பைல்ஸ் நோய் இந்த ஜென்மத்தில் வராது… இவ்வாறு செய்தால்..!

Photo of author

By Divya

பைல்ஸ் நோய் இந்த ஜென்மத்தில் வராது… இவ்வாறு செய்தால்..!

மலச்சிக்கல், குடல் பிரச்சனை, உடல் சூடு போன்ற காரணங்களால் உருவாகும் பைல்ஸ் நோயை இயற்கை முறையில் குணப்படுத்த நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தீர்வுகளில் ஏதேனும் ஒன்றை பின்பற்றி வரலாம்.

தேவையான பொருட்கள்…

*வாழைப்பழம்
*ஓமம்

ஒரு வாழைப்பழத்தை தோலுடன் இரண்டாக நறுக்கி அதில் ஓமம் சேர்த்து ஒரு இரவு ஊற விடவும். மறுநாள் காலையில் இந்த வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் பைல்ஸ் நோய் குணமாகும்.

தேவையான பொருட்கள்…

*கீழா நெல்லி பவுடர்
*கடுக்காய் பவுடர்

ஒரு கிண்ணத்தில் கீழா நெல்லி மற்றும் கடுக்காய் பவுடர் சம அளவு எடுத்து தண்ணீர் சேர்த்து உருண்டைகளாக உருட்டி காலை, மாலை உணவிற்கு முன் சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.

தேவையான பொருட்கள்…

*வாழைப்பூ

ஒரு கிண்ணம் அளவு வாழைப்பூ எடுத்து சுத்தம் செய்து அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் மூல நோய் குணமாகும்.

தேவையான பொருட்கள்…

*முருங்கை இலை
*துத்தி இலை

இந்த இரண்டு இலைகளையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட்டு வர மூல நோய்க்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்…

*பிடி கருணைக் கிழங்கு

இந்த கருணைக் கிழங்கை வேக வைத்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் அடியோடு நீங்கும்.