Kerala Recipe: கேரளா ஸ்டைல் மசால் வடை ரெசிபி!

0
108
#image_title

Kerala Recipe: கேரளா ஸ்டைல் மசால் வடை ரெசிபி!

கேரளா ஸ்டைலில் வடை செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)வடை பருப்பு – 1/2 கப்
2)நறுக்கிய வெங்காயம் – 1
3)பச்சை மிளகாய் – 2(நறுக்கியது)
4)கறிவேப்பிலை – 1 கொத்து
5)கொத்தமல்லி இலை(நறுக்கியது) – சிறிதளவு
6)இஞ்சி(பொடியாக நறுக்கியது) – 1 தேக்கரண்டி
7)உப்பு – தேவையான அளவு
8)தேங்காய் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 1/2 கப் வடை பருப்பு போட்டு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரத்திற்கு ஊற விடவும்.

பருப்பு நன்கு ஊறி வந்ததும் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கலாம். பருப்பை அரைத்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்.

அதன் பின்னர் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கொத்மல்லி மற்றும் பச்சை மிளகாய் போட்டு பிசையவும்.

பிறகு கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கலந்து விடவும். கலந்து வைத்துள்ள பருப்பு மாவை சிறு சிறு உருண்டிகளாக உருட்டி வடை போல் தட்டி வைத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பிறகு தட்டி வைத்துள்ள வடையை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக வரும் வரை வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். இந்த வடை கமகம வாசனையுடன் மிகவும் சுவையாக இருக்கும்.