ரேஷன் அட்டைதாரர்களுக்கு தொகுப்பு குறைக்க திட்டம்!! வெளியான அதிர்ச்சி தகவல்!!
ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய்,சர்க்கரை போன்ற பொருட்கள் மிகவும் குறைந்த விலையிலும் மற்றும் அரசி இலவசமாகவும் வழங்கப்பட்டது.
இதனால் இந்திய முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர்.
இந்த ரேஷன் அட்டை மூலம் பல சலுகைகளை நாம் பெற முடியம். அந்த வகையில் அரசு தரும் மலிவான பொருட்களை பெற வேண்டும் என்றால் அதற்கு இந்த ரேஷன் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு மலிவான விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றத. மேலும் விலையில்லாத அரிசி வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் இதனை பல ரேஷன் அட்டை தாரர்கள் வாங்குவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்படும் பொருட்களின் அளவை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் கேராளா மாநிலத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வீடுகளில் வாசலில் மலர் துவி பல வகையான உணவுகளை சமைத்து கொண்டாடி வருவார்கள்.
மேலும் அந்த மாநிலத்தில் 14 வகையான உணவு பொருட்கள் வழங்கப்படும்.ஆனால் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணாமாக அந்த பொருட்களின் அளவை குறைக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.