும்.
மற்றொரு தீர்வு:-
1)வேப்பிலை
2)ஆலிவ் ஆயில்
ஒரு கப் வேப்பிலையை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கப் தண்ணீர் ஊற்றி அரைத்த வேப்பிலை விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.
அதன் பின்னர் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு எடுத்துக் கொள்ளவும். வேப்பிலை நீரை நன்கு ஆறவிட்டு குளிக்கும் பொழுது உடலுக்கு பயன்படுத்தினால் தோல் தொடர்பான பாதிப்பு முழுமையாக நீங்கும்.